1981-ம் ஆண்டு ராபர்ட் - ராஜசேகரன் (இரட்டையர்கள்) இயக்கத்தில் சுஹாசினி, சந்திரசேகர், தியாகு, ஜனகராஜ், ராஜீவ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "பாலைவனச் சோலை". இந்த இரட்டையர்களில் இசை மீது அதீத ஆர்வம் கொண்ட ராபர்ட் ஒரு சிறந்த கிட்டாரிஸ்டாகவும் வலம் வந்தார். இவர்கள் தான் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள்! தமிழ் திரை உலகில் காதலைப் போன்று நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் இந்தப் படமும் அடங்கும். ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலாகத் தான் இருக்கும் என்ற கருத்தினைத் தகர்த்து மாசற்ற நட்புடன் அவர்கள் இப்படியும் வாழலாம் என்று பாடம் புகட்டி நாற்பத்திமூன்றாண்டு கடந்து விட்டபோதிலும் நட்பிற்கு இலக்கணமாக இப்படத்தை மேற்கோள் காட்டலாம் அல்லவா? பொறுப்பில்லாத, வேலையில்லாத வாலிபர்கள் மத்தியில் பெண் ஒருத்தி கள்ளம் கபடமில்லாத நட்போடும், நம்பிக்கையோடும் பழகுவதை திரை காவியமாக காட்டி அதில் இரட்டையர்கள் வெற்றி பெற்றதை மறுக்க முடியாதல்லவா? ராபர்ட் என்கின்ற ராபர்ட் ஆசிர்வாதம் & ராஜசேகர் இருவரும் 1971 - 74 கல்வியாண்டில் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக ஒளிப்பதிவு படித்து விட்டு 1979-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயபாரதி இயக்கத்தில் தமிழில் வெளியான கடைசி கறுப்பு வெள்ளைத் திரைப்படமான "குடிசை"க்கு ஒளிப்பதிவு செய்தார்கள். "ஒரு தலை ராகம்" திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்த கையோடு, இருவரும் சேர்ந்து ‘பாலைவனச் சோலை’ படத்தை இயக்கி வெற்றி பெற்றனர். முக்கிய வேடத்தில் நடித்த சுஹாசினியின் கதாபாத்திரம் அப்போது எல்லோராலும் பேசப்பட்டது! பிறகு பிரபு நடித்த "மனசுக்குள் மத்தாப்பு", ராம்கி நடித்த 'சின்னப்பூவே மெல்லப்பேசு", "கல்யாண காலம்", "தூரம் அதிகம் இல்லை", "பறவைகள் பலவிதம்", "தூரத்து பச்சை" ஆகிய படங்களையும் இருவரும் சேர்ந்து இயக்கினார்கள். "மனசுக்குள் மத்தாப்பூ" பட நாயகி சரண்யாவை ராஜசேகர் காதலித்து திருமணம் செய்ததை ராபர்ட் விரும்பாததால் அவர்களது நீண்டகால நட்பில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து இரட்டையர்கள் பிரிந்து தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தார்கள் என்பது தானே நிதர்சனம்! அதைவிட நண்பனை இழக்கக் காரணமான அந்தத் திருமண பந்தம் மூன்றாண்டுகளில் முறிந்து போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்! பாரதிராஜா இயக்கிய "நிழல்கள்" படத்தில் கதாநாயகனாக ராஜசேகர் அறிமுகமாகி பிரபலமானதால் தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. திரை உலக வாழ்வில் ஏற்றத்தை தக்க வைக்க முடியாமல் அவரை சின்னத்திரை பக்கம் ஒதுங்க செய்ததும் காலம் செய்த கோலம் அல்லவா? ராஜசேகரன், 64-வது வயதில் உடல் நலம் குன்றி மறைந்தது திரை துறைக்கு பேரிழப்பாகும்! தனி ஆவர்த்தனமாக ராபர்ட் சென்னை திரைப்படக் கல்லூரியில் சில காலம் ஒளிப்பதிவு துறை பேராசிரியராக பணியாற்றினார். பிற்பாடு சில திரைப்படங்களுக்கும், ஆபாவாணன் தயாரிப்பில் பல டி.