Рет қаралды 216,109
Vocal: Kesavaraj Krishnan
Harmonium & flute: Dr. C. Radhakrishnan
Mirudangam: Balasubramaniam Thirukumaran
Gadam: Jayalakshmi Premkumar
Morsing : Rajasegaran S. Ramasamy
Videography : Humble Tree production
#முத்திக்கு வித்தான திருப்பதிக நிகழ்வு;
செந்தமிழ் சுந்தரரும், சேரர் கோனும் அஞ்சை களத்தில் சேர்ந்திருந்த சமயம் ஓர்நாள் சேரமான் பெருமான் நீராட சென்று விடுகின்றார். சுந்தரர் #நிலவுலக வாழ்வை வெறுத்தேன் நின்னடி சேர்தல் வேண்டும் என்று நெக்குருகி #தலைக்கு தலைமாலை எனத்தொடங்கும் திருப்பதிகம் பாடுகின்றார்.
#தீந்தமிழ் பதிகம் செவிமடுத்த கயிலை கண்ணுதற்கடவுள் #ஈராயிரம் தந்தங்கள் உடைய வெள்ளானையை அமரர்கள் வசம் கொடுத்து #நம் ஆரூரனை இங்கே கொணர்க என்று கட்டளை இட்டார்.
#வெள்ளானை உடன் அமரர்கள் அஞ்சைகளம் புகுந்து நம்பிகள் பெருமானை யானையில் ஏறுமாறு பணிகின்றனர். நம்பிகளோ நீராட சென்ற சேரர்கோனை விட்டு தனியே கயிலை செல்ல மனம் இல்லை ஆயினும் இறை அழைப்பை தாமதபடுத்தல் குற்றம் எனக்கருதி தனித்து யானையில் ஏறி நிகரிலா திருப்பதிகம் #தான் எனை முன்படைத்தான்"பஞ்சம பண்ணில் பாடியவாறு வானில் பயணிக்கின்றார்.
#இதனை கண்ணுற்ற சேரர்கோன் #நம்பிகளை பிரிந்திருக்க மனமின்றி #குதிரையின் செவியில் #சிவாயநம பஞ்சாச்சரம் ஓதிட குதிரை வானில் பறந்து சுந்தரரை முந்திகொண்டு கயிலையை அடைகின்றது.பின்னே சுந்தரரும் கயிலையின் தென்திசை வாயில் வந்து சேர்கின்றார்.
#கயிலை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த திருபதிகமே சிறந்த அகச்சான்று.குறிப்பாக 2 3 5 8 9 பாடல்களின் பெருமை ஏட்டில் அடங்காது.
#இப்பதிகத்தின் சில தகவல்கள்;
#நொடித்தான் மலை என்றால் உயிர்கள் ஒடுங்கும் மலை என்று பொருள்.
#முன்பு ஈசன் யானைதோலை உரித்து வதம் செய்தார். அந்த கெட்டபெயர் நீங்கதான் எனக்கு யானை கொடுத்தாயோஎன்று நயமாக பாடியது.
#கயிலையை கண்டதை காட்சிய படுத்திய 5ம் பாடல்.
#கயிலைக்குள் நுழைந்த சுந்தரரை முதலில் மலர்தூவி வரவேற்றது வருணண் என்பதை பதிவு செய்கின்றார்.
#சுந்தரர் பெருமானை யானையில் ஏற்றி விட்டு கயிலைவரை வழிகாட்டி சென்றவர் வாணண் எனும் சிவகண தலைவர்.(8ம்பாடல்)
#ஈசர் நம்பிகளை இரண்டு இடங்களில் சுந்தரரை என்தோழன் என்று உரைக்கின்றார்.
(1.ஆரூர் 2.கயிலையில்)
(நம்தமன் ஊரன் என்றார்)
#சுந்தரர் இந்த மாசிலா திருப்பதிகத்தை வருணணிடம் கொடுத்து அஞ்சைக்களம் சேர்க்க சொல்லி ஆணையிட்டது.