Рет қаралды 269,099
A plead [istighatha] to the Sulthan of Awliyaullah, Seyyiduna Ghauthul Azam Muhyiddeen Abdul Qadir Jeelani [Qaddasallaahu Sirrahul Azeez]
விலாயத்தின் வேந்தரே யா ஜீலானீ
ஆக்கம்: மௌலவி T.S.A அபூ தாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி
Lyrics :
مَوْلَايَ صَلِّ وَسَلِّمْ دَآئِمًا أَبَدًا
عَلٰى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ
சீமானே பூமானே
பாருலகின் கோமானே
ஈமானைக் காத்தவரே
ஜீலானின் நாயகமே
ஆதிப் பெரியோனவனின்
ஜோதி ஒளியருளாலே
ஆலத்தில் வந்துதித்த
முஹ்யித்தீன் நாயகமே
முத்து நபி நாயகத்தின்
முத்தில் உதித்தவரே
நுபுவ்வத்தின் பேரரே யா
முஹ்யித்தீன் நாயகமே
விலாயத்தின் வேந்தரலி
வேங்கையவர் வாரிசுவாய்
புவி மீதில் வந்துதித்த
முஹ்யித்தீன் நாயகமே
ஃபாத்திமுத்து நாயகியார்
பாச மிகு பாசனத்தில்
நேசமுடன் விளைந்தெழுந்த
முஹ்யித்தீன் நாயகமே
தந்தை வழி தாய் வழியில்
ஹஸனார் ஹுஸைனாரின்
நேர் கொடியில் பூத்தெழுந்த
முஹ்யித்தீன் நாயகமே
பாலருந்தா பாலகரே
ஃபாத்திமா பாலகரே
அபூ ஸாலிஹ் சேயவரே
முஹ்யித்தீன் நாயகமே
அப்துல் காதிர் என்னும்
அழகுயர் திருநாமம்
அழைத்த உடன் வருவீரே
ஆதரிப்பீர் நாயகமே
மாறான இதயத்தை
நேராக்கும் நாயகமே
மாசகற்றி வஞ்சகத்தைத்
தூராக்கும் நாயகமே
நூராக்கும் நாயகமே
நூரான நாயகமே
ஊரெல்லாம் பாரெல்லாம்
ஒளியான நாயகமே
ஆதரிப்பீர் நாயகமே
அருள் சேர்ப்பீர் நாயகமே
ஆவலுடன் அழைத்திடுவேன்
காத்திடுவீர் யா கௌதே
யா முஹ்யியத்தீனொலியே
ஆலத்தின் பேரொளியே
வலி நீக்கி வழி காட்டும்
வள்ளல் யா காதிருவே
அகத்துருவை அகற்றி விடும்
அருள் எங்கள் குரு நாதா
ஆபத்தைத் தூராக்கும்
யா அப்தல் காதிருவே
நீரளித்து நீரளித்த
நீராலே தீன் பயிரை
காத்தவரே கவ்ஃதெங்கள்
யா முஹ்யியத்தீனொலியே
பாரெல்லாம் உம் புகழை
நாளெல்லாம் பாடிடுமே
சீரெல்லாம் பெற்றிடவே
சிறப்பருள்வீர் குரு நாதா
கருணை வடிவானவரே
அருமை நபி திருப்பேரே
பதி மீதில் நான் வாழ
கதி மோட்சம் தருவீரே
என் பெயரை அழைக்கலுற்றால்
அதி விரைவில் வந்திடுவேன்
என்றுரைத்த எஜமானே
யா முஹ்யியத்தீனொலியே
வரம் தருவீர் நாயகமே
கரம் தருவீர் நாயகமே
கறை நீக்கி கரையேற்றி
காத்திடுவீர் நாயகமே
பரிதாபம் நீக்கிடுவீர்
பரிகாசம் போக்கிடுவீர்
பரிவாகப் பார்த்திடுவீர்
பரிந்துரையே செய்திடுவீர்
பாதகங்கள் நீக்கிடுவீர்
சாதகங்கள் சேர்த்திடுவீர்
சாதகனை ஏற்றிடுவீர்
சான்றளிப்பீர் நாயகமே
கெடு நஃப்ஸும் ஷெய்தானும்
