பாடல் வரிகள்: 👇 👇 பல்லவி இன்னும் நீ இருக்கிறாய் அதை நான் பார்க்கிறேன்! இன்னும் நீ வாழ்கிறாய் அதை நான் உணர்கிறேன்! கடல் தீர்ந்து போனாலும் - உன் உடல் தீர்ந்து போகாது! -என் நிழல் நீங்கிப் போனாலும் -உன் எழில் நீங்கிப் போகாது! புவி மறைந்து போனாலும் - உன் புன்னகை மறையாது! - இவ் அண்டமே அழிந்தாலும் - உன் அருள் என்றும் அழியாது! சாயி நிரந்தரம் - சத்ய சாயி நிரந்தரம்! (2) சரணம் 1 கனவிலும் வருகின்றாய் நினைவிலும் தொடர்கின்றாய் நேரிலும் தோன்றுகின்றாய் ஆபத்தைத் தடுக்கின்றாய்! பரிவோடு பார்க்கின்றாய்! பிரார்த்தனை கேட்கின்றாய்! நன்றி எதிர்பாராமல் நல்லதை நடத்துகின்றாய்! நீ இல்லை என்னும் சொல்லை இருள் நம்பலாம்! நீ சென்றாய் என்னும் பொய்யை கலி நம்பலாம்! (இன்னும் நீ இருக்கிறாய் அதை நான் பார்க்கிறேன்!) சரணம் 2 சிலருக்கு மறைவாக சிலருக்கு நிறைவாக அவரவர் வாழ்க்கையிலே நீ இன்றும் வாழ்கின்றாய்! சுயநலம் துளியின்றி சொந்த சுகம் ஏதுமின்றி எதிர் மாயை நீ களைந்தே எதிர்காலம் ஆள்கின்றாய்! விண்ணையே இழக்காமல் மழை வருவதில்லை! தன்னையே இழக்காமல் நீ தெரிவதில்லை! (இன்னும் நீ இருக்கிறாய் அதை நான் பார்க்கிறேன்) கவிஞர் வைரபாரதி✍🏻
@saivijayakumar7188Күн бұрын
சுவாமியின் அன்பை உணர்ந்து நாம் அதை அனுபவித்து அன்பே சுவாமி அன்பை அடைய அன்பு ஒன்றே வழி . அன்பாய் மாறுவதே இறுதி நிலை . சுவாமி அந்த நிலையை அனைவருக்கும் தாருங்கள். அதற்கு எங்களை தகுதியாக்குங்கள்.ஓம் ஸ்ரீ சாய்மாதா🙏🙏🙏
@muthuhariharan5415Күн бұрын
ஸாயிராம் சத்யம் சத்யம் சத்யம் ஶ்ரீ சத்யசாயியே யாவருக்கும் நிரந்தரம். ஶ்ரீ சத்யசாயியே ஆன்ம ஒளி தரும் ஒரே சூரியன். யாா் எப்போது அவரை அறிகிறாா்களோ அப்போது அவா்களுக்கு அந்த கணமே சூரிய உதயம். ஸாயிராம்
@suseelasubramoni31652 күн бұрын
Om jai sai nirantharam❤❤❤🙏🙏🙏
@meghna.s2 күн бұрын
Om Sai Ram ❤🙏🙏
@knsaaimaheswaran99882 күн бұрын
அற்புதமான பாடல் சுவாமியை உணர்ந்தவர் தான் இதை எழுதமுடியும். சுவாமி கருணாமூர்த்தி மஹா பிரபு ❤❤❤