ஏன் படைத்தானோ ? 😓 👍 இறைவனும் என்னை 🙏 😓 👍 மனதில் எனக்கு 😓 💗 👍 நிம்மதி இல்லை ... 💔 👍 @ Pala Ni 👍
@r.chinnadurai136516 күн бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மிகவும் எதார்த்தமான நடிகர் ரொம்ப எதார்த்தமா நடித்த அருமையான படம் ஓவர் ஆக்டிங் செய்யாத ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான் இந்தப் பாடலை கேட்கும் போது சமுதாயத்தில் பல இளைஞர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது பலரும் பெண்களின் சோகத்தையும் வேதனையும் பார்க்கிறார்கள் ஆனால் உலகத்தில் பல ஆண்கள் தனது சோகத்தையும் துன்பத்தையும் தவிர்த்து மனதில் போட்டுக் கொண்டு இதேபோல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@gopalb76327 ай бұрын
விபரம் தெரியாத வயதில் இருந்தே இன்று வரை இந்த பாடல் மிக மிக அதிகம் பிடிக்கும்.
@palani5433 Жыл бұрын
பைத்தியம் தீர 👍 வைத்தியம் இல்லை 👎 உலகில் எனக்கு 🌏 😓 👍 ஒரு வழி இல்லை ... 👎 @ Pala Ni 👍
@srian66073 ай бұрын
🎉 இந்த படம் நடிக்கும் போது சூப்பர் ஸ்டாருக்கு வயது வெறும் 29 தான். இன்றைய 50 வயது நடிகர்கள் கூட நடிக்க தயங்கும் கதாபாத்திரம் அது. அதனால்தான் அவர் இன்றும் சூப்பர் ஸ்டார் ஆகவே இருக்கிறார்.
@Tamizhan7473 ай бұрын
Yes...well Matured Acting in entire movie.
@BALAMURUGAN-gf6fn5 ай бұрын
நானும் இந்த பாடலை கேட்டு கண் கங்கி சோகம் தாங்காமல் அழுகிறேன் உடன் பிறந்த தங்கைக்கு இளைப்பு நோய் மற்றும் சைனஸ் மற்றும் சுவாச பிரச்சினை மற்றும் காது கேட்கும் திறன் பாதிப்பு 40 வயது நெருங்கிய அவளுக்கு பல வைத்தியங்கள் பார்த்தும் குணமாகாத நிலை அவளின் மாறுபட்ட புரிதலாலும் குணங்களாலும் பெற்றோர்கள் இல்லாத நிலையில் அண்ணியை அனுசரித்து போகததாலும் மேலும் அண்ணியின் மாறுபட்ட குணங்களாலும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பொறுக்க முடியாமல் தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற முதுமொழிக்கு ஏற்றாற் போல் விரக்தி யில் முழிக்கிறேன்.இந்த உடல் உயிர் உலகம் சுற்றம் எல்லாம் மாயை என்று உணர்ந்தால் அன்பு ஆசைபாசம் என்பது தானாகவே வரும். எல்லாம் வல்ல ஆண்டவனுக்கே வெளிச்சம்.
@Anbu007_3 ай бұрын
நீங்கள் எனக்கு கடவுளாக தெரிகின்றீர்கள்.
@kannanmvngmail3 ай бұрын
Visit Lord Bramha temple near Samayapuram Trichy. Submit your sisters horoscope on the feet of Lord Brahma. she will get a big relief from sufferings
@Gayathri-uu4tyАй бұрын
நீங்கதான் உண்மையான அண்ணன்... 🙏
@balrajbalraj2311Ай бұрын
கடவுள் அருள் புரிவார்
@MadanVigky26 күн бұрын
😢😢
@rathnavel65 Жыл бұрын
ராஜா என்பார் மந்திரி என்பார்...புவனா ஒரு கேள்விக்குறி ரஜினிகாந்த் சிறந்த நடிப்பை வழங்கிய படங்களில் ஒன்று, 'புவனா ஒரு கேள்விக்குறி'. சம்பத் என்ற கதாபாத்திரமாக அவர் வாழ்ந்திருந்தார் என்பது இந்தப் படத்துக்கு அப்படியே பொருந்தும். வழக்கமாக ஹீரோவாக நடிக்கும் சிவகுமார் நெகட்டிவ் கேரக்டரிலும், நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த ரஜினி, நல்லவராகவும் நடித்த படம் இது. அதுவே இந்தப் படத்துக்குப் பலமான ஒன்றாக மாறிப்போனது. மகரிஷியின் கதைக்கு பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தை எம்.ஏ.எம் பிலிம்ஸ் சார்பில் என்.எஸ்.மணி தயாரித்திருந்தார். சிவகுமார், ரஜினி, சுமித்ரா, ஜெயா, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். நாகர்கோவிலில் தெருவில் துணிவிற்பவர்கள், நண்பர்களான நாகராஜும் (சிவகுமார்) சம்பத்தும் (ரஜினிகாந்த்). நாகராஜ், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி, இருவரும் துணி கொள்முதலுக்காக சென்னைக்கு ரெயிலேறுகிறார்கள். உடன் பயணிக்கும் முத்து (ஒய்.