Рет қаралды 5,845
#Partnership 2026ல் 5 முனை போட்டி:
அடித்துச்சொல்லும் அண்ணாமலை
annamalai k. bjp state president dmk alliance aiadmk actor vijay tvk VCK NTK seeman edappadi palanisami M.K.stalin
பாஜ மாநில தலைவர்
அண்ணாமலை தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு
வந்துள்ளார். அவரை வரவேற்கிறேன். உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அரசியல் ஒரு கடல், அரசியலில் ஏற்ற, இறக்கங்களை
அவர் நிச்சயம் சந்திப்பார். துரோகிகளை சந்திப்பார்.
கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நீண்ட காலம் அரசியலில் இருந்தவர்கள். பலமுறை முதல்வராக இருந்தவர்கள். அவர்களைப்போல நீண்ட அரசியல் பயணத்தை விஜய் மேற்கொள்ள வேண்டும். 2026 தேர்தல்தான் என் இலக்கு என்கிறார் விஜய். ஒரு தேர்தலில், எதையும் மாற்றிவிட முடியாது என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
2026 சட்டசபை தேர்தலில்
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., நாம் தமிழர், த.வெ.க. தலைமையில் ஐந்து முனை போட்டி இருக்கும்.
5 கட்சிகளும் வெவ்வேறு அரசியலை முன்னெடுத்து வருகின்றன. வித்தியாசமான விஷயங்களை பேசி வருகின்றன.
தி.மு.க., சரியாக அரசியல் செய்கிறோம்; மீண்டும் ஆட்சியைப்பிடிப்போம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை வீழ்த்தி அ.தி.மு.க ஆட்சியைப்பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். பா.ஜ சார்பில் புது அரசியலை கொண்டு வருவோம் என நாங்கள் சொல்கிறோம். விஜய் நான் ஒரு புதிய வித்தியாசமான அரசியலை கொண்டு வருவேன் என்கிறார். சீமான் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்கிறார்.
எல்லாருமே எதிரும் புதிருமாகத்தான் பேசுகிறோம்.
இப்படி வெவ்வேறு திசையில் பயணிக்கும் ஐந்து கட்சிகளும் ஒன்றுசேருவதற்கு வாய்ப்பில்லை. எல்லா கட்சிகளுக்குமே ஆட்சியைப் பிடிப்பதுதான்
குறிக்கோளாக இருக்கும்.
பாஜவின் மாநில தலைவர் என்ற முறையில் எங்கள் கட்சியை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வருவதுதான் எனதுநோக்கமாக இருக்கும். கூட்டணியிலேயே இருப்போம் என்று சொன்னால் மாநில தலைவராக இருந்து என்ன பிரயோஜனம்? கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் கட்சிக்கு சாதகமாக மாற்றி கட்சியை வலுப்படுத்துவதுதான் மாநில தலைவரின் வேலை.
எனவே, தமிழகத்தில் இன்றைக்கு உள்ள அரசியல் சூழலை பார்க்கும்போது, 2026ம் ஆண்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது எனது உறுதியான கருத்து.
எல்லோரும் ஒன்றியணைய வேண்டும்
என நயினார் நாகேந்திரன் ஆசைப்படுகிறார். அப்படி ஒன்றுபட்டு வந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்ற வாதத்தை சிலர் வைக்கிறார்கள்.
ஆனால் என்னைப்பொறுத்தவரை அப்படி சொல்லி திமுகவை மிகவும் பலம் பொருந்திய கட்சியாக சொல்ல விரும்பவில்லை.
இது சோசியல் மீடியா காலம்.
மக்கள் எல்லா விஷயத்தையும் நன்றாக தெரிந்து புரிந்து வைத்திருக்கிறார்கள்.
எல்லா ஜாதிகளுக்கும் பிரதிநித்துவம் வேண்டும்; எல்லா ஏரியாவுக்கும், எல்லா மாவட்டத்துக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.
ஆகவே, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பொறுத்தவரை தமிழக மக்கள்
சிந்தித்து தெளிவாக ஓட்டு போட போகிறார்கள். 2026ல் தமிழகத்தில்
யார் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் சரி, அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். அதில் சந்தேகம் இல்லை.
பாஜ தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., த.வெ.கவுடன்
பாஜ கூட்டணி வைக்காது என அண்ணாமலை கூறினார்.#annamalai #dmkalliance #actorvijay