வி தொடர்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ராபர்ட். கடைசி வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரர்களின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராபர்ட் ஆசிர்வாதம் உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய 68 -வது வயதில் காலமானார். இரட்டையர்கள் இருவரையும் காலம் எடுத்துக் கொண்டபோதிலும் அவர்களது படைப்புகள் மூலம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே நிதர்சனம்! நிற்க. சரி... பாடல்களுக்கு வருவோம்! மலேசியா வாசுதேவன் குரலில், "ஆளானாலும் ஆளு", SPB குரலில், "எங்கள் கதை" & "பௌர்ணமி நேரம்", வாணி ஜெயராம் குரலில், "மேகமே மேகமே" என நான்கு முத்தான பாடல்களுக்கான பாடலாசிரியர் வைரமுத்துவின் கற்பனை வரிகள் சங்கர்-கணேஷின் இசை மெட்டுக்குள் கட்டுண்டு சித்து வேலை செய்ததை என்னவென்று சொல்ல? இனிமையான இப்பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 23-05-2024
@thanjaikaruna82737 ай бұрын
super sir. THANKYOU.
@PS2-60797 ай бұрын
@@thanjaikaruna8273 நன்றி ஐயா
@PS2-60797 ай бұрын
@@thanjaikaruna8273 நன்றி ஐயா
@PS2-60795 ай бұрын
@@thanjaikaruna8273 பாராட்டுதலுக்கு நன்றி
@varsandev59654 күн бұрын
ஹய்யோ super sir
@t.s.kumaragurut.s.kumaragu131510 ай бұрын
வாணிஜெயராம் கு குரலால் என்றும் இனிமை.
@thennarasu33189 ай бұрын
Q q1q
@Nattttey.tttdfftt8 ай бұрын
அந்த காலத்தில் மட்டுமல்ல,, எப்ப பார்த்தாலும் சூப்பர் ஹிட் மூவி....
@sivakumarm94236 ай бұрын
Qqq
@devibalasiva76339 ай бұрын
அருமையான பாடல்கள்! !
@kumarasamykumarasamy29089 ай бұрын
இந்த பாடல்.இப்பொழுது.என்வாழ்க்கைக்கு.பொருத்தம்
@shyamlalc63599 ай бұрын
ഈ സിനിമയുടെ മലയാളം ഇത് ഞാങ്ങളുടെ കഥ കോഴിക്കോട് പുഷ്പ തിയറ്ററിൽ നിന്നു കണ്ടു നല്ല സിനിമ നല്ല പാട്ടുകൾ
@moulanatravels43629 ай бұрын
VALIYA SANTHOSAM...
@irshadahamed626 ай бұрын
தியாகு சந்திரசேகர் ராஜீவ் ஜனகராஜ் நான்கு பேர் உயிரோடு இருக்கிறார்கள்
வைரமுத்தின் அருமையான வரி களுக்கு வாணியம்மா குரல் சங்கர் கனேசுவின் இதமான இசை❤❤❤
@muruganmurugan53112 ай бұрын
பனிரெண்டு வயதில் திரை பட பாடல்கள் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்த படம்.
@venkatesanVenkatesan-u6oАй бұрын
என் மனம் கலக்கமான நேரத்தில் இந்த பாடலை கேட்பேன் வாழ்க்கையை வாழ தேரியாத முட்டாள் பிறந்து என்ன பயன்
@subramanian16776 ай бұрын
வைரமுத்து பாடல் ❤
@Anthonyjeevaraj-mx3gt3 ай бұрын
5பேர்உயிரோடுஇருக்கிறார்கள்
@chellamuthuk19309 ай бұрын
Super song
@muhammedmubarackcp64979 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@beermohamedbeermohamed96889 ай бұрын
பாலைவனசோலை
@sivalingamsivalingam72755 ай бұрын
Evergreen SPB🎉
@sudalaisiva38799 ай бұрын
Super
@sakersaker353229 күн бұрын
❤சேகர்
@Rajendran-yz8lc6 ай бұрын
SUPER SUPER BROTHER
@Aathimoolam-xw7in8 ай бұрын
Very nice
@packthavinithra8 ай бұрын
Super super
@rajendranmcr247210 күн бұрын
Very nice ❤
@sampanthamgovindarasu17958 ай бұрын
Nan 10 th mudi tha pozdu partha padam chidambaram lena that are super movie
@apalaniappanchettiyar64549 ай бұрын
மலேசிய?
