சிறு வயதிலேயே இருந்து இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 💕💕💕
@sethuramanveerappan32068 ай бұрын
நாம் ஓரளவு புண்ணியம் செய்தால், அடுத்த ஜென்மத்திலும் இது போன்ற. பாடல்கள் கிடைக்கும்,,,,!
@pandij49756 ай бұрын
உண்மை
@Whyyyyy-h1s Жыл бұрын
ஒரு விதவையின் ஏக்கத்தை அருமையாக சொன்ன அற்புதமான பாடல் பாடல்வரிகள், இசை❤❤❤❤❤
@lakshmanand58398 ай бұрын
I like very much
@WayofHaqq7 ай бұрын
Ind4rco very @@lakshmanand5839
@sivakamieswaran11 ай бұрын
இளம் வயதில் கணவரை இழந்த பெண்ணின் துயரத்தை இந்தப்பாடல் மூலம் கண்ணதாசன் நமக்கு சுசிலாவின் குரலில் காட்டுகிறார்.
@mkprakash732610 ай бұрын
🎉 my greatest gendle man in the world, no body else in my heart mr KK, msg.
@anavanu7 ай бұрын
Wow
@anavanu7 ай бұрын
S
@jayapreveen9219 Жыл бұрын
இன்பம் கனவில் துன்பம் எதிரில் எத்தனை வலியான வார்த்தைகள்
@MsSuriyanarayanan Жыл бұрын
இப்படியான சிறப்பான பாடல்கள் நிறைந்த தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை எண்ணி கலங்குகிறது மனம்
@ChandraBoss-z3l Жыл бұрын
unmai
@karthiknatraj17 Жыл бұрын
Anirudh oruthan irukkan patta kedukka
@Ganesan-mt2ts Жыл бұрын
True sir
@Sundarajan-mo6xz Жыл бұрын
Tamil cinema va😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
@k.s.ramachandrank.s.rama-db7pd Жыл бұрын
என்ன செய்வது காலத்தின் கோலம்
@pragalathan000 Жыл бұрын
தெளிவும் அறியாது, முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் - இளைஞர் வாழ்க்கை 2 வரிகளில் கூறிவிட்டார் கண்ணதாசன். ❤❤
@m.clementrajmaheshchandran4216 Жыл бұрын
😊a
@themegacityengneering66557 ай бұрын
சரியான உண்மை❤
@tamilworldTW6 ай бұрын
உண்மை
@weqge2cyАй бұрын
🎉
@balasubramanian5001 Жыл бұрын
சுசீலா அம்மா குரலுக்கு நிகர் யாருமில்லை 🙏🙏🙏 ஆணுக்கு எப்படி பெண்ணின் மனம் தெரிய வரும் கண்ணதாசன் அவர்கள் இறைவனின் அற்புத படைப்பு 🙏
@GopalS-rx9gh11 ай бұрын
In
@sethuramanveerappan32068 ай бұрын
ஜப்பான் சுனாமியில். MAATTINAALUM அப்போது கூட பாடல் கொடுத்துவிடுவார் , கண்ணதாசன்,,,,,!
@gvkengineering748 ай бұрын
அந்த குரலில் ஒரு ஏக்கம் 😢
@marimuthum11472 ай бұрын
What film
@ganistonfernando351210 ай бұрын
இந்தப் பாடலின் சோக ரசத்தை அந்த வீணையின் நாதம் என்ன அருமையாய் இசைக்கின்றது.
@shanmugamponnusamy52587 ай бұрын
எத்தனை இசையமைப்பாளர் கள்வந்தாலும்எம். எஸ். விக்கு இணையான ஒருவர்இல்லை காலம்தந்த பரிசு எம். எஸ். வி.
