Рет қаралды 220
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரம் 15
ஸ்ரீ உ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
எல்லே ! இளங்கிளியே ! * இன்னம் உறங்குதியோ *
சில் என்று அழையேன்மின் ! நங்கைமீர் ! போதருகின்றேன் *
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் *
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ! **
ஒல்லை நீ போதாய் * உனக்கு என்ன வேறு உடையை? *
எல்லாரும் போந்தாரோ ? போந்தார் போந்து எண்ணிக்கொள் *
வல் ஆனை * கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை *
மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய் (15)
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே ஶரணம்.
#thiruppavai #andal #திருப்பாவை #ஆண்டாள் #எல்லே_இளங்கிளியே #yelle_ilankiliye