Рет қаралды 1,423
இது சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் ஆறாம் பாகம். முழுத் தொடரில் அப்போஸ்தலர் காலத்திலிருந்து சீர்திருத்த காலம்வரையிலான சபை வரலாற்றை நாம் பார்ப்போம். சபை வரலாற்றை நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகம் சபை வரலாற்றைப்பற்றிய ஒரு முன்னுரை, ஓர் அறிமுகம். இரண்டாம் பாகம் ஆண்டவராகிய இயேசு பரமேறியதிலிருந்து அப்போஸ்தலனாகிய யோவான் மரித்த கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலச் சபை வரலாறு. மூன்றாம் பாகம் கி.பி. 100லிருந்து உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கி.பி 312இல் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான ஆதிச் சபை வரலாறு. அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவம் எப்படிப் பரவியது என்று மூன்றாம் பாகத்தில் பார்த்தோம். நான்காம் பாகத்தில், அப்போஸ்தலர் காலத்துக்குப்பிந்தைய, அதாவது உரோமப் பேரரசன் கான்ஸ்டைன்டீன் கிறிஸ்தவனாகி, தன் பேரரசைத் தீவிரமாகக் கிறிஸ்தவமயமாக்குவதற்கு முந்தைய, கி.பி. 100முதல் 312வரையிலான அதே கால கட்டத்தில், ஆதிச் சபைக்கு நேரிட்ட சித்திரவதையைப் பார்த்தோம். ஐந்தாம் பாகத்தில் கி.பி. 100முதல் 312வரையிலான அதே கால கட்டத்தில் ஆதிக் கிறிஸ்தவர்கள் எதை விசுவாசித்தார்கள் என்றும், தங்கள் விசுவாசத்தை எப்படித் தற்காத்தார்கள் என்றும் நாம் பார்த்தோம். சபை வரலாற்றைப்பற்றிய இந்த ஆறாம் பாகத்திலும் அதே காலகட்டத்தில், அதாவது கி,பி 100முதல் கி.பி 312வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த அம்புரோஸ், அத்தனேசியஸ், அதெனகோரஸ், அகுஸ்தீன், பசில், ஜான் கிறிஸ்சோஸ்டம், அலெக்ஸாந்திரியாவின் கிளெமெந்து, சிரில், சிப்ரியான், கிரகோரி, ஹிலாரி, ஜெரோம், ஐரேனியஸ், ஜஸ்டின், லாக்டான்டியஸ், லியோன், மினுசியஸ் பெலிக்ஸ், ஓரிஜென், தெர்துல்லியன், தியோடோரெட், பெர்னார்ட் போன்ற பல சபைப் பிதாக்களில் குறிப்பிடத்தக்க சிலரையும், அவர்களுடைய நூல்களையும்பற்றிப் பேசப்போகிறோம்.
tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.