நடிகர் லல்லு அவர்களின் நடிப்பு சம்பந்தமான அனுபவங்கள் நடிகனாக வேண்டியவன் என்னென்ன விஷயங்களில் மேற்கோள்களை எடுத்துக்கொள்ள வேண்டும், இப்போது நடிக்க தயாராகும் புதிய நடிகர்கள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் அதை எவ்வாறு சமாளிப்பது குடும்பம் சம்பந்தமான நடிகர்கள் எவ்வாறு குடும்பத்திடம் தன் நடிப்பு தேடலை புரிய வைத்து சினிமாவை எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்று அடுக்கடுக்காக அனைவரும் மனதிலும் ஆழமாக இருக்கின்ற கேள்விகளுக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் பதில் சொன்ன நண்பர் லல்லு அவர்களின் இந்த நடிப்பு சம்பந்தமான கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நமது பியூர் சினிமாவின் பார்வையாளராக இருந்த அவர் இப்பொழுது கலந்துரையாடல் நடத்தும் அளவிற்கு முன்னேற்றம் அடைய காரணம் பியூர் சினிமாவிற்கு வந்ததுதான் என்று சொல்லியது பியூர் சினிமாவை முறையாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பது அனைவருக்கும் புரிய வைத்தது இது போன்ற சினிமாவிற்கான தேடலோடு வருகின்ற இளைஞர்களுக்கு வழிகாட்டுவது ஏன் தனது எதிர்கால எல்லையாக கொண்டு செயல்படும் திரு அருண் சகோதரர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்