Рет қаралды 2,042
கரூர் குளித்தலை அருகே அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. 1200 அடி உயரமுள்ள இந்த மலை கோயிலுக்கு 1017 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும்.
பக்தர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு பின் 9 கோடியே 10 லட்சம் செலவில் ரோப் கார் வசதி செய்து தரப்பட்டது. கடந்த 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.
ரோப் காரில் ஒரே நேரத்தில் மேல், கீழ் பாதையில் 8 பெட்டிகள் இயக்கப்படுகின்றன. கடக்கும் துாரம் 445 மீட்டர். பயணிக்க 3 முதல் 5 நிமிடம் ஆகிறது.
கடந்த 25 ம் தேதி மதியம் 2 மணிக்கு பலத்த காற்றினால் ரோப் காரின் கம்பிகள் தடம் மாறியது. இருபுறமும் நகர முடியாமல் ரோப் கார் சிக்கி கொண்டது.
அந்தரத்தில் ரோப்காரில் தொங்கிய பக்தர்கள் சிலரை கோயில் ஊழியர்கள் ஏணி மூலம் மீட்டனர். இரண்டரை மணி நேரம் போராட்டத்துக்கு பின் பழுதை சரி செய்து எஞ்சிய பக்தர்கள் மீட்கப்பட்டனர்.# # Karur # Ayyarmalai # Rope Car