Рет қаралды 63,807
பல்லாங்குழி விளையாட்டு
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இன்பத்தை தரக்கூடியவை - பாண்டி, நொண்டி, கிளித்தட்டு என தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் பெண்கள் ஆடிய ஆட்டங்கள் ஏராளம். அதிலும் பல்லாங்குழி விளையாட்டு சற்று வித்தியாசமானது.
(பல+ஆம்+குழி=பல்லாங்குழி) என்று அழைக்கப்பட்டிருக்கலாம்
வகைகள் :
பல்லாங்குழி விளையாட்டில் பல வகைகள் இருக்கின்றன
1. பசுப்பாண்டி , 2. சரிப்பாண்டி 3. எதிர்ப்பாண்டி 4. இராஜாப்பாண்டி, 5. காசிப்பாண்டி, 6. கட்டுப்பாண்டி, 7. சீதப்பாண்டி என்று தமிழறிஞர்கள் பிரித்துள்ளனர். மேலும் அரிப்பாண்டி, முத்துப்பாண்டி, தாயிச்சிப்பாண்டி என்று மூன்று வகைகளை குறிப்பிட்டுள்ளனர்.
பயன்கள் :
பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கை திறன் அதிகரிக்கிறது. குழிகளில் கற்களை எடுத்து விளையாடும் போது விரல்களுக்கு பயிற்சி கிடைக்கும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் நுண்ணிய கணிதத்திறன் அதிகரிக்கிறது. அறிவுத்திறனும், வாய்ப்புநிலை இயல்பும் இவ்விளையாட்டில் காணப்படுகிறது. இதில் கடைசி முத்து தீரும் வரை ஆட்டம் நீடிக்கும். இதனால் பெண்களின் விரலுக்கு பயிற்சியும், கணக்கு வழக்கில் தெளிவும் ஏற்படுகிறது என்பது நம்பிக்கை.
Best Regards,
Pavila