பெண் டாக்டர் சம்பவத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் | kolkata woman doctor case | sandeep ghosh arrest why

  Рет қаралды 73,073

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership பெண் டாக்டர் சம்பவத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் | kolkata woman doctor case | sandeep ghosh arrest why
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த இளம் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற கொடூரனை சிபிஐ கைது செய்தது. அவனை கஸ்டடியில் எடுத்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
'சஞ்சய் ராய் ஒருத்தன் தான் பலாத்காரம் மற்றும் கொலையை செய்தவன்' என்று சிபிஐ உறுதியாக கூறி வந்த நிலையில், பெண் டாக்டர் வழக்கில் ஆர்ஜி கர் கல்லூரியின் மாஜி முதல்வர் சந்தீப் கோஷையும் இப்போது கைது செய்திருப்பது திடுக்கிட வைத்துள்ளது.
மாஜி முதல்வர் சந்தீப் கோஷ் உடன் தலா போலீஸ் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அபிஜித் மோண்டல் என்பவரையும் சேர்த்து சிபிஐ கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையின் பின்னணி என்னவென்று பார்க்கலாம்.
பெண் டாக்டர் பலாத்காரம் நடந்த மறுநாளே சஞ்சய் ராய் என்பவனை கொல்கத்தா போலீஸ் கைது செய்தது.
சம்பவம் நடந்த நேரத்தில் பெண் டாக்டர் இருந்த செமினார் ஹால் பகுதிக்கு சஞ்சய் ராய் சென்று வந்த சிசிடிவி காட்சி, பெண் டாக்டர் சடலம் பக்கத்தில் சஞ்சய் ராய் விட்டு சென்ற ப்ளூடூத் ஹெட்செட் கிடைத்தது.
பிரேத பரிசோதனை ரிப்போர்ட், தடய அறிவியல் அறிக்கையும் சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்பதை காட்டிக்கொடுத்தன.
சம்பவத்தின் போது உயிர் தப்பிக்க கொடூரனுடன் பெண் டாக்டர் கடுமையாக போராடினார். அதில் கொடூரனின் தோல் மற்றும் ரத்தம் பெண் டாக்டரின் நக இடுக்கில் இருந்தது.
அதன் டிஎன்ஏ, சஞ்சய் ராய் டிஎன்ஏவை சோதித்த போது. இரண்டும் ஒன்றொடொன்று மேச் ஆகின. இது தான் சஞ்சய் ராயை வலுவாக சிக்க வைத்த மிகப்பெரிய எவிடன்ஸ்.
இருப்பினும் சஞ்சய் ராயை தாண்டி இந்த சம்பவத்தில் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பெண் டாக்டரின் சக தோழிகள், உடன் வேலை பார்க்கும் டாக்டர்கள், பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர்.
குறிப்பாக கல்லூரி முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீது அவர்களது சந்தேகப்பார்வை குவிந்தது.
அவர் மருத்துவமனையில் நிறைய நீதி மோசடியில் ஈடுபட்டார். அதை எல்லாம் பெண் டாக்டர் கண்டுபிடித்து விட்டார்.
எனவே அவரை தீர்த்துக்கட்ட நடந்த சதி தான் பெண் டாக்டர் கொலை என்று குற்றம் சாட்டினர்.
சந்தேகத்தை தீவிரப்படுத்துவது போல் சில சம்பவங்களும் நடந்திருந்தன.
அதாவது, வழக்கு பதிய போலீஸ் 14 மணி நேரம் தாமதம் செய்தது.
அவசர அவசரமாக போஸ்ட் மார்ட்டம் முடித்து பெண் டாக்டர் உடலை தகனம் செய்தனர்.
பெண் டாக்டர் கொலை நடந்த பகுதியில் உடனடியாக சீரமைப்பு பணி நடந்தது. க்ரைம் சீன் தடையங்கள் அழிக்கப்பட்டன.
இவ்வளவு சந்தேகங்கள் ஏற்பட்டதால் தான் வழக்கு கொல்கத்தா போலீசிடம் இருந்து சிபிஐ கைக்கு போனது.
சஞ்சய் ராய்க்கு அடுத்து, சந்தீப் கோஷை தீவிரமாக விசாரித்து வந்த சிபிஐ, மருத்துவமனையிலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் அதிரடியாக சோதனை நடத்தியது.
மருத்துவமனையில் நிதி முறைகேடு நடந்தது உறுதியானது. இது தொடர்பாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து சந்தீப் கோஷை ஏற்கனவே சிபிஐ கைது செய்தது.