@RajeshKumar-wx2dr5 ай бұрын
இருக்கிறார் அவர் தான் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் எம் எஸ் விக்கு ஒரு படி மேல் இசைஞானி அவர்கள்
@rasubramanian11605 ай бұрын
@@RajeshKumar-wx2dr இளையராஜாவே நான் எம் எஸ் வி போட்ட பிச்சை என்று உயர்வாகக்கூறியிருக்கிறார்
@RajeshKumar-wx2dr5 ай бұрын
@@rasubramanian1160 உண்மை தான் ஆனால் இசையில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் இசைஞானி எம் எஸ் விஸ்வநாதன் ஐயா அவர்களும் இசையில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான நபர் தான் . அதனையும் நான் மறக்க மாட்டேன்
@kamarajr776710 күн бұрын
Don't compare. Every music director is unique in their style
@PriyaJason-g8e Жыл бұрын
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி? காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி? இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி? காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
@natarajansundaram6535 Жыл бұрын
Keep it ur service
@Abhikirish Жыл бұрын
Spr mam
@vskgyvskgy2959 Жыл бұрын
Intha padal Pala per vazhvil innum oliththukk koundum ,,,Olinththu koundum , than irukkirathu 😔😒
@k.s.ramachandrank.s.rama-db7pd Жыл бұрын
பாடலின் ராகத்தை குரலோசையில் கேட்டேன் பாடலின் பொருளை உங்கள் பதிவில் படித்தேன் நன்றி அன்பரே
@natarajansundaram6535 Жыл бұрын
Keep it the job
@arivarasanm670810 ай бұрын
கண்களை மூடிக் கொண்டு இந்த பாடலைக் கேட்டேன். தொடக்கம் முதல் பாடல் முடியும் வரை தனது வாழ்க்கையின் சோகத்தை எவ்வளவு நாகரீகமான வார்த்தைகளால் பங்கிட்டுக் கொள்வது என்பதை கவிஞர் கண்ணதாசன் மிக அருமையான எழுதி இருக்கிறார். அதை திரையில் மிக அழகாக செளகார் ஜானகி அம்மா அவர்கள் அபிநயித்து உள்ளார்கள். MSV ஐயவும் ராமமூர்த்தி ஐயாவும் இணைந்து இசை அமைத்த மிகவும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கேட்ட உடனேயே நம்மை மெய்மறக்கச் செய்கிறது
@antonyarockiavathysuriyana16763 ай бұрын
அருமையான பதிவு
@ponmudirponmudir83479 ай бұрын
மனிதப்பிறவி யின் பலனை அடைந்த மாதிரி உள்ளது. நல்ல வேளை ஐம்புலன் களையும் செவ்வனே படைத்த ஆண்டவனுக்கு நன்றி.
@DanielDaniel-k4j9 ай бұрын
Love
@anuradhas375711 ай бұрын
இளம் விதவையின் ஆவல் மற்றும் ஏக்கங்களை உணர்த்தும் உன்னதமான பாடல் .
@asmilakshmi727 Жыл бұрын
சசுசிலா அம்மாவின் மயங்க வைக்கும் குரல் இனிமை
@yousufbathurdeen24869 ай бұрын
காலத்தால் அழியாத அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் காதுக்கு இனிமையாக இருக்கும் 🎉🎉🎉
@ramalingame784511 ай бұрын
சோகத்தைக்கூட சுகமான வரிகளில் சொன்ன பாடல்.
@madhangopal78959 ай бұрын
இந்த மாதரி அமரகாவிய பாடல்கள் நமக்கு அளித்த ( கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி பி.சுசிலா ) இவர்களுக்கு தமிழகம் என்றென்றும் தலைவணங்கும்.
