Рет қаралды 188
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” (மத்தேயு 7:12)
பொன்னான பிரமாணம் என்பது தேவனுடைய நீதியை அடிப்படையாகக்கொண்டது. இது மற்றவர்களின் உரிமையை மதிக்கும் குணம் கொண்டது. தேவனுடைய பிள்ளைகளாகிய நம்மிடத்தில் பொன்னான பிரமாணத்திற்கு குறைவான எதையும் தேவன் நம்மிடம் விரும்புகிறதில்லை.
ஆகையால் இந்த பொன்னான பிரமாணம் எப்படிப்பட்டது என்பதைப்பற்றியும் அதை நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதைப்பற்றியும் இந்தப்புத்தகத்தை படிப்பதின் மூலமாக கற்றுக்கொள்ளலாம்.
நீதியின் பிரமாணமாகிய பொன்னான பிரமாணம் தொடர்பாக சகோ. ரசல் அவர்களினால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகமாகும்.
மேற்கண்ட புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணையதலத்தை அனுகவும்
foodfornewcrea...