Рет қаралды 242,027
#aliyardam #valparai #pollachi #incredibleindia #gptamilvlogz #pollachitovalparai
பொள்ளாச்சி ஆழியாறிலிருந்து வால்பாறை பயணம் மிகவும் அருமையா இருந்தது. 40 கொண்டைஊசி வளைவுகளை கொண்டு ஏற்றமும் இரக்கமும் நிறைந்த ஒரு சவாலான பயணமாக இருந்தது. வால்பாறை மலையில் பயணம் செய்யும் போது ஒருசில இடங்களில் கீழ உள்ள ஆழியார் அணையின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம். எங்கள் பயணத்தின் போது வரையாடுகள் மற்றும் சிங்கவால் குரங்குகளை காணமுடிந்தது.
சவாலான பயணமாக இருந்தாலும் கொட்டிக்கிடக்கக்கூடிய இயற்க்கை அழகு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. எங்கள் பயணத்தின்போது பெய்த மிதமான மழைத்தூறலும் அதனுடன் கலந்த குளிர்காற்றும் மிக மிக அருமையாக இருந்தது.
வால்பாறை நெருங்கும் போது அங்கு நிலவக்கூடிய சூழல் நம்மை காரிலிருந்து இறங்கி சாலையில் நடக்க ஆசையை தூண்டுகிறது. கண்ணுக்கு எட்டியவரை அமைந்துள்ள தேயிலை காடுகள் அதன்மேல் படர்ந்துள்ள மேகக்கூட்டம் நமது கண்களுக்கு விருந்தாக அமைகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் ஒருமுறை இந்த வழித்தடத்தில் பயணம் செய்து இங்கு கொட்டிக்கிடக்கும் இயற்க்கை அழகை கண்டுகளியுங்கள். நீங்கள் ஏற்கனவே சென்றிருந்தால் உங்கள் பயணத்தின் அனுபவத்தை Comment -ல் சொல்லுங்கள்.
பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு 30 நிமிடத்திற்கு ஒரு அரசு பேருந்து செல்கிறது. பேருந்து பயணத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இயற்க்கை அழகை ரசிப்பது என்பது ஒரு அலாதி இன்பம்தான்.
உங்களுக்கு இந்த video பிடித்திருந்தால் ஒரு Like செய்துவிட்டு இந்த சேனலை Subscribe செய்யுங்கள்.
-நன்றி
Please Share, Comment, Like & Subscribe
ஆழியாறு அணை சுற்றுலா பொள்ளாச்சி - • 🌤️கோடை சுற்றுலா 😎ஆழியா...