@kongumurugavel8619Ай бұрын
காலம் தேசம் கடந்த கவித்துவமான பாடல் , இது போன்ற எளிமையான, தங்கள் கருத்துக்களை சொல்லும் , வார்த்தைகளை முத்து முத்தாக கோர்த்து தருவது அந்தக் காலத்து பாடல்கள்தான்❤
@thillaisabapathy9249 Жыл бұрын
மாலை பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை சக்கரவாக (சந்திர கவுன்ஸ்) இசை ராகம் பாடி என் ஆத்மாவை அழவைத்த சுசீலா ... மாலை நேரக்கனவு கண்ட பெண்மையை பாட வைத்த கண்ணதாசன் .. விதி என்று ஏற்றுக்கொள்ளும் பெண்ணாக .. குங்குமம் தந்தவன் வராமல் போனது ஏன்?.. என்று கேட்கும் சௌகார் ஜானகி .. வீணையில் விரல் மீட்டீ தோழியின் புதிருக்கு பார்வையில் விடை தேடும் ஈ.வி.சரோஜா ... ஷெனாய் ஒலிக்க ..நம் மனம் பதைக்க .. இசை தந்த இரட்டையர்கள்.. பாடலின் முடிவில் வீணையின் தந்தி கம்பி மட்டும்தான் அதிர்ந்து ஓய்ந்தது .. நம்முடைய அழுத மனதுதான் இன்னும் ஓய மறுக்கிறது .. கனவில் வந்தவன் கணவன் என்ற கனவின் உணர்வு பாடிய இசைவாணி சுசீலா ...
@omkaranathanpalanisami21609 ай бұрын
கமெண்ட் என்ற பெயரில் ஒரு கவிதை
@Rameskannan7 ай бұрын
❤❤❤❤❤
@radhakrishnankannan69426 ай бұрын
இந்தப் பாட்டு தான் என்னை உருவாக்கியது என்று இளையராஜா அடிக்கடி சொல்கிறார். என்ன ஒரு பாடல்!! ஒவ்வொன்றும் வைர வரிகள்!! மயக்கமா கலக்கமா என்ற பாடல் வாலியை உருவாக்கியது போல, இந்தப் பாடல் இன்னொரு இசை ஜாம்பவானை உருவாக்கியது என நினைக்கும் போது கண்ணதாசன் என்ற மாமனிதனை போற்றத் தோன்றுகிறது. வாழ்க கண்ணதாசன் அவர்களின் புகழ். அதேபோல எம் எஸ் வி க்கு இணை வேறு ஒருவர் இல்லை......
@RajeshKumar-wx2dr5 ай бұрын
இருக்கிறார் ஒருவர் அவர் தான் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் எம் எஸ் விக்கு ஒரு படி மேல் இசைஞானி அவர்கள்
@rasubramanian11605 ай бұрын
@@RajeshKumar-wx2dr இளையராஜாவே நான் எம் எஸ் வி போட்ட பிச்சை என்று உயர்வாகக்கூறியிருக்கிறார்
@Srinivasan-qw2mlАй бұрын
அம்மாவின் குரல் இனிமை இயற்கை,இறைவன் கொடுத்த வரம்,வாழ்க நலமுடன்
@JayaMarimuthu-l2g3 ай бұрын
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி ... என்ன வரிகள் ❤
@keerthikanmani8481 Жыл бұрын
பாடலை பி சுசிலா அவர்கள் அருமையாக பாடி உள்ளார்கள் உண்மையாலுமே மாலைப் பொழுதில் வரும் மயக்கம் வரும்
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதமானப்பாடல்! சுசீலாமாவின் இனியக்குரலில் தேன் கொட்டுகிறது ! இதிலே வீணையைமீட்டும் சரோமாவைவிட செளைகார் அழகியாய் தெரியுறாங்க ! ஜெமினி. நல்லா கவனீக்கறார்!நல்ல கவிகள்! இவுங்க தன் கதையை இப்புடிச்சொல்றாங்க ! அற்புதமான ப்பாடல்! நன்றீங்க மேடம் ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢
@pramekumar1173 Жыл бұрын
இருவருமே அழகிகள் தான். அழகன் ஜெ மினியோடு சேர்ந்தவர்கள் அழகு தான். இதில் எல்லாமே அழகு தான். பாடல், கவி , இசை , பாடுபவர், நடித்தவர்கள் எல்லாமே beautifullll ....❤❤❤
@@helenpoornima5126தினமும் வேதா அவர்களின் இசையில் ஒரு பாடல் வழங்கினால் நன்றாக இருக்கும். நிறைய பேர் எழுதுவார்கள். இரவு உணவு முடிந்துவிட்டதா ? ❤❤❤
@pramekumar1173 Жыл бұрын
@@helenpoornima5126GOOD NIGHT. SEE YOU TOMORROW. 💤💤💤❤❤❤
@pramekumar1173 Жыл бұрын
இனிய காலை வணக்கம். இந்த நாள் எல்லோருக்கும் நல்ல நாளாகிட வேண்டும். ❤❤❤
@easwaramurthys3822Ай бұрын
சுசீலா அம்மாவின் இசையில் என்னை முழுமையாக அடிமையாக்கிய பாடல்கள் , இத்துடன் , கண்கள் எங்கே கனவுகள் , கங்கைரை தோட்டம் ஆகிய மூன்று பாடல்கள் . தேனினும் இனிய பாடல்கள் . அருமை அருமை அருமை என்னுள் இதற்கு மேல் அந்த இசை தெய்வத்தை புகழ வார்த்தைகள் இல்லை .