ஜி.மகேந்திரன்) திடீரென இறந்துவிட, அவர் சூட்கேஸில், ஏகப்பட்ட பணம், சிவகுமார், அதை அபகரித்துக் கொள்வார். ரஜினிக்கு அதில் விருப்பமில்லை. முத்துவின் சகோதரி புவனாவுக்கு (சுமித்ரா) இவர்கள் மீது சந்தேகம். விவரம் கேட்க வரும் அவரை மயக்கி, காதல் வலையில் விழவைப்பார் நாகராஜ். புவனா தாய்மை அடைய, வழக்கம் போல அவரை கழற்றிவிட திட்டம் போடுவார். தான் துணிவாங்கி வாங்கி வியாபாரம் செய்யும் முதலாளி, தன் மகள் மனோகரியை (ஜெயா), நாகராஜுக்கு திருமணம் செய்து வைத்து துணிக்கடை வைத்துக்கொடுப்பார். திருமணமாகாமல் புவனாவுக்கு ஆண் குழந்தைப் பிறக்கும். அவருக்கு துணையாகச் சம்பத் இருப்பார். வெளியுலகிற்கு இவர்கள் கணவன்- மனைவி போல் வாழ்வார்கள். வீட்டுக்குள் தனித்தனியாக வசிப்பார்கள். திருமணமாகி சில வருடங்களாகியும் நாகராஜுக்கு குழந்தை இல்லை. அதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவரும். இதனால் தன் மகனையே தத்தெடுத்து வளர்க்கலாம் என்று நாகராஜ் கேட்க, புவனாவும், சம்பத்தும் மறுத்துவிடுகிறார்கள். இப்போது குழந்தை, நோயால் உயிருக்குப் போராடும். நள்ளிரவில் குறிப்பிட்ட மருந்து வேண்டும் என்பார் மருத்துவர். அது நாகராஜ் கடையில் இருக்கும். ஆனால், அவர் குழந்தையைத் தனக்கு தந்துவிடச் சொல்லி விலை பேசுவார். அப்போது வேறொரு இடத்தில் இருந்து மருந்து வாங்கி வந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவார் சம்பத். இப்போது தனது தவறை உணர்ந்து திருந்துவார் சிவகுமார். பின்னர், நெஞ்சுவலியால் சம்பத் உயிர் துறக்க, அவரை கணவனாக ஏற்று வெள்ளைப் புடவையுடன் வாழ்வாள் புவனா. இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய 'விழியிலே மலர்ந்தது', 'பூந்தென்றலே', 'ராஜா என்பார் மந்திரி என்பார்' ஆகிய மூன்று பாடல்களும் ஹிட். அப்போது ரஜினிக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்காது. வாத்தியார் லட்சுமி நாராயணன் என்பவர் அவருக்கு வசனங்களைச் சொல்லிக்கொடுத்தார். முதல்நாள் படப்பிடிப்பில் வசனங்களைப் பார்த்து ரஜினி பயந்துவிட்டார். பாலசந்தர் சார் படத்துல மொத்த வசனமும் குறைவா தான் இருக்கு. நீங்க ஒரு காட்சிக்கே இவ்வளவு வசனம் கொடுக்கிறீங்க?. எனக்கு அது கஷ்டம்' என்றார் ரஜினி. பிறகு 'நீங்க நாலு நாலு வரியா உங்க ஸ்டைல்ல பேசுங்க, ஒரே ஷாட்டில் எடுக்காம பிரிச்சு எடுக்குறோம்' என்றார் இயக்குநர் முத்துராமன். பிறகு ஒப்புக்கொண்டார் ரஜினி. ரஜினி நடிப்பில் 25 திரைப்படங்களை இயக்கி இருக்கிற எஸ்.பி.முத்துராமனும், ரஜினியும் இணைந்த முதல் திரைப்படம் இது. 2.9.1977-ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். -நன்றி "இந்து தமிழ்" 2.9.23
@RamPrakash-s2s9 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே சொல்ல முடியாத உணர்வு வருகிறது😢😢😢
@palani5433 Жыл бұрын
படம் : புவனா ஒரு கேள்விக்குறி ( 1977 ) நடிகர் : ரஜினிகாந்த் நடிகை : சுமித்ரா வரிகள் : பஞ்சு அருணாசலம் இசை : இளையராஜா பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி இயக்கம் : SP.முத்துராமன் சிறப்பு 👌 : மெல்லிய சோக பாடல் 💔 👍 @ Pala Ni 👍
@kulothungans14336 ай бұрын
சோக பாடலிலும் ரஜனி ஸ்டைல காட்டி விடுவது தான் ஸ்பெஷல்!
@SangeethaRaja-o1t3 ай бұрын
❤
@ashokkuppusamirao4115Ай бұрын
பஞ்சு அருாச்சலம், இளைய ராஜா, பாலசுப்ரமணியம்(அற்புதம்) மற்றும் ஜானகி அம்மாள் ஒரு டீம்மாக மனதை கொள்ளை அடித்து விட்டனர்.. மனம் குளிர்ந்த பாராட்டுகள்.