@apalaniappanchettiyar64549 ай бұрын
மலேசிய வாசுதேவன்
@apalaniappanchettiyar64549 ай бұрын
இயக்குனர்கள் ராபர்ட் ராஜசேகரன் (இருவரும் இல்லை) இசை 🎤🎼🎹🎶 சங்கர் (கணேஷ்)
@apalaniappanchettiyar64549 ай бұрын
திருமதி வாணி ஜெயராம் அம்மாவுமில்லை.
@muralidharanpadmanabhan54978 ай бұрын
Music by Shankar Ganesh
@beermohamedbeermohamed96888 ай бұрын
இசை ராபர்ட்ராஜசேகர்
@ntsingamyt411910 ай бұрын
S.. P.. B. SUPER. SONG
@packthavinithra8 ай бұрын
Very happy 40 years ❤ memries
@packthavinithra8 ай бұрын
Yes
@birundadevi94589 ай бұрын
தீலீப் மட்டும் இல்லை
@muhammedmubarackcp64979 ай бұрын
Ravipranav
@apalaniappanchettiyar64549 ай бұрын
ஐவரில் மூவர் காலமாக, சந்திரசேகர் & ராஜீவ் மட்டுமே இருக்கிறார்கள்.
@babusherieffbabusherieff39509 ай бұрын
ஜனகராஜ் ?
@selvabharatiselvaraja9 ай бұрын
@@babusherieffbabusherieff3950😊😊😊😊😊😊 yy
@ganesanmeganathan37629 ай бұрын
Thiyagu?
@arumugam81099 ай бұрын
சூப்பர்🙏🌹🙋
@swamysingapore96889 ай бұрын
Ellorum erukuranka
@Anthonyjeevaraj-mx3gt3 ай бұрын
ஜனகராஜ் இருக்கிறார்
@Anthonyjeevaraj-mx3gt3 ай бұрын
தியாகு
@SivasankaranP-x1y6 ай бұрын
Janagarai.thiyagu
@moulanatravels43629 ай бұрын
LIPS MOVEMENT IS NOT SYNCHING WITH SOUND
@MuthuramalingamK-q9l7 ай бұрын
SUPERLOVESONG,SKM
@ghsskkollaischool364710 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@PriyaGopalan-i2g5 ай бұрын
❤❤❤❤
@kamalakkannanpramila78843 ай бұрын
தியாகு.இருக்கர்
@beermohamedbeermohamed96889 ай бұрын
இசை ராபர்ட் ராஜசேகர்
@k.deepakkumarkumar88229 ай бұрын
No , Sankar ganesh
@rajaking91149 ай бұрын
சங்கர் கணேஷ்
@ranganrajan15389 ай бұрын
சங்கர் கணேஷ்
@keethu6662Ай бұрын
80 90 LA Annan santhirisekar pannathyaya Tanush pannitaru annaiku kelp pannakuda all kidaiyathu thanusuku Judith's India various sense annavuku annaiku kidaithiruntha unmanly Levels Vera?
@SaravananSOT9 ай бұрын
🎉
@enterprisesbalaji25968 ай бұрын
All in live janagaraj thiagu rajiv chandrasekar another one in live dont say lie
@farookfarook10129 ай бұрын
Tiago janagaraj Suhasini Chandrashekhar Raju aayiram e 7:51 7:51