Рет қаралды 1,939
"காதல் சுகமானது! காதலிப்பவர்கள் சுகமானது!" என்கிறதான ரம்யமான மாயை நமக்குள் ரகசியமாய்க் கலந்து கிடக்கிறது!
காதலிப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்!
அது எத்தனை பெரிய அவஸ்தை என்று!
தமிழர் காதலை ஐந்து திணைகளாய்ப் பகுத்ததும் அதற்காக மாய்ந்து மாய்ந்து பாட்டெழுதியதும் நமக்கான காதலையும் காலத்தையும் காட்சியாக்கி விருந்தாக்கும்.
இன்றைய பல திரைப் பாடல்கள் காட்சிக்கு விருந்தாகிறதோ, இல்லையோ....
கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மனதுக்கு நெருக்கமாய் மயிலிறகு தடவிச் செல்கின்றன!
அப்படி ஒரு நெருக்கத்தைத் தரும், முல்லைத் திணையின் காத்திருத்தலைப் பற்றியதான ஒரு பாட்டு....
இசைஞானியின் இசைக் கதகதப்பில்....
இசைஞானியின் கவிதை வரிகளில்...
இசைஞானியுடன் இணைந்த ஜானகியம்மாவின் குரலில்...
நாடோடித் தென்றல்
என்னும் திரைப்படத்தில்... வரும் இந்தப் பாடல்...
இன்றைய இதயத்தைத் தொட்ட பாடலாக!
என்றென்றும் இதயத்தில் இசைஞானியின் பாடல்களுடன்
உங்கள் இசைரசிகன்.
(பாடல்களின் உரிமை இசைஞானிக்கு!
கேட்கும் உரிமை இசை நெஞ்சங்களுக்கு!)