Рет қаралды 1,448
பாம்பன், குந்துகால் மற்றும் குருசடை தீவு:
ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் குந்துகால் மற்றும் குருசடை தீவு. பாம்பன் பாலம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளதால் அனைவரும் அதைகடந்துதான் போவீர்கள். ஆனால் மற்ற இரண்டு இடங்கள் அப்படி இல்லை.
உலக வரலாற்றில் மிகமுக்கியம் இந்த இரண்டு இடங்களும். இங்கு சென்று வந்த பெரும்பாலானோர் இங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லை யாரும் செல்லாதீர்கள் என்றெல்லாம் பதிவிடுகிறார்கள் ஆனால் அவர்களுக்கு புரிவதில்லை இங்கு இருக்கும் குருசடை தீவுதான் உலகின் முதல் கடல்சார் உயிரினங்களின் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சிகூடம் என்று. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் காட்டப்பட்ட நூலகம், அவர்கள் குடிநீருக்கு பயன்படுத்திய கிணறு உள்ளது. இவைகளை சுற்றுலா என்று பார்க்காமல் வரலாற்று சின்னங்கலாக பாருங்கள். ₹300 ரூபாய் செலவு செய்துவிட்டோம் என்று நினைக்காமல் அங்கு இருக்கும் சூழலை அனுபவியுங்கள்.
இரண்டு சுற்றிப்பார்க்கும் கோபுரங்கள் உள்ளது. அவற்றில் நின்று கடலை ரசியுங்கள். பாம்பன் பாலம் இங்கு இருந்து பார்க்கும் போது சிறிய கோடுபோல தெரியும். கடலில் கடந்து செல்லும் சிறிய படகுகளையும் அவற்றில் மீன் பிடித்துவிட்டு உடல் அலுப்புடனும் முகத்தில் சிறு புன்னகையுடனும் உங்களை அவர்கள் கடந்து செல்வார்கள்.
உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் டால்பின் பார்க்கலாம்.
அதிகப்படியான கடல் வளங்கள் இங்கு உள்ளது. தமிழ்நாட்டின் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இடம். அனைத்து தகவல்களையும் வழிகாட்டியிடம் அதிகப்படியான கேள்விகளை கேளுங்கள். அங்கு இருக்கும் அனைத்து உயிரங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் உங்களுக்கு எடுத்து சொல்வார்கள். மிகமுக்கியமாக சுனாமி வந்தபோது ராமேஸ்வரம் தீவு காப்பாற்றபட இந்த தீவு மிகமுக்கியக்காரணம்.
விவேகானந்தர் சிக்காகோ மாநாடு முடிந்து இங்குதான் வந்து இறங்கினார், காரணம் ராமநாதபுரம் மன்னர். இந்த விவேகானந்தர் மண்டபம் அருகில் 1964 புயலில் சேதமடைந்த துறைமுகம் உள்ளது.
இங்கு உள்ள மக்களிடம் பழகிப்பாருங்கள் அவர்களின் வாழ்க்கைமுறையை தெரிந்துகொள்ளுங்கள்.
#island #rameshwaram #travel #touristplace #boating #museum #coralisland #pambanisland #ramanathapuram #tamil #trekker #travel