ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எல்லாம் நான் அனுபவித்திருக்கிறேன். இப்போதும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் முதல் முதல் உங்கள் வீடியோ பார்த்த போது (2022 இல்) நீங்கள் பெருமாள் வழிபாடு செய்யச் சொல்லி நாராயணனுடைய காயத்ரி மந்திரமும் சொல்லியிருந்தீர்கள். அதை நான் எழுதி வைத்துக் கொண்டேன். அதே நேரத்திலே எனக்குள்ளும் பெருமாள் கோவில் போக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக ஏற்பட்டது. முதல் முதலாகக் கோவிலுக்குப் போய் நாராயணனுடைய காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடத் தொடங்கியதிலிருந்து எனக்குள் நிறைய மாற்றங்கள். இப்போது வரைக்கும் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் மனம் சோர்ந்து போனாலும் கோவிலுக்குப் போவதும் கோவிந்த நாமம் சொல்வதும் எனக்கு எவ்வளவோ மன அமைதியைத் தருகின்றது. அதே போல திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் சிவனை வழிபடச் சொல்லியிருந்தீர்கள். அதையும் செய்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் என்று வருந்துவது இப்போது குறைந்து விட்டது. இப்போது எனக்கான எனது ஒரே பிரார்த்தனை எது நடந்தாலும் இறைவனுடனான இந்த பந்தம் தொடர வேண்டும் என்பது தான். இந்த மாற்றத்துக்கெல்லாம் நீங்களும் ஒரு முக்கியமான காரணம். மிக்க நன்றி ஐயா. நான் இலங்கையில் இருக்கிறேன். இந்த மாற்றமெல்லாம் எனக்குள் நிகழத் தொடங்கி ஒரு வருடத்துக்குள் (2023) தமிழ்நாட்டுக்கு வந்து அண்ணாமலையாரையும் ஸ்ரீரங்கம் அரங்கனையும் தரிசிக்கும் பாக்கியத்தையும் இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறார்🙏