@anirudhvaradarajan735 ай бұрын
" இன்பம் கனவில் துன்பம் எதிரில் " உண்மை மற்றும் அனுபவம் வாய்ந்த வரிகள் 😫💔 பி. சுசீலா குரல் தமிழ் போல் தேன் போல் இனிக்கிறது 💖 என் தாத்தா மிகவும் விருப்புற்று கேட்கும் பாடல் 🥺✨ பழைய நாட்கள் தங்கம் போன்றது 💝
@k.s.ramachandrank.s.rama-db7pd Жыл бұрын
இப்பாடலில் ஆழமான கருத்தும் அருமையா இசையும் சுசிலா அம்மாவின் இனிமையான குரலில் இப்பாடலை கேட்க்கும் போது எப்பேர்ப்பட்ட வரும் மெய்மறந்து போவார்கள் அருமை அருமை
@subramaniants22869 ай бұрын
பாடல் எழுதியவருக்கு கண்ணியம் இருந்தது. பாடலைப் பாடியவருக்கு கண்ணியம் இருந்தது. இசை அமைத்தவருக்கு கண்ணியம் இருந்தது. நடித்தவருக்கு கண்ணியம் இருந்தது. தயாரிப்பாளருக்கு கண்ணியம் இருந்தது. இயக்குனருக்கு கண்ணியம் இருந்தது. கதைக் களம், வசனம் அமைத்தவருக்கும் கண்ணியம் இருந்தது. பாடல்கள் அப்போது வைரமாக மின்னின. இன்றும் மனதை சுண்டி இழுக்கின்றன அப்போதைய பாடல்கள். சமீப காலங்களிலும் அதற்கு முன்பும் மேற்படியில் ஒருத்தனுக்காவது கண்ணியம் என்பது இருந்ததா ? இருக்கிறதா ? இருக்குமா ? படு கேவலமான ஈனப் பிறவிகளின் கையில் சினிமாத் தொழில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருத்தனும் 'கல்லா கட்ட' நினைக்கிறானுங்க. ஆகவே எல்லாவற்றையும் விக்கிறானுங்க. நல்ல சமுதாயத்துக்கான சிந்தனை மாற்றம் பெற்று சாக்கடையாக மாறி வருகிறது.
@sankibaya8 ай бұрын
பார்க்கும் நமக்கும் கூட கண்ணியம் இருந்தது . நான் சினிமா பார்ப்பது நிறுத்தி 25 வருடங்கள் ஆகிறது.
@varshibaloo27468 ай бұрын
It is questionable truth. Superb..
@shivakumarnagarajan57318 ай бұрын
@@sankibayaநூறு சதவீதம் உண்மை நண்பரே! In this life, everyone gets exactly what he deserves. திராவிடத்தீமை தமிழகத்தில் தோன்றிய காலத்திலிருந்து, தமிழ்பண்பாடு சீரழிந்து இன்று அதலபாதாளத்தில் கிடக்கிறது. என்று இந்த நிலை மாறுமோ?
