" எதிரிகளை சாம்பலாக்கி, வேண்டுதல்களை நிறைவேற்றும் தணிகைமலை திருப்புகழ் பதிகம் !!!

  Рет қаралды 9,044

Sivaya Nama

Sivaya Nama

Күн бұрын

சினத்தவர் முடிக்கும் ... முருகன் அடியார்களை கோபிப்பவர்களது
தலைக்கும்,
பகைத்தவர் குடிக்கும் ... அவர்களைப் பகை செய்தவர்களது
குடும்பத்திற்கும்,
செகுத்தவர் உயிர்க்கும் ... அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும்,
சினமாகச் சிரிப்பவர் தமக்கும் ... அவர்களைக் கண்டு கோபமாகச்
சிரிப்பவர்கட்கும்,
பழிப்பவர் தமக்கும் ... அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,
திருப்புகழ் நெருப்பென்று ... திருப்புகழே நெருப்பாகி (அடியோடு
அழிக்குமென)
அறிவோம்யாம் ... யாம் நன்கு அறிவோம்.
நினைத்தது மளிக்கும் ... (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும்
அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும்,
மனத்தையு முருக்கும் ... (பாடுவோர், கேட்போரின்) மனதையும்
உருக்குவதும்,
பிறவாமல் ... மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம்
நிசிக்கரு வறுக்கும் ... இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை
அறுப்பதும்,
நெருப்பையு மெரிக்கும் ... அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே
எரிப்பதும்,
பொருப்பையு மிடிக்கும் ... மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய,
நிறைப்புகழ் ... எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை
உரைக்குஞ் செயல்தாராய் ... பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.
தனத்தன தனத்தந்
திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன ... (அதே ஒலியுடன்)
பேரி ... பேரிகைகள் முழங்கவும்,
தடுட்டுடு டுடுட்டுண் டென ... (அதே ஒலியுடன்)
துடி முழக்கும் ... உடுக்கைகள் முழங்கவும்,
தளத்துட னடக்கும் ... சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த
கொடுசூரர் சினத்தையும் ... கொடிய சூராதி அசுரர்களின்
கோபத்தையும்,
உடற்சங் கரித்தம லைமுற்றும் ... அறுத்தெறிந்த பிணமலைகள்
யாவையும்,
சிரித்தெரி கொளுத்தும் ... புன்னகை புரிந்தே அதிலெழுந்த
அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய
கதிர்வேலா ... ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே,
தினைக்கிரி குறப்பெண் ... தினைப்பயிர் விளையும் மலைக்
குறவள்ளியை
தனத்தினில் சுகித்து ... மார்புற அணைத்து இன்புற்று,
எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. ... உயர்ந்தோர்
மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.
நன்றி-Kaumaram.com.
நன்றி-எங்கள் குரு டாக்டர் பாலு ஐயர் சார் .

Пікірлер: 9
@skselvam174
@skselvam174 Жыл бұрын
ஆபோகி ராகத்தில் அமைந்த அருமையான திருப்புகழ்
@thanujashiva7328
@thanujashiva7328 Жыл бұрын
முருகா சரணம் திருவடி வணக்கம்🙏
@skselvam174
@skselvam174 Жыл бұрын
சிரிப்பவர்தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பாகும் என்கிறார் தெய்வத்தன்மை வாய்ந்த அருணகிரிநாதர் 🙏🙏🙏
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 Жыл бұрын
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் திருப்புகழ்.
@Shalini-gy8eg
@Shalini-gy8eg 20 күн бұрын
Om murugan thunai Om murugan thunai
@vasudevant4132
@vasudevant4132 2 ай бұрын
Muruga Perumane thunai ❤
@prabaloganathan
@prabaloganathan 2 ай бұрын
Om Muruga kaapatru Appa 🙏🦜🙏
@vasudevant4132
@vasudevant4132 2 ай бұрын
Muruga Peruman ❤ Padam Potri ❤
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 88 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 25 МЛН
Одну кружечку 😂❤️
00:12
Денис Кукояка
Рет қаралды 1,7 МЛН
Amici che ti scrivono solo per i favori😮‍💨
0:32
Virginia La Bella
Рет қаралды 19 М.
Mayura Bandham - Saradha Raaghav
14:01
Saradha Raaghav
Рет қаралды 200 М.
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН