கடந்த பகுதியில் த்வதீய - அம்ருதோத்பவ என திருநாமத்திற்கு விளக்கியதின் தொடர்ச்சியாய் அத்புதமாய் தன் நிரதிய ஞானத்துடன் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள உபன்யஸித்ததிலிருந்து - தக்கான் என்றும் புக்கான் எனதுவங்கும் திருமங்கை ஆழ்வார் பாசுரத்தில் அனுபவித்தது போல், கடிகாசலம் என்ற சோள ஸிம்ஹாபுரத்தில் அம்ருதவல்லி நாச்சியார், தன்னையே அமுதமாக நமக்கு கொடுப்பவளும், தன்னை அமுதமாய் யோகநரளிம்மருக்கும் கொடுக்கிறாள். இத்தலத்தில் 7 மகரிஷிகள் தவம் புரியும் போது இடையூறு ஏற்படாவண்ணம் ஹனுமான் அவர்களை ரக்ஷித்து யோக நரஸிம்மரை நோக்கி தபஸ் செய்கிறார் என்றார். தக்கான் குளம் - பெருமான் பெருமைகளுக்கு தக்க குளம். மிக்கானை......அடைந்து உய்ந்து போனேனே என திருமங்கை ஆழ்வார் பாசுரப்படி அமிர்தவல்லி தாயார் ஆக்குவான ஹஸ்த்ததுடன் பக்தர்களை அருகில் கூப்பிட்டு ரக்ஷிப்பது போல் எழுந்தருளி யிருக்கிறாள். இந்நாச்சியார் அம்ருதோத்பவ என்ற திருநாமத்தை வகிக்கிறாள். திருதியை -கமலா ப்ரோக்தா கலெளலாதி கமலா - 'க' காரத்தையும், 'ம'காரத்தையும் பெருமானுக்கு ஜீவாத்மா, ஜீவாத்மாவிற்கு பெருமானையும் கொடுத்து வாங்குகிறாள். இத்திருநாமத்திற்கு சான்றாய் விளங்குவது நிச்சுளா புரி என் னும் உறையூரில் குடி கொண்டு இருக்கும் கமலவல்லி நாச்சியார் பங்குனி ப்ரஹ்மோத்சவத்தின் போது ஸ்ரீரங்கநாதன் உறையூருக்கு எழுந்தருளி 6ம் திருநாள் என்று இந்த நாச்சியாருடன் சேர்த்தி கண்டருளுகிறார். தர்மவர்மா சோழன் வம்சத்தில் பிறந்தவன் நந்த சோழன் . இந்த நந்தசோழனுக்கு புத்திர பாக்கியம் இல்லாததால் பெருமான் கமலவல்லி நாச்சியாரை இந்த அரசனுக்கு திருமகளாய் பிறக்க கோர, அவ்வண்ணமே நாச்சியாரும் கமலா என்ற திருநாமத்துடன் அவதரித்தாள் என்றார். ஸ்ரீரங்கத்தில் நடக்கும் அனைத்து உத்சவங்களும் உறையூரிலும் நடக்கும். 16 ஸ்ரீபாத தாங்கிகள், தோளுக்கு இனியானில் ரங்கநாதனக்கும், பெரிய பிராட்டிக்கும், கமலவல்லி நாச்சியாருக்கும் அடுத்தடுத்து உத்ஸவாதிகள் தோளுக்கினியாவில் எழுந்தருளி பண்ணும்படியான ஸ்வாமி ராமானுஜரின் ஆக்ஞையின் படி இன்றளவும் செவ்வனே தங்கு தடையின்றி நடக்கிறது என குறிப்பிட்டார் அந்த அளவிற்கு தென்னரங்கம் முற்றும் திருத்திவைத்த உடையவர். உபயக்காரர்களுக்கும் தாங்கள் பெற்ற கைங்கரியத்தில் ஆனந்தம் படும்படி உத்ஸவாதிகள் அமைந்திருக்கிறது. சதுர்தச சந்திரசேனா - தக்ஷபிரஜாபதிக்கு 27 பெண்கள. அனைத்து பெண்களையும் சந்திரனுக்கு திருமணம் புரிந்து கொடுத்திருந்தாலும், சந்திரனுக்கு ரோஹினியிடத்தில் மட்டும் அபார ப்ரீதியோடு இருந்ததை கண்ட ஏனைய பத்தினிகள் தங்கள் தந்தையிடம் முறையிட, தக்ஷனும் உன் பிரபை 14 நாட்கள தேய்ந்து போகுமென சாபம் கொடுக்க, அச்சாபத்தை வீர சயனத்தில் சயனித்திருக்கும் திரு விந்தளூர் பெருமானே போக்கினார் என்றும் இங்கு எழுந்தருளியுள்ள தாயார் வெள்ளித் தாமரையில் நீண்ட பாவாடை சாத்திக் கொண்டு சேவை சாதிப்பதே தனி அழகு என்றும் திருமங்கை ஆழ்வார் இத்தலத்து பெருமானுக்கு ஆண் பாவஸித்தியில் 10 பாடல்கள் சமர்ப்பித்ததையும் எடுத்துரைத்தார். அடுத்து ஸ்ரீதேவிக்கு ப்ரதானமான கோயிலான திருவெள்ளறை ஆகும். கூந்தல் மலர் மங்கைக்கும் எனது வங்கும் பாசுரத்தை சாதித்து ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவிக்கென்று ப்ரத்யோகமாய் க்ஷேத்திரங்கள் இருப்பதாகவும் திருவெள்ளறை என்று அனைவரும் வியக்கும் வதையில் புண்டரீகாக்ஷ பெருமானாக எழுந்தருளி இவர் ஆதியாய் ரங்கநாதனுக்கும் முன் தோன்றிய பெருமாள் என்றும் இங்கு எழுந்தருளியிருக்கும் தாயார் பங்கய செல்வி எனவும் இங்குள்ள ஜீயருக்கு பங்கயச் செல்வி ஜீயர் என கூறுமளவுக்கு நாச்சியார் ப்ராதான்யமாய் ப்ரஸித்தமாய் விளங்குகிறான் என்றும் கூறி இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@janakipb893010 ай бұрын
Aaaaq1¹1aaaaà1 1:4q1q11y2 1:43 aq1q1
@kanagavallithillainataraja76892 жыл бұрын
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha radhekrishna radhekrishna radhekrishna radhekrishna
@ptvasu9952 жыл бұрын
சுவாமி நமஸ்காரம் லக்ஷ்மி ந்ருசிம்ஹா சுவாமினே நமஹக 🙏
@lakshmiramaswamy92412 жыл бұрын
நன்றி.. நமஸ்காரம்..
@malathynarayanan60782 жыл бұрын
நிறைவுப் பகுதி கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அத்புதமாய் லஷ்மியின் வைபவத்தை வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தன் நிரதிசய ஞானத்துடன் விளக்கியதிலிருந்து - அடுத்து பூதேவிக்கு சான்றாய் அமைந்த திருக்கோயில் நாச்சியார் திருமாளிகை என போற்றப்படும் தென்புதுவை வேயர் பயந்த விளக்கு ஆண்டாளின் க்ஷேத்திரமான ஸ்ரீவில்லிபுத்தூரில் நித்யவாஸம் செய்பவள். ரங்கமன்னாருக்கு இன்னிசையாய் பாமாலையை பாடிக் கொடுத்தும், பூமாலையை சூடிக்கொடுத்தும் சூடி கொடுத்த சுடர்கொடியாய் திகழ்கிறாள் வழக்கம் போல் திவ்யமான கண் கொள்ளா காட்சியாக உத்ஸவாதிகள் காணெளியும் தேனினும் இனிய இன்னிசையாக திருமதி. உஷா பத்மநாபன் அவர்களின் இசையும் மேன் மேலும் மெருக்கேற்றுகிறது. திருவாடி பூரத்து