Рет қаралды 28,472
திருவெம்பாவை - 7
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
திருப்பாவை - 7
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.
1. மார்கழி 1-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 1 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 1-ஆம் நாள் கேட...
2. மார்கழி 2-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 2 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 2-ஆம் நாள் கேட...
3. மார்கழி 3-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 3 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 3-ஆம் நாள் கேட...
4. மார்கழி 4-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 4 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 4-ஆம் நாள் கேட...
5. மார்கழி 5-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 5 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 5-ஆம் நாள் கேட...
6. மார்கழி 6-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 6 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 6-ஆம் நாள் கேட...
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli KZbin Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
Arivoli