Рет қаралды 101,265
ஒரு விலைமகள் பாடும் பாட்டு. அவள் பாடுவது அவனுக்கு மட்டுமே புரிய வேண்டும். மற்றவர்களுக்கு அது கிண்டல் செய்து பாடுவதாகத் தோன்றவேண்டும், என்று அப்பாவிடம் கே.பாலசந்தர் பாட்டுக்கான சூழலை சொல்கிறார்.
இது போன்ற சவாலான சூழல்கள் அப்பாவுக்கு சுலபம், கடகடவென்று வரிகளை சொல்கிறார்.
எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் உட்கார்ந்த இடத்தில் எப்படி அவரால் இப்படி சிந்திக்க முடிந்தது என்பது தான்.