ஆனால் அவரை பெண் டாக்டர் வழக்கில் அப்போது சேர்க்கவில்லை.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சந்தீப் கோஷ் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்தது. அவர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தியது. விரைவில் தங்கள் வழக்கிலும் சந்தீப் கோஷை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் தான் சம்பவம் நடந்து 45 நாட்கள் கழித்து பெண் டாக்டர் வழக்கிலும் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்து அதிர வைத்துள்ளது.
பெண் டாக்டர் கொலை தொடர்பான ஆதாரம், சாட்சிகளை அவர் அழிக்க பார்த்த குற்றச்சாட்டுகளுக்காக சந்தீப் கோஷை கைது செய்தோம் என்று சிபிஐ கூறி உள்ளது.
சம்பவம் நடந்த உடனேயே பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை அவர் தெரிவிக்கவில்லை. கொலை என்று தெரிந்தும் தற்கொலை என்று மூடி மறைக்க பார்த்தார்.
பின்னர் உடனடியாக போலீஸ் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க பல தடங்கல் இருந்தார். க்ரைம் சீனில் இருந்த தடயங்களை அழித்து தப்பிக்க பார்த்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்காக தான் அவரை கைது செய்துள்ளோம் என்று சிபிஐ சொன்னது.
ஏற்கனவே நிதி முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் சந்தீப் கோஷ் கைது தொடர்பான ஆவணம் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
பெண் டாக்டர் வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அது பற்றி அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.
அவருடன் கைதாகி இருக்கும் போலீஸ் அதிகாரி அபிஜித் மோண்டலையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
பெண் டாக்டர் வழக்கு தடயங்களை அழிக்க துணை போனதாகவும், வழக்கு பதிய 14 மணி நேரம் தாமதம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரிடம் இதுவரை 8 முறை சிபிஐ விசாரணை நடத்தி இருக்கிறது. அனைத்து முறையும் அவர் முன்னுக்குப்பின் முரணாகவும், மாறுபட்ட தகவல்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கையால் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு இன்னும் நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினார்.
அதே போல் போலீஸ் அதிகாரியை சிபிஐ கைது செய்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.#kolkatawomandoctorcase #sandeepghosharrestwhy

Пікірлер: 50
@sppspp2007
@sppspp2007 3 күн бұрын
தண்டனை கடுமையாக இருந்ததால் தான்.. மீண்டும் இது போல் நடப்பது குறையும்..👍🎇👁️👉☠️🦅🤔🕰️🕉️♾️⚛️
@pmkrishnan5625
@pmkrishnan5625 3 күн бұрын
இவர்களை முச்சந்தியில் துக்கிலிட வேண்டும்
@swamivishvananda6740
@swamivishvananda6740 3 күн бұрын
எல்லா தவறுக்கும் காரணம் பணம் பணம் ஒன்று தான்..... பேராசையும்
@Ramani143
@Ramani143 3 күн бұрын
எஸ் எஸ் எஸ் 😢😮
@gokulangokulan6332
@gokulangokulan6332 3 күн бұрын
குற்றவாளி எக்காரணம் கொண்டும் தப்பித்து விடக்கூடாது அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கினால் தான் abhaya அம்மாவுக்கு (பெண்டாக்டருக்கு) ஆன்மாவுக்கு சாந்திகிடைச்சமாதிரியிருக்கும். ஜெய்ஹிந்த்
@panjaboodhaa
@panjaboodhaa 3 күн бұрын
சீக்கிரம் எல்லாம் ராஜினாமா செய்ங்க அப்பதான் டாக்டருக்கு நீதி கிடைக்கும் நீதி வெல்லட்டும்
@ganaesans3532
@ganaesans3532 3 күн бұрын
கடுமையான குற்றச் சம்பவங்களில் முதல் குற்றவாளிகள் பெரும்பாலும் அதிகாரம் செலுத்தும் பதவிகளில் இருப்பவர்களாவே உள்ளனர். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தால் தப்பிக்க முடியாது என்ற உணர்வு அனைவரிடத்திலும் ஏற்பட வேண்டும்.
@ArumugamPillai-ry7pi
@ArumugamPillai-ry7pi 3 күн бұрын
பாவியை என்கவுண்டர் செய்யுங்கள
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 3 күн бұрын
Good 😮
@RaghunathanR-g4m
@RaghunathanR-g4m 3 күн бұрын
True involvement of tmc.
