ஓ வண்டிக்காரா - Ohh VandikKaara - Sri Lankan Tamil Songs of 70 - 80's

  Рет қаралды 19,347

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

Күн бұрын

#எம்மவர்இசைமழை
This channel and we do not claim any right over any of the graphics, images, songs used in this video. All rights reserved to the respective copyright owners.
No Copyright Infringement Intended - This Is Purely for Entertainment & Documenting Purposes.
எம்மவர் மெல்லிசைப் பாடல்கள் - ஓ வண்டிக்காரா
கவியாக்கம் - கவிஞர் நீலாவணன்
neelaavanan.com...
www.neelaavanan...
பாடுபவர் - M சத்தியமூர்த்தி
இசை - கண்ணன் - நேசன்
Neelaavanan / M Sathiyamoorthy / Kannan / Nesan
ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு
காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு!
நாமும் நமது பயணந் தொலையக்
கலந்து கொள்வோம் கூட்டு! - ஓட்டு
ஓ என் அருமை வண்டிக்காரா….
பனியின் விழிநீர் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் பிறையின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே - ஓட்டு
ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு
#70-80களில்எம்மவர்இசைமழை-இன்றும்இனிமை.!!
#SriLankanTamilSongof70s-80s

Пікірлер: 75
@raghusharma7054
@raghusharma7054 6 ай бұрын
"கண்ணன் , நேசம்" இருவரும் அற்புதமான இசையமைப்பாளர்கள் !
@edwardbenjamin1596
@edwardbenjamin1596 7 жыл бұрын
நான் சென்னையில் தினமும் இரவில் இக்கானத்தை கேட்காமல் உறங்குவதில்லை.
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
உண்மையில் மிக சிறப்பான பாடல்
@manicksathi4365
@manicksathi4365 5 жыл бұрын
Thank you so much sir - kind regards sathiamoorthy
@kvelil
@kvelil 9 жыл бұрын
இந்தப் பாடற் பகிர்வுக்கு நன்றி. கவிஞர் பெயர் நீலாவணன் என்பதே சரி
@vsrajm
@vsrajm 9 жыл бұрын
kvelilதவறுக்கு வருந்துகிறேன்......உங்கள் தகவலுக்கு நன்றி ... இயலுமான இடத்தில் திருத்தியுள்ளேன்... அறியாமல் நேர்ந்த தவறுக்கு... மீண்டும் தவறுக்கு வருந்துகிறேன்.... அன்புக்கு நன்றி...
@kkv2299
@kkv2299 8 жыл бұрын
+70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!! நன்றி. எமது இணையத்தளத்திலும் பகிர்ந்துள்ளோம். நல்ல முயற்சி. தொடர்ந்து செய்யுங்கள் www.neelaavanan.com/2016-03-13-05-32-30/poems/all-poems/89-vandi-kaara.html
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+Kalaivani Kailanathan நன்றி ... தாராளமாக பகிரலாம் ... இவை ஒன்றும் என் சொத்தல்ல ... எமது கலைவடிவம், அது எவ்விதமாய் இருப்பினும், ஆவணமாக்கப்படவேண்டும் என்பதே அவா.... அன்பர்கள் ஊக்கம் செயலாற்ற உதவும்
@skumaruma
@skumaruma 3 жыл бұрын
பாடல் அருமை மனதைத் தொடுகிறது
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@niththilan
@niththilan 9 жыл бұрын
Another great song, challenging the south Indian movie songs...Energetic song.
@vsrajm
@vsrajm 9 жыл бұрын
+Kenga Shandralingam ....No doubt.... made mistake in spelling the poet... another gentlemen corrected me... thanks for all
@shaieds_view
@shaieds_view 4 жыл бұрын
tamil literature new syllabus grade 11 added this song in the syllabus I dont why...but now im clear after hearing this meaningful song
@vsrajm
@vsrajm 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. தகவலுக்கும் மிக்க நன்றி... நீலவண்ணனின் கவிதைகள் உயிர் துடிப்புக் கொண்டவை இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@vamana4239
@vamana4239 7 жыл бұрын
இப்பாடலை பதிவேற்றியவருக்கு மிக்க நன்றிகள் ..நான்சிறுவயதில் ஈழத்து மெல்லிசைப் பாடல் என்று வானொலியில் கேட்டு, என் மனதில் நிலைத்த முதல் பாடல் இது...இன்று கேட்டாலும், அன்று கேட்ட புத்துணர்ச்சியே ஏற்படுகின்றது...வாழ்க..அந்தக் கலைஞர்கள்.
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
வரதன், வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி. "எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை" யில் இடம்பெறும் எல்லா பாடல்களும் எம் சிறுவயது நினைவுகளே, ருசித்து இன்புறுவீர்
