தார தரதாரோ தாராரோ | Thalattu | Ayya Vision

  Рет қаралды 170,946

Ayya Vision - அய்யா விஷன்

Ayya Vision - அய்யா விஷன்

Күн бұрын

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர்
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு வலுவான அய்யா வழியை வளர்ப்போம்!
Subscribe Here👉 bit.ly/Subscri...
GN.SIVACHANDRAN - அருளிசை வழிபாடு - Naranaya Song - • Narayana Ayya Narayana...
உகப்படிப்பு - • உகப்படிப்பு | Ayya Vai...
உச்சிப்படிப்பு - • உச்சிப்படிப்பு | Ayya ...
இந்த சேனல் கிராம வாழ்க்கை, பக்தி பாடல்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும்.
அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் .
ஏகம் ஒரு பரமான இறைவன், தான் படைத்து இயக்கி வரும் இந்த பூவுலகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதார புருஷனாக தோன்றுகிறான். ஆதியில் தேவர் எல்லாம் கூடி தேவாமிர்தம் அருந்தி திருக்கயிலையில் இருக்கையிலே, எங்களுக்கு எதிரி உண்டோ? என சிவனிடம் கேட்க, ஈசன் திருவேள்வி தனை வளர்த்து ஈசனே அதில் இறங்கி கேள்விக்கு பதிலாக வேதகாண்டம் பாடி வையகத்தில் இறங்கையில், வேள்விதனில் குரோணி என்கிற கொடிய அசுரன் உடன் பிறந்தான், குரோணியானவன் பிறந்த சில நாட்களில் தேவர்களையும், கயிலையையும் அழிக்க முற்படும் போது அவனை அழிக்க நாராயணர் சிவனை நோக்கி தவம் இருக்கிறார், அசுரனை அழிக்க வரமருளிய சிவபெருமான் நாராயணரிடம் “குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க வேண்டும், அவ்வாறு செய்யும் போது அவனின் ஒவ்வொரு துண்டமும் அசுரனாக பூமியில் பிறக்கும், அப்படி பிறக்கும் அசுரர்களை அழிக்க நீரே உத்தமராக அவதரிக்க வேண்டும்” எனக் கூறி வரமருள, நாராயணர் சம்மதித்து குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதம் செய்கிறார். அந்த யுகமான நீடிய யுகம் அத்தோடு முடிகிறது. அதன்படி தர்மத்தை காக்க யுகாயுகங்கள் தோறும் அவதரித்த நாராயணர் சதுர மற்றும் நெடிய யுகங்களில் தோன்றி குரோணியின் துண்டத்தில் இருந்து தோன்றிய அசுரர்களான குண்டோமசாலி, தில்லை மல்லாலன், மல்லோசி வாகனென்ற அசுர்களை அழித்தார். பின் கிரேதாயுகத்தில் முருகப் பெருமானாகவும், நரசிம்மராகவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமராகவும் அவதரித்து அந்த யுக அசுரர்களான சிங்கமுகா சூரன், சூரபத்மன், இரணியன், இராவணன் என்ற அசுரர்களையும் அழித்தார். துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்து அந்த யுக அசுரர்களான துரியோதனனையும், தக்கனையும் வதைத்து பாண்டவர்களுக்கு குருநாடு பட்டமுஞ் சூட்டி அரசாள வைத்து தர்மத்தை நிலை நாட்டினார். குரோணியின் ஒவ்வொரு துண்டமானதும் அசுரர்களாக பிறந்து அழிக்கப்படும் போது நாராயணர் புத்திமதி அருள அதை அவன் கேட்க மறுக்கவே இறுதியாக தன்னால் பிறந்து தன்னால் அழிவாய் எனக் கூறியிருந்தார். பின்னர் குரோணியானவன் கலியனாக வருவானென அறிந்து கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கி, தன்னை சுமந்திருந்த பாசமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்திவிட்டு கயிலையங்கிரி செல்லும் வழியில் கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்து, ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி, ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திரகாளியிடத்தில் பாலரையுங் கொடுத்து, ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்தார்.
அய்யா கலியுகத்தில் அவதரித்தல்: இந்நேரம் தேவர்களின் வாக்கினால் ஈசுரர் தாமே குரோணியின் கடைசி துண்டமான ஆறாவது துண்டமதை கலியானாக பிறவிச் செய்ய கலியுகம் பிறக்கிறது. முந்தைய யுகத்தில் துரியோதனாக பிறந்த குரோணியானவன் இவ்யுகத்தில் கலியனாக பிறக்கிறான். நீசக் கலியனானவன் பரம்பொருள் சிவபெருமானிடம் இப்பூலோகத்தை அரசாளும் வரங்களையும், நீதி மாயன் சக்கரமும், பல்வித சாத்திர வித்தைகளும், மரணம் வரா வித்தைகளும் பெற்று வரும் போது, ஸ்ரீரங்கரான நாராயணர் ஆண்டிவுரு எடுத்து, தலை விரித்துக் கந்தைகலை பூண்டு எவ்வித ஆயிதமும் இல்லாமல் நீசனிடம் சென்று - “நீ ஈசரிடம் பெற்ற வரங்களிலே, இந்த தேச இரப்பனுக்கு சிறுக ஈயு. தராதே போனால் சண்டைக்கு வா?” என்றார். உடனே புத்தியில்லா நீசன், “இப்போது நான் உன்னோடு சண்டையிட்டால் பெண்டாட்டிச் சிரிப்பாள்!” ஆகவே “பண்டாரமென்றும் பரதேசியானவரைத் தண்டரளக் கந்தைத் தலை விரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன், அவரோடு சண்டையிடேன் அவர்களிடம் மோதி வம்பு ஒருநாளும் செய்வதில்லை” என்றான். உடனே நாராயணர் நன்று, இப்படியே அட்டி செய்ய மாட்டேனென்று “ஆணையிட்டு தா” என்றார். அதற்க்கு கலிநீசனும் அப்படியே “ஆண்டிகளை இடறு செய்யேன்! மீறி இடறு செய்து ஆண்டிகளை சில்லமிட்டால், வீணே போகும் என் வரங்கள்” என்று ஆணையிட்டான். இக்காரணங்களால் தான் கலிநீசனுக்கு காெடுத்த வரங்களைப் பறிக்க நாராயணர் கலியுகத்தில் “நாராயண பண்டாரமாக” அவதரித்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.
உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் வாரிக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், பிரம்மா, விஷ்ணு) மூன்று நாட்கள் விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தாலாட்ட தேவர்கள் மலர்தூவ வாணவர்கள் வணங்கி நிற்க மகரத்தின் ஜோதி மகத்துவ நாதன் அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.
Ayya Narayana Swamy Temple - Moongilady
#தாரதரதாரோதாராரோ #வைகுண்டர்தாலாட்டு #VaikundarThalattu

Пікірлер: 139
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா
39:04
Anbulla Ayya அன்புள்ள அய்யா
Рет қаралды 847 М.
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 40 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 42 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
சிவகாண்டம் #ayyasong ayya Narayana songs
1:04:15
kithan Editz
Рет қаралды 329 М.
அய்யா வைகுண்டர் பாடல்
30:01
Bensan Sanstore
Рет қаралды 322 М.