@m.pugazhm.pugazh87137 ай бұрын
Super bro
@anuradhasundaresan48517 ай бұрын
Y angry? புது படங்கள் பார்ப்பதையும், பாடல்கள் கேட்பதையும் தவிர்க்கலாமே. I don't listen new songs that too after 1998
@u.rajamanickamu.rajamanick6574Ай бұрын
அற்புத வரிகள்.ஒரு இளம் விதவையின் ஏக்கப்பெருமூச்சை அழகான வரிகளால் பாடலை புனைந்துள்ள கண்ணதாசனும் பாடிய சுசீலா அம்மாவும் தமிழ்த்திரையுலகின் சிற்பிகளாவார்கள்.
@radharanganathan25059 ай бұрын
Super expression sowkar Amma,idhai vida yaralum tharamudiyadhu 👌👌👌
@mycraftyboy4795 Жыл бұрын
Bama. பாட்டும் அருமை.பாடியவர் குரல் மிக அருமை. பாட லை எழுதிய வர் தமிழகத்தின் ெபாக்கிஷம். இனி யாரும் இப்படியெல்லாம் பிறக்க ப் ேபாவதில்லை.
இந்த பாடலின் இசையாலும் வரிகளாளும் ஈர்க்கப்பட்டவர்தான் இளையராஜா என்று அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். இப்படி அவரே சொல்லிவிட்ட பிறகு மகுடத்தின் மேல் வேறொன்று வைக்க இயலாது என்பதனால் இப்படி சொல்ல ஆசைப்படுகிறேன். அவரது பாட்டுக்களுக்கு அடிமையாய் இருக்கும் நாங்கள் அவரது வாழ்க்கை திருப்புமுனைக்கே விதையாய் இருந்த இந்த பாடலை எவ்வாறு ரசித்திருப்போம் என்பதை சொல்லவும் வேண்டுமோ... சுசீலா அம்மாவின் இனியகீதமும், கண்ணதாசன் அய்யாவின் அறிவார்ந்த வரிகளும் கேட்பவர்களின் மனதையும், செவிகளையும் என்னவெல்லாம் பாடாய் படத்தியிருக்கும் என்பதை...என்பதை நெருங்கும் உயிர்களுக்குத்தான் தெரியும். திறமையும் திறன்அறியும் அறிவும் ராஜாவிடம் இருந்ததால் அவர் இசையமைப்பாளராகிவிட்டார்... நாங்கள் இன்னமும் எம் எஸ் விக்கும் இளையராஜாவுக்கும் ரசிகனாகவே இருக்கிறோம். அப்படி இருப்பதிலும் ஒரு சுகமே.
@ganeshbhattar65517 ай бұрын
Yes..u told my heart...
@d.sundarrajraj9555 ай бұрын
உண்மை உண்மை உண்மை.❤
@pramekumar1173 Жыл бұрын
அருமையான அற்புதமான இனிமையான பாடல். மனதை உருகிட வைக்கும் பாடல். பெண்ணின் மனதில் உள்ளவைகளை எப்படி வெளிப்படுத்துகிறார் கவிஞர். இரு வல்லவர்கள் இ சை மிக இனிமை. சுசீலா அம்மாவின் குரல் ,சௌக்கார், , ஈ.வீ.சரோஜா ,ஜெமினி நடிப்பும் சூப்பர். பூர்ணிமா உங்களது விமர்சனம் எழுது ங்கள்..❤❤❤
@helenpoornima5126 Жыл бұрын
அருமை ப்ரேம் 👸❤❤❤💃
@pramekumar1173 Жыл бұрын
@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. ❤❤❤
@uthayanmala4883 Жыл бұрын
😂
@k.sundararajanrajan70944 ай бұрын
சந்திர கவுன்ஸ்.
@kulandaisamyl7829 Жыл бұрын
இது கனவு மயக்கத்தில் ஒரு பெண் பாடும் அருமையான பாடல்.