@rajut1273
@rajut1273 2 жыл бұрын
THANK YOU VERY MUCH FOR UPLOADING THIS SONGS
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... தொடர் ஆதரவு எம்மை ஊக்குவுக்கும்.....
@mohanakulam7930
@mohanakulam7930 Жыл бұрын
Amazing song and Singing 👌👌👌👏👏👏🙏🙏🙏
@vsrajm
@vsrajm Жыл бұрын
Definitley.. one of the bests from the uploading..
@vanithauthayakumarvanitha1968
@vanithauthayakumarvanitha1968 Жыл бұрын
This song in the tamil litarature new syllabus book thats why I heard this
@vsrajm
@vsrajm Жыл бұрын
Yes, that's correct
@dialogdialog3911
@dialogdialog3911 5 жыл бұрын
Super
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
🙏
@abineshdiscoveryi4611
@abineshdiscoveryi4611 5 жыл бұрын
Beautiful songs
@vsrajm
@vsrajm 5 жыл бұрын
அன்பு ஜவாஹர்.......வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி...
@manicksathi4365
@manicksathi4365 7 жыл бұрын
இது தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் தயாரிப்பு - முதன்முதல் இசை அமைத்தவர் இசை வாணர் கண்ணன். பின்னர் 1981 இல் இலங்கை வானொலியில் நான் பாடிய போது இசை அமைப்பில் நேசனும் இணைந்து கொண்டார் - மாணிக்கம் - சத்தியமூர்த்தி
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
மா சத்தியமூர்த்தி, தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... இதில் பங்கேற்றவராய் உங்கள் வருகை எம்மை மிக மகிழ்விக்கிறது
@manicksathi4365
@manicksathi4365 7 жыл бұрын
உங்கள் அழகு தமிழ் பார்த்தோம்-சொல்ல வந்த கருத்தினை நறுக்காய் சொன்னீர்கள் - நன்றி! இப்போதெல்லாம் அலட்டல்களே அதிகம்.உங்கள் பெயரை you tube இல் காணவில்லை?
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா, இந்த தரவேற்றங்கள் மூலம் எவ்வொரு அடையாளமோ அல்லது பொருளாதார நன்மையோ அவசியமற்றது என்பது எண்ணம். ஆவணப்படுத்தலே ஒரே நோக்கம். தொடர்சியான ஆதரவும் பகிர்வும் மட்டுமே இதை நிலை நிறுத்தும் என்பதில் நம்பிக்கை. அவைக்காற்று கலைக் கழகம் கொழும்பில் இயங்கிய நாளில் அங்கத்துவமும் மாதமொரு நாடகம் என்பதும் இனிய நினைவுகள்
@manicksathi4365
@manicksathi4365 7 жыл бұрын
உங்கள் பெயர் இன்னும் .............? எழுத்தும் எண்ணமும் செழுமையாகவே உள்ளன
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
தங்கள் ‘சிறு நண்டு மணல் மீது’ எனும் பாடல் கிடைக்குமா? இருப்பின் இசைவாணர் இசையில் வந்த நேர்த்தியான வடிவத்தை தரவேற்றம் செய்ய விரும்புகிறேன் தங்கள் அனுமதியுடன். கிடைக்குமா?
@singaraja1479
@singaraja1479 8 жыл бұрын
romba naalaaga ketka virumbiya paadal ithu... thanks to youtube...
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+SINGA RAJA தங்கள் அன்புக்கு நன்றி...
@panditvettrivel2712
@panditvettrivel2712 6 жыл бұрын
Lovely song... I heard a lot in my teenage time... Taking me to 1970s $ earlier 1980s...
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
வருகைக்கும் கருத்திடலுக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்....... ஆம் மறக்கவியலாத நினைவுகள்.... கனவுகள் கனாக்கானும் அதுவொரு பொற்காலம்.....
@manickamsathiamoothy6804
@manickamsathiamoothy6804 6 жыл бұрын
Thank you so much for your kind words-regards-Sathiamoorthy
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
தமிழன் folk song ஈழத்துத்தமிழில் அருமை,, பாடல், இசை, அனைத்தும் மிகவும் இனிமை, நன்றி
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏 தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@astathathevaarul-ev4ic
@astathathevaarul-ev4ic 7 ай бұрын
This song is in Appreciation of tamil literature new syllabus for grade 11 student in srilanka Because this song has lot of deep meaning 💖
@vsrajm
@vsrajm 6 ай бұрын
Thanks
@gamingceylontamizhan1110
@gamingceylontamizhan1110 2 жыл бұрын
Superb.this song is in my o/l syllabus.it is very nice
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
Thanks... for visiting and commenting
