Рет қаралды 3,416
NabiMani Pirantha | நபிமணி பிறந்த • Tajudeen Faizee #miladunnabi #madhsong #milad #tamilislamicsong #nabisong
மீலாது நபியின் புகழ்மாலை:👇👇👇
பாடல்: நபிமணி பிறந்த நல் ரபியுல் அவ்வலின்.
வரிகள்✍️✍️: கவிஞர் சலீம் தீன் அவர்கள்.
குரல்🎤: தேரழந்தூர் Dr. A.S. தாஜூதீன் ஃபைஜீ அவர்கள்.
====================================
Lyrics:👇👇👇👇
பல்லவி
நபிமணி பிறந்த
நல் ரபியுல் அவ்வலின்
தலைப்பிறை வானில்
என் விழிகள் பார்க்கவே
சந்தோசம் தான்
உள்ளம் எங்கும் - நபிகள்
மெளலூது தான்
ஊரில் எங்கும்
சரணம் 1
ஹிஜ்ரி ஆண்டதிலே
மூன்றாவது வரிசை
எங்கள் இறை தூதர்
வந்த ரபியுல் அவ்வல்
உலகத்தை ஒளிர செய்ய
ஒப்பில்லா தூதர் வந்த
உம்மிநபி அடையாளம்
ரபியில் அவ்வல்
எங்கும் நபி புகழை பாடும்
ஓசை இருக்கும்
எங்கள் நெஞ்சில் அவரின்
மீது ஆசை இருக்கும்
நேர்வழி காட்ட வந்த
ரசூலல்லாஹ்
ஒரிறைகொள்கைசொன்ன
ஹபீபல்லாஹ்
மண்ணில் பிறந்த
ரபியுல் அவ்வல் - மக்கள்
கொண்டாடிடும்
ரபியுல் அவ்வல்
சரணம் 2
வண்ண இளம் பச்சை
கொடி பறக்கும் எங்கும்
குதுகலமாய்
திங்கள் நபி ஞாபகமே
ரபியுல் அவ்வல்
அண்ணல் நபி சரித்திரத்தை பனிரெண்டு நாட்களுமே
உபதேசம் செய்யும் அழகு
ரபியில் அவ்வல்
மீலாது மாநாடு
எல்லா இடமும்
கோலாகலம் காணும்
ரபியுல் அவ்வல்
காணது காணும்
வண்ண அலங்காரத்தால்
கண்ணுக்கு மிகிழ்ச்சி
தரும் ரபியுல் அவ்வல்
மதினாவில் வாழும்
மன்னர் ஞாபகமே
ரபியில் அவ்வல்