@marimuthualkrishnan7166
@marimuthualkrishnan7166 2 күн бұрын
We want justice
@subathrachathu3727
@subathrachathu3727 3 күн бұрын
பணத்தை வைத்து சட்டத்தை ஏமாற்ற முடியாத நிலை வரவேண்டும். சட்டம் ஓர் இருட்டறை என்ற நிலை மாற வேண்டும். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் பணத்தை வீசி எறிந்து வெளி வர முடியாத அளவிற்கு கடுமையாக்கி அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். வாழ்த்துக்கள்.
@gokulangokulan6332
@gokulangokulan6332 3 күн бұрын
We want justice justice for Calcutta doctor abhaya jai hind
@sundarrajan2151
@sundarrajan2151 2 күн бұрын
Good,good news
@isaiah5296
@isaiah5296 3 күн бұрын
Mamta is sleeping
@jenovajeyaprakash5411
@jenovajeyaprakash5411 2 күн бұрын
Good explanation thank you bro
@user-qb4mf8iy7y
@user-qb4mf8iy7y 3 күн бұрын
கமிஷ்னர் எப்ப கைது செய்விற்கள்
@AJAY-c8v5g
@AJAY-c8v5g 3 күн бұрын
Super ❤
@manimehalaiseenivasan9194
@manimehalaiseenivasan9194 3 күн бұрын
A1 Sandip Ghosh A2 ???? TMC doctors A3 Vinit Goyal A4 Sho Abhijit Mandal A5 Sanjay Roy
@jayamvijaya1699
@jayamvijaya1699 3 күн бұрын
Intha case ippa mudivu varathu. Innum long process iruku.
@krishsugusankar1059
@krishsugusankar1059 4 сағат бұрын
We want justice for female kolkatha doctor 🙏
@sukhino4475
@sukhino4475 3 күн бұрын
CBI. Has so far done excellent,but the end may not be professional
@srinivasan7263
@srinivasan7263 3 күн бұрын
👍
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 күн бұрын
மத்திய அரசின் CBI , மேற்கு வங்க முதல்வரை நெருங்க முடியவில்லையே? தமிழக உளவுத்துறை அரசு அதிகாரிகளிடம் விசாரணை ஒப்படைத்திருக்கலாம். மத்திய அரசின் அதிகாரியை மதுரையில்,கைது செய்த சம்பவம் மறக்க முடியுமா?
@sureshmani2822
@sureshmani2822 3 күн бұрын
In jail A class Or A+ class may be come heart attack and will admit hospital for future news super democratic law
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 3 күн бұрын
சந்தீப் கோஷ் பலாத்காரம் செய்து இருப்பான்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 2 күн бұрын
Mamta the sole reason for all WB rowdysms problems
@indrasukumar5564
@indrasukumar5564 2 күн бұрын
It’s going to be two months …The People who suffering till now are Victim’s side and the supporting Drs… Justice delayed is Justice Denied… CM should RESIGN on Moral ground
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 2 күн бұрын
Verybad legal system we have, for the wound in hands why so much tests or mirror to see the wound
@velayuthanmarimuttu823
@velayuthanmarimuttu823 3 күн бұрын
Highly Planed and did
@sankaranarayanamurthy2021
@sankaranarayanamurthy2021 3 күн бұрын
Sandeep gosh koottali mamtha mu...ai
@shukriyarafaideen3415
@shukriyarafaideen3415 2 күн бұрын
Allah will punish them..
@NussDeen-kn4hw
@NussDeen-kn4hw Күн бұрын
Mamtha vukku ipdi pannunga appo than neethi kidaikum doctor kku
@sujamathanmohan3176
@sujamathanmohan3176 3 күн бұрын
Sandeep youuuuuiuuuuu thoooooo
@mahasarav1095
@mahasarav1095 3 күн бұрын
Thunkala podunga please
@user-wd3ky1ew2c
@user-wd3ky1ew2c 2 күн бұрын
Avanai kallal adithukollanum
@RavichandranS-ns1fo
@RavichandranS-ns1fo 3 күн бұрын
Waste news
@jaganjagadesan8035
@jaganjagadesan8035 2 күн бұрын
Kadaisi varaikum antha moondru per yarnu sollavey illai. Palaiya kathaiyai solli. Views vangringa ayyo kadavuley.
@arockiyamary458
@arockiyamary458 2 күн бұрын
குற்றவாளிஏன்இன்னும்பிடிக்கமுடியலையா
@krishsugusankar1059
@krishsugusankar1059 4 сағат бұрын
We want justice for female kolkatha doctor 🙏
@krishsugusankar1059
@krishsugusankar1059 4 сағат бұрын
We want justice for female kolkatha doctor 🙏
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15