Рет қаралды 1,514,270
ஆட்டு இரத்தப் பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்:
ஆட்டு ரத்தம், சின்ன வெங்காயம் 100 கிராம், தேங்காய் துருவியது ஒரு கப், பச்சைமிளகாய்-3 பொடியாக நறுக்கவும் ,மிளகு, சீரகம் அரைத்தது, கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு ,எண்ணெய் தேவையான அளவு.
ஆட்டு ரத்தப் பொரியல் செய்முறை :
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்தவுடன் ஆட்டு ரத்தத்தை அதில் சேர்க்கவும் ரத்தம் நன்றாக கொதித்து நிறம் மாறிய உடன் அதை தனியாக எடுத்து உதிரியாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும் மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் ஆட்டு ரத்தத்தை அதில் சேர்க்கவும் பிறகு அதில் உப்பு சேர்க்கவும் அதனுடன் மஞ்சள் தூள் அதனுடன் மிளகு சீரகம் அரைத்தது சேர்க்கவும் பிறகு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு மூடி வைத்து அதை மூடி நன்கு வேகவைக்கவும் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான ஆட்டு ரத்தப் பொரியல் தயார்.
மாமியார் சரோஜா