Рет қаралды 2,795
கேட்டதையெல்லாம் கொடுப்பதோடு, பல கோடி புண்ணியத்தையும் தேடித்தரும் சுந்தர காண்டத்தை ராமநவமியன்று உச்சரிக்க 10 நிமிடங்கள் போதும்.
கம்பராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் 6 காண்டங்கள் இருக்க, இதில் சுந்தரகாண்டத்திற்க்கு மட்டும் எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? ஏனென்றால், சுந்தரகாண்டத்தில் முழுக்க முழுக்க ஹனுமனின் லீலைகளைப் பற்றித் தான் சொல்லப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் பெரிய திருப்பம் வருவதற்கு காரணமாக இருந்தவர் ஹனுமன் தான். ஹனுமனின் வீர தீர செயல்களை பற்றி கூறுவது தான் சுந்தரகாண்டம். இந்த சுந்தர காண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். நோய் நொடிகள் தீரும். திருமண தடை விலகும். நவகிரக தோஷம், ஏழரை சனி, அஷ்டமசனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்
இதோடு மட்டுமல்லாமல் தினம்தோறும் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யும் போது மன தைரியம் அதிகரிக்கும். மன வலிமை உண்டாகும். நம்முடைய கவலையெல்லாம் மறந்து போகும். அறிவு, ஆற்றல், புகழ், துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதுரியம் இவைகள் அனைத்தும் மேலோங்கி நிற்கும். குறிக்கோளை விரைவாக அடையலாம். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். கடவுளை விரைவாக நெருங்கும் சூழலையை நமக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே சுந்தரகாண்டம்.
இப்படிப்பட்ட பல பெருமைகளைக் கொண்ட சுந்தர காண்டத்தை வாய்மொழியால் சொல்லிவிட முடியாது. சொல்லில் அடங்காத, கணக்கிலடங்காத பலனை கொடுப்பது சுந்தரகாண்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்ம திருப்தியோடு, மனதார எவரொருவர் சுந்தரகாண்டத்தை தினம்தோறும் பாராயணம் செய்கிறாரோ, அவர் நல்ல மனிதனாக வாழும் தகுதியைப் பெற முடியும். சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் தோல்வியே இருக்காது. ஏனென்றால் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன் இதுவரை தோல்வியை சந்தித்தது இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சுந்தரகாண்டத்தை ராமநவமி தினத்தில் காலை வேளையில் எழுந்து, குளித்து, சுத்தமான பின்பு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து அமைதியான சூழ்நிலையில், சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கலாம். ராமநவமி அன்று ராமருக்கு துளசி மாலை சாத்தி, அனுமனுக்கு வெண்ணெயை நைவேத்தியமாக படைத்து, முடிந்தால் வடைமாலை சாத்தி சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வது மிக அற்புதமான பலன்களைத் தரும்.
தினம்தோறும் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யும்போது நெய்வேத்தியம் செய்து வைக்க முடியாதவர்கள் ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து, அதில் இரண்டு கற்கண்டுகளைப் போட்டு நெய்வேதியமாக வைத்துக் கொள்ளலாம். சுந்தர காண்டத்தை பாராயணம் செய்யும் போது அருகில் ஒரு சிறிய பாபையோ அல்லது மன பலகையையோ போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பாராயணம் செய்வதை கேட்பதற்கு நம் வீட்டிற்கு ஹனுமன் கட்டாயம் வருகை தருவார் என்பது ஐதீகம். ஏனென்றால் ராமநாமம் உச்சரிக்கும் இடத்திலெல்லாம் அனுமன் வராமல் இருக்க மாட்டார். சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து பலன் பெற முடியாதவர்கள், இந்தப் பாடலை உச்சரிப்பதன் மூலம் சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்த பலனைப் பெறமுடியும்