@thirumahelsripathmanathan1933
@thirumahelsripathmanathan1933 Жыл бұрын
அன்றும் இன்றும் இனிமை தரும் பாடல்.
@vsrajm
@vsrajm Жыл бұрын
எங்களையும் இன்றும் இளமையாக வைத்திருக்கிறது என்றும் சொல்லுங்கள்..
@thirugnanasampanthanlalith6302
@thirugnanasampanthanlalith6302 3 жыл бұрын
நீலாவாணன் அவர்களின் இந்த பாடலை மறக்க முடியுமா
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
உண்மை...!!
@samueldw704
@samueldw704 3 жыл бұрын
Lovely song.
@dilshan4618
@dilshan4618 Жыл бұрын
Intha patai ellam ketu evlo naalachi nalla paatu palaya kaalam ellam ninaivukku varuthu
@vsrajm
@vsrajm Жыл бұрын
🙏 தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@damithrajakaruna1476
@damithrajakaruna1476 9 жыл бұрын
nice melodial song-PLS UPLOAD MORE UNKNOWN songs-thanx
@suthaselvaratnam74
@suthaselvaratnam74 Жыл бұрын
பாடல்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை👌👌👌🙏
@vsrajm
@vsrajm Жыл бұрын
நன்றி... எங்கள் முயற்சியும் அதுவே.... ஆதரவளித்து எங்களுடன் கை கோருங்கள்...
@rajamanickamrajamanickam3441
@rajamanickamrajamanickam3441 2 жыл бұрын
Enrum maravatha padal
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... தொடர் ஆதரவு எம்மை ஊக்குவுக்கும்.....
@balasubramaniyamnallan4907
@balasubramaniyamnallan4907 Жыл бұрын
அருமை ❤
@vsrajm
@vsrajm Жыл бұрын
வருகைகும் கருத்திடலுக்கும் நன்றிகள்... அனுபவிக்க மமீண்டும் வருக...
@ukkirapandian
@ukkirapandian 2 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலிகள் கேட்ட அருமையான பாடல் தூக்கத்திலும் சுகம் தரும் பாடல்
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
உண்மை... சத்தியமூர்த்தியின் குரலில் இனிக்கிறது
@lukshmishanmugam8031
@lukshmishanmugam8031 3 жыл бұрын
There are many lovely ஈழத்துப் பாடல்கள், another example being "அழகான ஒரு சோடி கண்கள்" anyone remembers that? It's on youtube. Thank you for bringing back great memories🙏
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
அழகான ஒரு சோடி கண்கள் also uploaded in this channel and who would forget that gem of a song. We have uploaded many ஈழத்துப் பாடல்கள் in the channel. Believe you would enjoy listening to them. Thank you so much for visiting and feedback. Come back to enjoy and share your love. Subscribe to the channel and enjoy the periodic uploads
@frankdecroosfrankdecroos1456
@frankdecroosfrankdecroos1456 4 жыл бұрын
Please upload this song. Kulir adikuthu kanney ponnamma kooda wandhal kopam ennamma.
@vsrajm
@vsrajm 4 жыл бұрын
It is already uploaded in the channel ... kindly go thru the songs...... you would find it .....
@ajithelactronics670
@ajithelactronics670 7 жыл бұрын
அருமை.....
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
நன்றிகள் கோடி... உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும்
@astech7461
@astech7461 5 жыл бұрын
Superb sweet ...
@vsrajm
@vsrajm 5 жыл бұрын
Thank you for visiting and commenting
@kulakatan
@kulakatan 7 жыл бұрын
Thank you
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
Thanking you for visiting and encouraging
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН
Veerathirumagan | Paadatha Paattellam song
4:43
Saregama Tamil
Рет қаралды 41 М.
Petra Maganai Vitra Annai | Thendral Urangiya song
3:19
Saregama Tamil
Рет қаралды 1,4 МЛН
Nilave Nee Satchi | Ponnendrum Poovendrum song
3:40
Saregama Tamil
Рет қаралды 29 М.
Ner Vazhi - Vaimaiye Vellumada Beautiful Song
3:40
Tamil Movies
Рет қаралды 56 М.
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே -  VaadaikKaatru Veesuginra KaalathileSri Lankan Tamil Film Song
6:19
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 19 М.
Kannirandum Minna Minna - Aandavan Kattalai Tamil Song
3:29
Rajshri Tamil
Рет қаралды 745 М.