Рет қаралды 2,072
பாடல்: வாழ்கிறார் தொன் போஸ்கோ
எழுத்து, இசை, படத்தொகுப்பு: அருட்பணி. பெனடிக்ட் ராஜகுமார் ச.ச
இசை இயக்கம்: இஸ்தியாக் பெரோஸ்
குரல்: அருட்பணி. பெனடிக்ட் ராஜகுமார் ச.ச, ஜான் மரிய வியானி
தயாரிப்பு: தொன் போஸ்கோ அலைகள் மீடியா, திருச்சி
வாழ்கிறார் தொன் போஸ்கோ
காலம் கடந்து கனவுகள் சுமந்து வாழ்கிறார் (வாழ்கிறார்)
வாழ்கிறார் தொன் போஸ்கோ
எல்லைகள் கடந்து இந்திய மண்ணில் வாழ்கிறார் ( வாழ்கிறார் )
இளைஞன் நீ அது போதுமே
என்றவர் நம்மிடை வாழ்கிறார்
இளைஞரின் மனங்களில்
என்றும் நிலைத்தே வாழ்கிறார்
வாழ்கிறார் தொன்போஸ்கோ....
ஆயானில்லா ஆடுகள் போல
அலைபவரைத் தேடிச் செல்லுவோம்
உறவு உணர்வு உடமைகள் இழந்தோர்
உடனிருந்து நாம் தேற்றுவோம்
ஆதரவும் அரவணைப்பும்
அன்போடு வழங்கிப் பேணுவோம்
தடுப்புமுறைக் கல்வியின் வழியே
நல்வழி நடத்தியே செல்லுவோம்
விளிம்பு நிலை வாழும் இளையோரே
நமது பணி வாழ்வின் மையமே
இரவு பகலென்று பாராமல்
சோம்பல் சோர்வின்றி உழைப்போமே
வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
வாழும் தொன் போஸ்கோவாய் மாறுவோம்
நற்கருணை இயேசுவில் என்றும்
நம்பிக்கை கொண்டே வாழுவோம்
அன்னை மரியின் உடனிருப்பை
ஒவ்வொரு நாளும் உணருவோம்
திருத்தந்தையின் வழிகாட்டுதலை
பணிவாய் ஏற்றே வாழுவோம்
இளையோரின் நடமாடும்
நற்செய்தியாக வாழுவோம்
வாழ்வில் புதுமைகள் வேண்டுமா
அன்னை மரிமீது பக்தி கொள்
ஓடு பாடு நீ கொண்டாடு
பாவம் செய்யாது தினம் வாழு
என்றவர் போஸ்கோ தந்தையாம்
அவர் வழி சென்றே வாழுவோம்