Рет қаралды 46
இந்திய அரசியலமைப்பு அங்கீகரித்துள்ள மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு என்ற மூன்றடுக்கு அரசில், புதுச்சேரி அரசு உள்ளாட்சி அரசை மட்டும் கடந்த 13 ஆண்டுகளாக எந்தவித சரியான காரணமும் இன்றி முடக்கி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு பணியாற்றக்கூடிய 1074 நபர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது ;அடித்தள மக்களுக்கு ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது; மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை .மத்திய மாநில அரசுகளின் திட்டங்களும் நிதியு ம்
வீணாக்கப்படுகின்றன
புதுச்சேரி அரசின் இந்த சட்ட விரோதப் போக்கை கண்டித்தும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் இக்கழகம் எட்டு கட்ட போராட்டங்களுக்கு திட்டமிட்டது .இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதியிலிருந்து 5 11 20 24 வரை ஏழு கட்ட போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன .
எட்டாவது மற்றும் இறுதிப் போராட்டம் 12- 11- 20 24 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு புதுச்சேரி சுதேசி மில் வளாகத்தில் நடைபெற்றது. .இப் போராட்டம் அடித்தள மக்களின் வாழ்வுக்கான வளர்ச்சிக்கான போராட்டம். அரசியல் மற்றும் சமூக மாச்சரயங்களை மறந்து எல்லோரும் கலந்து கொண்டு அடித்தள ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்க வேண்டிய போராட்டம் .
இதில் தாங்களும் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த புதுச்சேரி அரசு வலியுறுத்தி நடைபெற்றது.
கலந்து கொண்ட அனைத்து
தோழர்களுக்கும், கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் நன்றி நன்றி