@muralikrishnanm91596 ай бұрын
மிக அற்புதமான ஆழமான உட்கருத்து அசால்டான நடிப்பு இதற்கெல்லாம் மேலான நெஞ்சிற்க்கு அமைதி தரும் இசை காலத்தால் அழியாத பாடல்
@hariilango24567 ай бұрын
பாடல் வரிகளும்,இசையும் அருமை,இப்பவும் கனத்த இதயத்துடன் ரசிக்க முடிகிறது
@venkatapathyramachandran4422 Жыл бұрын
One of the best song sung by P.Susheela Telugu singer What a excellent tamil Pronunciation Long live mam R.Venkatapathy Journalist Bengaluru Karnataka ❤
@Bostonite198511 ай бұрын
P Susheela sang hundreds of songs in Tamil and Telugu with 100% perfection that it is extremely hard to call her a Tamil or a Telugu singer. She set the bar at a very high level that very few singers could match that level of perfection. For example, S Janaki, KS Chitra and Swarnalatha.
@JancyJancy-q3u8 ай бұрын
மனதை மயக்கும் இசையும் வரிகளும் காட்சி அமைப்பு என்ன சொல்ல ...
@Vanu-ob1vz5 ай бұрын
2024 yaaravathu irukingala
@சிவ_செல்வமாரிமுத்து5 ай бұрын
இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து 3024 ஆனாலும் இந்த பாடல் ரசிக்கப்படும் சகோ...
@vetrivelneomarx4 ай бұрын
Daily listening
@muruganandamcbe3 ай бұрын
Me
@NilaNila-ed6ef2 ай бұрын
Yes
@smohankaruppayil5702 ай бұрын
Excellent
@somusundaram84363 ай бұрын
தமிழ் திரை இசையை காக்க வந்த கடவுளின் தூதுவர்கள் கண்ணதாசனும் MSVயும்
@Kavithamithra793 Жыл бұрын
கண்ணதாசனின் மற்றொரு மயக்கம் தந்த பாடம்
@rajasamson92698 ай бұрын
I can listen this wonderful song thousand times......never get bored.....in 2023....wow....
@uthararajanmaheswaran1362 Жыл бұрын
இந்த பாடலில் மிக அருமையா ன உச்சரிப்பு , மிக நீளமான பாடல் வரிகள் எப்போது மூச்சு விடுகிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை மிக அருமை,
@saravanakumarks2740 Жыл бұрын
❤❤❤song🎉🎉
@meenakshisundaram1404 Жыл бұрын
One of the favorite song of P suseela her voice gifted by Gof
@amalraj5043 Жыл бұрын
@@saravanakumarks2740 ,
@VadivelVadivel-ut2zq Жыл бұрын
@@saravanakumarks2740😊
@madhaiahdhorai5120 Жыл бұрын
(
@pushpabai6242 Жыл бұрын
ரெம்ப பிடித்த பாடல். அருமையான பாடல். விளம்பரம் தூக்க கலக்கத்தில் ஸ்கிப் பண்ணினால் வருகிற தூக்கம் கலைகிறது. விளம்பரம் வேண்டாமே.
@AruljegaJothi-ko4dc7 ай бұрын
P சுசிலா அம்மா ஒரு தனிப்பிறவி
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
இன்பம் கனவில் துன்பம் எதிரில் 😢
@revathishankar946 Жыл бұрын
Nobody can sing in this highh pitch other than Susila madam Great singer and very great voice Saraswathis. Avatharamn she is
@sureshsanjeevi303911 ай бұрын
இந்த பாடலை உச்ச சாயலில் எல்லோரும் பாடலாம், ஆனால் சுசிலா அம்மாவை போல் ஒருவரும் பாட முடியாது இது நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை
@revathishankar94611 ай бұрын
@@sureshsanjeevi3039 Thank you
@தமிழ்-கதிர்10 ай бұрын
இந்த மாதிரி வாழ்க்கை சூழல் அமைந்தால்தானே, இதே போன்ற பாடல்கள் வர முடியும்… இந்த கலாச்சாரத்தை தாண்டி பல மைல் தூரம் வந்துவிட்டோம்.இதே போன்ற பாடல் வேண்டுமெனில் காலச்சக்கரம் பின்னே சுழன்றால்தான் சாத்தியம்.
