Рет қаралды 4,207
தற்போது 2025 புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் விரைவில் அகவிலைப்படி உயர்வு விஷயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. அகவிலைப்படி 56 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் வரை AICPI குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
2016-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த 7-வது ஊதியக் குழுவின் ஆயுட்காலம் 2025 டிசம்பருடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு பணியாளர்களுக்கான 8-வது ஊதியக் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.