#thiruvasagam

  Рет қаралды 5,095

திருச்சிற்றம்பலம் 🙏 Feel the Devine

திருச்சிற்றம்பலம் 🙏 Feel the Devine

Күн бұрын

🔔‪@Devine600‬ pls subscribe for more Devine vedios
அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
இறைவர் திருப்பெயர்:
ஆத்மநாதசுவாமி, ஆவுடையார்.
இறைவியார் திருப்பெயர்:
யோகாம்பாள்.
ஓதுவாமூர்த்தி :
திருமயிலை திரு .சர்குருநாதன் ஐயா
திருச்சிற்றம்பலம்🙏
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்
பரனே. பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 1
வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்
குணர்விறந்துலக மூடுருவுஞ்
செம்பெருமானே சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எம்பெருமானே என்னையாள்வானே
என்னைநீ கூவிக் கொண்டருளே. 2
பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஊடுவ துன்னோ டுவப்பதும்
உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 3
வல்லைவாளரக்கர் புரமெரித்தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லைமூவுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 4
பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு
செவிகண் என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 5
பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 6
பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர்கோலச் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 7
பந்தணை விரலாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே
ஆரமுதே அடியேனை
வந்துய ஆண்டாய் வாழ்கிலேன்
கண்டாய் வருக என்றருள் புரியாயே. 8
பாவநாசாவுன் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 9
பழுதில்தொல் புகழாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ
எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 10
திருச்சிற்றம்பலம் 🙏

Пікірлер: 10
@TheSpsrocks
@TheSpsrocks 2 ай бұрын
திருப்பெருந்துறை சிவனே வருக என்று அருள் புரியாயே 🙏 அப்பா சொக்கநாதா 🙏
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 10 күн бұрын
உங்கள் குரலில் திருவாசகம் கேட்க பேறு பெற்றேன் திரு சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மனதுக்குள் என்னலாமோ செய்கிறது ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 Ай бұрын
இனிமையான குரல் அருமையான குரல் திரு சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம திரு சிற்றம்பலம்
@perumale7368
@perumale7368 Ай бұрын
😊😊
@ramasubramaniangurumurthy3273
@ramasubramaniangurumurthy3273 5 ай бұрын
வாழாப்பத்து பதிகம் அருமையானது. திருவாசகத்திற்கும் உருகார் ஒரு வாசகத்திற்கும்‌ உருகார்.‌ மிக மிக அருமையான இனிய குரல் அய்யா.ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவாயநம திருச்சிற்றம்பலம்
@annapooranik1967
@annapooranik1967 Жыл бұрын
பாடல் வரிகள் பதிவு செய்யும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@Devine600
@Devine600 Жыл бұрын
Discription - னில் பதிவிட பட்டது அம்மா !
@annapooranik1967
@annapooranik1967 Жыл бұрын
அருமை ஐயா அருமை நன்றி ஸார் நன்றி
@mohans9383
@mohans9383 Жыл бұрын
திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🌹🌹🌹siva🙏siva🙏siva🙏siva🙏siva🌹நமசிவாய. 🙏வாழ்க🙏qq🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நாதன். 🙏வாழ்க. 🙏🌹🌹சதகுரு. 👌ஐயா. போற்றிவது. 🙏அருமை. 🙏🙏🙏🙏🙏சிவாய. 🙏nama🙏🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலாம். 🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀🌿🌹ஹர ஹர மஹாதேவ்🌹🌷🌿🙏🌷
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 11 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 58 МЛН
நீத்தல் விண்ணப்பம் | Neethal Vinnappam
23:06
PAARODU VINNAI | Siva Saambava | Anjely Mootoocarpen
12:11
Anjely Mootoocarpen
Рет қаралды 5 М.