Рет қаралды 52
திருமுறை-3_ திருப்பூவணம்: மாதமர் மேனிய னாகி: ஓதுவாமூர்த்திகள் மதுரை பொன் முத்துக்குமரன் ஓதுவார்
மாதமர் மேனிய னாகி வண்டொடு
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரண மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மை யாகுமே.
புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞானசம் பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.