Lyrics கைதாளம் போட்டிடுவோம் கர்த்தர் கரம் பிடித்து நடந்திடுவோம் அவர் நம்மை ஒரு போதும் கைவிடவே மாட்டார் 1..ஜீவிய காலமெல்லாம் - நம்மை ஒருபோதும் மறந்ததில்லை கூடாரத்தை வாதை அணுகாமல் காத்து பொல்லாப்பை விலக்கி விட்டார் -நம்மை செட்டைக்குள் மறைத்து விட்டார் 2.. உற்றார் பெற்றார் யாவரும் -உன்னை வெறுத்து தள்ளிய போதும் உருக்கமாய் அழைத்து மார்போடு அணைத்து உள்ளங்கையில் வரைந்தார் உந்தன் கண்ணீரெல்லாம் துடைத்தார் 3. கவலை படுவதினால் ஒரு முழம் கூட்ட முடிவதில்லை என்னத்தை உடுப்போம் என்னத்தை குடிப்போம் கவலையே உனக்கு வேண்டாம் அதை கர்த்தரே பார்த்துக் கொள்வார் 4. மேசியாவின் வருகை - வெகு சீக்கிரம் நெருங்கிடுதே ஆர்வமுடன் மன தூய்மையுடன் நாம் ஆயத்தமாகிடுவோம் இயேசு அன்பரை சேர்ந்திடுவோம்.