@chandruchandruannalakshmi5 ай бұрын
சுசிலாம்மாவின் இதமான கீதம் இனிய இசை செளகார்அம்மாவின் உள்ளம் கவர் நடிப்பு நாங்கள் பாக்கியம் செய்தவர்கள் தான்.....
@pandiansulochanan24117 ай бұрын
One of the Gems in the Tamil songs Kannadhasan is king of the Tamil lyricist...He has gone but his line remains him in every heart that the price of Any poet's creation. There is no end for any art....
@shanthinarayanan93344 ай бұрын
ஆஹா!! மிக மிக இனிமையான தொகுப்பு. மிக்க நன்றி
@vijijaga-rl8bk4 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்....இந்த பாடலில் வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி....
@vikramreddy82 Жыл бұрын
Susheela amma proved as number one singer with this song ..no comparison at all ❤
@honeyleom Жыл бұрын
there is nothing like number 1, susheela is a wondeful singer ...a legend..no doubt ...so are others..Janaki, Vani Jeyaram..Chitra..Jency...Swarnalatha...love music irrespective of the composers, singers, actors, movies etc.
@rajeshree4974 Жыл бұрын
@@honeyleom.
@kalilsyed2348 Жыл бұрын
@@honeyleom😊
@kalilsyed2348 Жыл бұрын
@@honeyleom😊
@kalilsyed2348 Жыл бұрын
@@honeyleom😊😊
@saranpatel11146 ай бұрын
இளமை எல்லாம் வெறும் கனவுமயம் இதில் மறைந்தது சில காலம்...தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்....மயங்குது எதிர்காலம்.....😢😢😢
@balemurupi6596 ай бұрын
❤
@pichaimanit.a5 ай бұрын
இந்த மாதிரி பாடல் இனிமேல் வருமா இந்த பாடலை எழுதியவர் இசை அமைத்தவர் பாடியவர் எல்லோருக்கும் என் நன்றி
@gdmkel47311 ай бұрын
P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself. Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music. Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication. One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal. Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres. P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 23/12/2023.
@DharmarajM-z5d7 ай бұрын
சுசீலாம்மாவை நெருங்க யாரும் இல்லை. கலைமகளின் மூத்த புதல்வி சுசீலாம்மா.
@manivannann57332 ай бұрын
Vow Nightingale susilamma , Fantacic . I am always Amma fan. ❤
@gnanamanickamb8496Ай бұрын
இந்தப் பாடலில் தான் இளையராஜா சார் மயங்கினார். ராஜா சார் மயங்கியதால் தற்பொழுது நாம் அவரது இசையில் மயங்கி இருக்கிறோம்.. இருப்போம்... இப் பூவுலகம் இருக்கும் வரை...
@unitingthepeople6 ай бұрын
இனியாராலும் இந்த மாதிரி பாடவே முடியாது.
@mmanivel93492 ай бұрын
இணையற்ற இசை, பாடல், பாடகர், நடிகர், ரசிகர்கள், சூழல் என கச்சிதமான பாடல்! நம்மை மிதக்கச் செய்யும் இசையும் பாடலும்! இளையராஜாவே விரும்பிய பாடல் என்றால் சொல்ல வேண்டியதில்லை!
@RamanathanS-u2d2 ай бұрын
என்றும் பாடல் இளமை வாழ்த்துக்கள் அன்புடன்
@c.sjagannathan65378 ай бұрын
பல துறைகளில் உள்ளவர்களுக்கு உச்சம் என்று ஒன்று இருக்கும் ஆனால் பல உச்சங்களை தொட்டவர் சுசிலா அம்மா மட்டுமே
@maheswaranksk7367 ай бұрын
🎉
@Mani.Govindan2 ай бұрын
அருமையான பதிவு. அத்தனை பெண் உறவுகளின் மேன்மையும் அவர் குரலில் ரசித்த மனோ பாவத்தில் சொல்கிறேன். பலப்பல உச்சங்களுக்கு சொந்தக்காரரான அவர் குரலில் என்றென்றும் மயங்கலாம்.வாழ்வின் அருமருந்து அவர் பாடிய பாடல்கள்.