அனுபவிக்க யோகம் இல்லை. எனக்கு என்று என்ன உண்டு ஏன் படைத்தான் இறைவன் என்னை
@maheswaryraj8222Ай бұрын
ஆனால் அன்பு பாசம் உறவு எல்லாமே மாயை தான். இவை அனைத்தும் ஒருவரை கட்டி போடும் கயிறு . அறுத்து எறிந்த பிறகு தான் உண்மை யான விடுதலை. எதிர்பார்ப்பு இல்லாத அன்பையும் உதவியையும் யாருக்கு வேண்டும் என்றாலும் காட்டி வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கும். இல்லாவிட்டால் மாயையில் வீழ்ந்து மீளமுடியாத துன்பம் மட்டுமே.
@SaravanaKumar-y7b17 күн бұрын
இந்த பாடல் என் நெஞ்சில் பழைய ஞாபகங்கள் பதிவுசெய்து வருகிறது
@manikandana9811 Жыл бұрын
பாஸ் மனசு தான் ஏமாறலாம் ஆனா உடம்பு தான் ஏமாற கூடாது காதல் எனும் போலி பயணத்தில்
@Chokkalingam-vl2iy3 ай бұрын
வாழ்க்கை தத்துவ பாடல் பணம் இருந்தால் தான் வாழ்க்கை இல்ல உண்மையான பாசம் தர ஒரு கூட்டம் இருந்தால் அதுவும் ஒரு வாழ்க்கை
@sivakamin84828 ай бұрын
இந்த ஒரு பாட்டிலேயே கதைமுழுவதும் வந்து விடும். ஆண் குரல்: அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்.அதற்கு பதிலாக பெண் குரல்: அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்? தமிழ் மொழி விளையாடும் வரிகள். தமிழுக்கு ஈடு இணை எந்த மொழியும் வரமுடியாது. பாடல் எழுதிய கவிஞரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@RevaSavithiri7 ай бұрын
TV
@elangovankailasham996020 күн бұрын
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள் ..
@sivakamin848220 күн бұрын
@@elangovankailasham9960 நன்றி!
@aluriprasad21446 ай бұрын
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ கல்லுக்குள் ஈரம் இல்லை நெஞ்சுக்கும் இரக்கம் இல்லை ஆசைக்கு வெட்கம் இல்லை அனுபவிக்க யோகம் இல்லை பைத்தியம் தீர வைத்தியம் இல்லை உலகில் எனக்கு ஒரு வழி இல்லை ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ நிலவுக்கு வானம் உண்டு மலருக்கு வாசம் உண்டு கொடிக்கொரு கிளையும் உண்டு எனக்கென்று என்ன உண்டு ஏன் படைத்தானோ இறைவனும் என்னை மனதில் எனக்கு நிம்மதி இல்லை ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு ராஜகுமாரன் உண்டு தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன் நிலவுக்கு களங்கம் என்று உறவுக்கு விலகி நின்றேன் மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ உலகில் உனக்கு சரித்திரம் உண்டு ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு ராஜகுமாரன் உண்டு நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும் ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு ராஜகுமாரன் உண்டு
@pkumaran39373 ай бұрын
பைத்தியம் திர வைத்தி 2:40 யம் இல்லை உலகில் எனக்கு ஒரு ஜீவன் உண்டு என் செல்வி
@veemeshkhanna37454 ай бұрын
நானும் இதே நிலையில் தான் உள்ளேன். என் வாழ்கை இந்த பாடல். 👌👌
@ramadossk42144 ай бұрын
Ssssssssssss
@neahemiahkumaresan80994 ай бұрын
நான் 10 வயதிலிருந்து கேட்கும் பாடல் வாழ்கை தத்துவத்தை கூறும் பாடல்
@divya7785 ай бұрын
ஏன் படைதானோ?. இறைவனும் என்னை உலகில் எனக்கு நிம்மதி இல்லை 👍 காலங்கள் பல கடந்தாலும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல் 👌 ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த துன்பங்களை நீங்க சோகத்திலும் சுகமான அற்புதமான பாடல் வரிகள் மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் இப்பாடலை பாடிய SP அவர்களுக்கு நன்றி நன்றி🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐 அன்று முதல் இன்று வரை நான் ரசித்து கேட்கும் அற்புதமான பாடல் இது போன்ற பாடலை எழுத இனி உலகில் எவர் உண்டோ?+❤❤❤❤❤❤, ,💐💐💐💐🙏🙏🙏💐💐💐 நிம்மதி இல்லை
You should have been born some 50 to 60 years ago to realise about him.
@rambayt29 күн бұрын
உங்களுக்கு சுயமரியாதையும், அதனால் சமவுரிமையும், அதனால் முன்னேற்றமும் வரவேண்டும் என்று தான் பெரியார் பாடுபட்டாரே ஒழிய, உங்களுக்கு அவரை பிடிங்க வேண்டும் என்பதற்காகவோ, நீங்கள் அவரை பாராட்டி, கொண்டாட வேண்டும் என்பதற்காகவோ இல்லை!