#BREAKING

  Рет қаралды 5,551

Oru Vari Seithigal

Oru Vari Seithigal

Күн бұрын

ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது எனவும், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதற்கு வாழ்த்துக்கள் எனவும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மலிவு விலையில் மருந்துகள் அனைத்தும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் எனபதற்காக மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. சந்தை விலையை விட பாதி்விலைக்கு குறைவான விலையில் இங்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது.
இந்தியா முழுவதும் இது பயனுள்ள திட்டமாக செயல்படுத்தபடுகின்றது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் நாளை மறு தினம் கோவையில் நடைபெறும் விழாவில் நான் பங்கேற்கிறேன். இந்துகளின் ஒற்றுமைக்காக பாலகங்காதார திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை துவங்கி இன்று தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகின்றது. மத்திய கல்விதுறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியதையடுத்து பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தனர்.
ஆனால் அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினால் அரசிடம் இருந்து பதில் இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டு வரப்பட்டதாகவும் தாய் மொழி கல்வியை ஊக்குவிப்பதே தேசிய கல்வி கொள்கை என இன்று கூட மத்திய கல்வி அமைச்சர் டிவிட் போட்டிருக்கின்றார். மேலும் யூ டியூபர் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து பா.ஜ.க கமிட்டி தலைவர் பதில் சொல்வார்.
AI தொழில் நுட்பங்களை ஆக்கப்பூர்வமான முறையில் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
என்ஐஏ அலுவலகம் கோவைக்கு வரவும் வாய்ப்பு இருக்கின்றது. மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் செய்தியாளர் என்கின்றனர். இதை முறைபடுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றது.இதற்காக புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர இருக்கின்றது. இதற்காக பொது மக்கள் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றது.
செய்தியின் தன்மை என்பது பொது விடயங்களுக்கு ஆக்கப்பூர்வமான செய்திகளை எடுத்து செல்வதாக இருக்க வேண்டும் என்றும் யூடியூப், இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தேசத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லும் 69 யூ டியூப் சேனல்களை முடக்கப்பாடு உள்ளது.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதற்கு வாழ்த்துக்கள். அவர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை. ஆனால் மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை. ஊடகங்களில் தான் இது ஊதி பெரிதாக்கப்படுகின்றது. பாஜக மாநாடு நடத்தும் போது கூட அனுமதி கேட்ட போது, இதே போல் தான் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு முறையாக பதிலளித்த பிறகு தான் அனுமதி கொடுத்தனர். இது வழக்கமான நடைமுறை தான்" என பேசினார்

Пікірлер: 2
@SankaranarayananHariharan
@SankaranarayananHariharan Ай бұрын
உண்மைய பேசினால் 10 ஆண்டு சிறை
@vijayagandhi2689
@vijayagandhi2689 Ай бұрын
Moodevi, mundam, thandam pindam
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 914 М.
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,9 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 36 МЛН
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 914 М.