@perumalsamy2978 Жыл бұрын
ஈ.வி.சரோஜா நடன மங்கை , நடனத்தில் சிறந்த நடிகை 👌👌👌👌👌👌👌👌 சௌகார் ஜானகியின் இளம்வயதில் எடுத்த படம் பாக்யலட்சுமி பாடல் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
One of the greatest songs ever...Respects to Shusheelamma
@ilancherana29983 ай бұрын
Super song suseela Amma veralaval ❤
@saranyaramram9991 Жыл бұрын
😮அருமையான பாடல்😊
@sumathinatraj21396 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@KishoreKumar-vj1in Жыл бұрын
Mind blowing song. Wonder ful melodymrs.p.susilas' very good voice.melkisai mannargals' fantastic music makes this Golde. song. mr .kannadasan song is amazing..
@Appasamyrajaram4 ай бұрын
உண்மை தான் அய்யா மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
@lamyourbigfanbro82588 ай бұрын
Beautiful honey voice. Old is dimond. My college days never forgot. God bless you.
@rdgaming14138 Жыл бұрын
My favourite song eppooo manam vedhanaiyaa erukkooo appoo entha song kettathum mendum pazhaiya nai mariduven avolo arumaiyana lines 🥰
What a lovely song.Every word is gold. My admiration and 'vanakkam' go out to the legendary Kannadasan poet.
@richmuralidoss4444 ай бұрын
வர்னிக்க வார்த்தை இல்லை...!👌👌👌👌
@Sundarajan-mo6xz11 ай бұрын
Kannadasan lover.hats off sir .wat a massive song.after 60 years still ruling.🎉🎉🎉🎉🎉🎉
@pamelagopinath29305 ай бұрын
Paaa what songs mu God goosebumps will be there till the very end of the song😢😢😢
@V.Kalanidhi2 ай бұрын
நான் அடிக்கடி கேட்கப்படும் பாடல்.
@vincenttv6325Ай бұрын
Perfect lyrics by Kannathasan..MSV composed perfect music. P. SSuhhela gave perfect voice. Janaki gave perfect expression to this song from.the movie Bhakialaksmie..
@Sivabagyam-s9g8 ай бұрын
சிறுவயதிலேயே பிடித்த பாடல்
@ffrajkavi11 ай бұрын
நா 90 kid's, எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல், பழைய பாடல் வரி ரசனை 🥰🤨 மிக்கது , இந்த ரசனை எங்களோடு முடிய போகிறது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம் 😢(2k kids 👎)🤔
@Subramani-vn8rk Жыл бұрын
இப்படிப்பட்ட பாடல்களை யாரால் எழுத முடியுமா
@gvkengineering748 ай бұрын
வாய்ப்பில்லை, இது போன்ற பாடல் இனி வர வாய்ப்பில்லை
@maheswaranksk7367 ай бұрын
🎉
@rajipitchumani4176 ай бұрын
Yes
@balemurupi6596 ай бұрын
இந்தப் பாடலின் பாதிப்பில் இளையராஜா இதே போன்று ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்...கண்டுபிடிங்க
@balasubramaniank5196 ай бұрын
❤ikyour opinion8 3:51 l@@maheswaranksk736
@thiagarajansundaragoo97155 ай бұрын
Very true.
@pandiank14Ай бұрын
Awesome congratulations 🎉
@nagarajanramarathnam9752 ай бұрын
Pramadhamana song & beautiful rendered. Nowadays we don't getsuch songs.
@sujathaprabhakaran3090 Жыл бұрын
அருமையான பாடல்👌
@r.jeyatnthi11215 ай бұрын
மனதை உறுக்கிய பாடல் வரிகள்
@AruljegaJothi-ko4dc7 ай бұрын
பழைய பாடலை கேட்ட காதுக்கு, நன்றி
@boset28516 ай бұрын
Favourite food rasithu sapiduvathu pola eruku what a song