செகத்துதித்தாள் வாழியே. திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே, திருநறையூர் என்கிற நாச்சியார் திருக்கோயில் எழுந்தருளியிருக்கும் வஞ்சுள வல்லி தாயார் நீளாதேவியின் அம்சமாய் கருதப்படுகிறாள். நறை - தேன் புஷ்பம் வடிவெடுக்கும் திருநறையூரில் கடாக்ஷிக்கும் வஞ்சுளவல்லி தாயார். ஸ்ரீதேவி- திருவெள்ளறை தாயார், பூதேவி- ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள், நீளாதேவிக்கு திருநறையூர் என வரிசைப்படுத்தி ஸ்ரீதேவிக்கு நிழலாய் பூதேவியும், நீளாதேவியும் இருந்து பெருமானுக்கு கைங்கர்யம் புரிகிறார்கள் என சாதித்தார். திருவெள்ளறை போன்று இங்கும் வஞ்சுளவல்லிக்கு அமுதுபடி சாத்து படி அமுது செய்த பின் பே பெருமானுக்கு அமுது செய்வார்கள் , 5) விஷ்ணுபத்னி - திருநறையூர் நாச்சியார் இந்நாச்சியார் ஸ்ரீனிவாஸ பெருமானுடன் கடாக்ஷித்து நம்பிக்கை நாச்சியாராய் ப்ரதானமாய் போற்றப்படுகிறாள். மேதாவி என்ற முனிவர் மணிமுத்தா நதிக்கரையில் பெருமானை நோக்கி தவம்புரிந்து மஹாலக்ஷ்மியே தனக்கு பெண்ணாக வர பிரார்த்திக்க, இத்தாயாரை வஞ்சுள மரத்தின் கீழே வைத்தே பராமரித்து வளர்த்ததால் வஞ்சுளவல்லி என பெயர் கொண்டு கருவறையில் ப்ரதானமாய் சேவை சாதிப்பாள். நரையூர் நின்ற நம்பியை கைபிடித்தாள் திருமங்கை ஆழ்வார் இந்த திருநறையூர் பெருமானுக்கு என்று 100 பாடல்கள் சமர்ப்பித்தார். இந்த ஸ்ரீனிவாச பெருமானே திருமங்கை ஆழ்வாருக்கு ஆச்சார்யன் ஸ்தானத்தில் நிலை நின்று சங்கு சக்ர லாஞ்சனம் செய்வித்து, குமுதவல்லி தாயார் திருமங்கை ஆழ்வாரை மணக்க உதவினார். அவள் இட்ட 2 நிபந்தனையில் ஒன்றான ஸ்ரீ வைஷ்ணவனாய் மாற வேண்டும் என்ற நிபந்தனையை இப்பெருமான் பூர்த்தி செய்தார் ஆழ்வாருக்கு வைஷ்ணவ ஸித்தியையும் அளித்தார் இந்த திருநறையூர் நம்பி என்று கூறிதிருநறையூர் பிராட்டியின் ப்ரபாவத்தையும் கூறி முடித்தார். 6வது திருநாமம் - வைஷ்ணவி. அத்புதமாய் எழுந்தருளியிருக்கும் வரமங்கை தாயார் எனக் கூறி அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . .க்ஷ மிக்க பிரார்த்திக்கிறேன்.
@rajeshwarishriram32002 жыл бұрын
🙏🙏🙏
@sivapillai27842 жыл бұрын
பெருமாளுக்கு பெருமை சேர்க்கும் தாயார் |Lakshmi Kadaksham Explanation by Sri Velukudi Krishnan Part 6 5,302 viewsPremiered Oct 1, 2022 ஐயா 3000 மாணவர்கள் படிக்கும் தமிழ் நாடு அரசு பள்ளியில் 15 கழிவறைகள் மாத்திரமே உள்ளதாம் . இடை வேலை நேரம் 10 நிமிடங்கள் மாத்திரமே ... முதலில் இந்த பிரச்சனைனை தீர்த்துவிட்டு பெருமாள் பெருமையை பேசவும்