கடும் யுத்தம் செய்தாலும்
பரிசுத்தம் செய்தாளும்
ஸுல்தானே எஜமானே
உங்கள் புகழ் திரு நாமம்
உயர்ந்தே உரைத்திடவே
எம் நாவை எந்நாளும்
ஏற்றிடுவீர் யா ஷைகே
பெற்றோரைப் பெரு வாழ்வு
பெற்றோராய் ஆக்கிடுவீர்
உற்றார்கள் உறவினர்க்கும்
உதவிகளை செய்திடுவீர்
பிள்ளைகள் பெரு ஞானம்
பெற்றிடவே செய்திடுவீர்
ஒழுக்கமுடன் கல்வியுடன்
உயர்ந்திடவே செய்திடுவீர்
உடன் பிறந்தோர் சுற்றார்கள்
அயலார்கள் நண்பர்க்கும்
மற்றார்க்கும் மாற்றார்க்கும்
நல்லருளே நல்கிடுவீர்
வழிமாறிப் போனோரை
தெளிவாக்கி மீட்டிடுவீர்
வலிமார்கள் நேசரென
உளம் மாறச் செய்திடுவீர்
பகுதாதின் பதியரசே
படைத்தோனின் பறை முரசே
பதித்திடுவேன் என் சிரசே
பரிவுடனே ஏற்பீரே
உயர்வான உங்கள் தளம்
சிறப்பாக வந்திடவே
ஆசையாய் வேண்டிடுவேன்
அழைத்திடுவீர் யா கௌஃதே
ஆசையுடன் பெரு மூச்சு
பகுதாது பெருங்காற்றில்
ஓசையின்றி ஒதுங்கிடவே
என் உள்ளம் நாடுதய்யா
வற்றாத நீர் சுனையில்
முற்றாக மூழ்கிடவும்
வண்டாக பூவிதழில்
தேனுண்டு மகிழ்ந்திடனும்
தங்கள் உயர் தரீகாவில்
தளிராகச் செழித்திடனும்
உங்கள் உயர் கொடியின் கீழ்
ஒன்றிடனும் ஒதுங்கிடனும்
காதிரிய்யா கூட்டமுடன்
நாட்டமுடன் உம் மத்ஹை
மாதிரியாய் ஓதிடனும்
நிம்மதியாய் வாழ்ந்திடனும்
நல்லார் நபி நாதரவர்
நாயகத்தின் கிளைஞர் பால்
நாயன் ஸலாத்து ஸலாம்
அனுதினமும் உண்டாமே
இப்பாவை பாடிடுவோர்
இதமாக கேட்டிடுவோர்
தப்பாது உம் நெறியில்
சென்றிடவே செய்திடுவீர்
அல்லுடனே பகல் முற்றும்
இல்லத்தில் வந்தாள்வீர்
உள்ளத்தை மகிழ்த்திடுவீர்
யா அப்தல் காதிருவே
முடிவான எந்நேரம்
ஸக்ராத்து அந்நேரம்
மடிமீது தாங்கிடுவீர்
அடிமையினை ஏற்றிடுவீர்
யா குத்பே யா கௌஃதே
யா முஹ்யியத்தீனொலியே!
யாவருக்கும் மன்றாடும்
தீன் முஹ்யித்தீனொலியே!
மஹ்பூப் ஸுபுஹானீ
மஃஷூக் ரஹ்மானீ
கிந்தீலுன் நூரானீ
முஹ்யித்தீன் ஜீலானீ
أَلْحَمْدُ لِلهِ حَمْدًا دَآئِمًا أَبَدًا
وَالْحَمْدُ لِلهِ ثُمَّ الْحَمْدُ لِلهِ
أَلْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ عَلٰى
مَا كَانَ يُلْهِمُنِيْ أَلْحَمْدُ لِلهِ
مَوْلَايَ صَلِّ وَسَلِّمْ دَآئِمًا أَبَدًا
عَلٰى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ
CREDITS:
Voice Hafiz B.S. Ahmad Salih Faheemi
Audio Mixing: Fahmi Farooqi
Editing: MSL Studio
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported By:
PSA Pallak Lebbe Family
Kayalpatnam
#AhmadSalihFaheemi