சரணடைந்து விட்டேன் ரப்பே | Labbaik Yaa Rab | Ramadan Munajat | Vocals Only | Ahmad Salih Faheemi

  Рет қаралды 224,886

Ahmad Salih Faheemi

Ahmad Salih Faheemi

Күн бұрын

An emotional Munajat with complete surrender in the court of Almighty Allah with sincere repentance for the wrong-doings seeking His Ultimate Salvation.
அல்லாஹு ரப்பி
அல்லாஹு ஹஸ்பீ
இக்ஃபிர் துனூபி
பி ஃபைழில் ஹபீபி
அல்லாஹு அல்லாஹ்
அஸ்தக்ஃபிருல்லாஹ்
அடியாரின் பிழைகள்
பொறுப்பாயே அல்லாஹ்
1.
ரமழானை தந்த
ரஹ்மானே உன்னை
போற்றித் துதித்து
துவங்குகின்றேனே
பார்ப்போனும் நீயே
கேட்போனும் நீயே
அடியாரின் குறைகள்
தீர்ப்போனும் நீயே
உன்னை அன்றி
எவருண்டெமக்கு
எங்களின் முறையீடு
கேட்பாயே அல்லாஹ்
முன்பில் உதித்த
முத்தாம் முஹம்மது
முகமலரை யாம்
முன் வைத்து கேட்போம்
அன்னவரின் துய்ய
பரம்பரையோர்கள்
அஹ்லுல் பைத்தினர்
அஸ்ஹாபிமாம்கள்
இறை நேசர்களையும்
முன் வைத்து கேட்போம்
வேண்டல்கள் யாவும்
ஏற்பாயே அல்லாஹ்
2.
என்னருள் எந்தன்
கோபத்தை விஞ்சும்
என்று பகர்ந்தாய்
ஏகாந்த நாதா
என் செயல் கண்டு
நீ தீர்ப்பளிப்பின்
நிலையான நரகில்
மீளாது மாய்வேன்
உன்னருள் கொண்டே
பிழைகள் பொறுத்தே
உயர்வான சுவனத்தில்
சேர்ப்பாயே அல்லாஹ்
அரசன் முன் நிற்கும்
கைதியைப் போல
நிர்க்கதியுற்று
நிலையின்றி நின்றேன்
மாபாவி என்னை
தண்டித்திடமால்
மன்னித்துக் காப்பாய்
மறை தந்த மன்னா
நரகத்தின் சூட்டை
தாங்கிடுவேனோ
நடுங்கிடும் எந்தன்
பயம் தீரு அல்லாஹ்
3.
பாவக் கடலில்
மூழ்கித் திணறும்
பாவியை மீட்டி
கரையேற்று ரப்பீ
முன் செய்த பாவம்
பின் செய்த பாவம்
கண் செய்த பாவம்
கழித்திடு அல்லாஹ்
அறிந்திட்ட அறியா
அழுக்கான பாவம்
இழுக்கான யாவும்
அழித்திடு அல்லாஹ்
கேள்வியால் செய்த
கேடான பாவம்
கை கால்கள் செய்த
இழிவான பாவம்
நாவினால் செய்த
நசலான பாவம்
நலிந்தோரை கடிந்த
பொல்லாத பாவம்
உள்ளத்தில் தோன்றும்
நில்லாத பாவம்
எல்லாமும் பொறுத்தென்னை
புதிதாக்கு அல்லாஹ்
4.
தவ்பாவை ஏற்கும்
தயவாளன் உந்தன்
தாள் பணிகின்றேன்
தயவு செய் தய்யான்
நல்லவனாக
மாறிடும் ஆசை
மிகைத்தாலும் மீண்டும்
தவறுகள் செய்தேன்
பாவங்கள் பக்கம்
மீளாத மீட்சி
தந்தென்னை நீயே
மீட்பாயே அல்லாஹ்
ஓரெட்டு நகர்வின்
பத்தெட்டு விரைவேன்
என்று பகர்ந்தாய்
என்னன்பு எஜமான்
பவம் எந்தன் குணமே
மன்னிப்புன் குணமே
லெப்பைக ரப்பே
சரணடைகின்றேன்
தணலினில் வீழ்ந்த
புழு போல் துடிக்கும்
துரும்பென்னை மீட்டி
துய்தாக்கு அல்லாஹ்
5
இதயத்தில் எதுவும்
இல்லாமலாக்கி
நீ மட்டும் அமரும்
இடமாக்கு நாதா
இன்ஸானு ஸிர்ரீ
வ அன ஸிர்ருஹ்
என்பதன் ஸிர்ரை
உணர்த்திடு நீதா
காதலனே உன்
முழுதான அழகை
கண்டு மயங்கும்
வரம் தா நீ அல்லாஹ்
நூரு முஹம்மதை
நயன மணியில்
ஒளிர்ந்திடச் செய்துன்னில்
ஒளித்திடு கண்ணே
நூரான நபியின்
நேரான வழியில்
பார் மீதில் செலுத்தி
சீராக்கு என்னை
கரை ஏதும் இல்லா
உன் நேசக் கடலில்
முழுதாய் அமிழ்த்தி
மூழ்கச் செய் அல்லாஹ்
6
பெற்றோரின் குறைகள்
பொறுத்திடு அல்லாஹ்
அவர் மீது கருணை
காட்டிடு அல்லாஹ்
பிள்ளைகள் நீயே
வளர்த்திடு அல்லாஹ்
அறிவுடன் ஞானம்
வழங்கிடு அல்லாஹ்
ஒழுக்கம் மிகைத்தே
செழிப்போடு வாழும்
பெரும் பேறு நீயே
அருள்வாயே அல்லாஹ்
காலம் கடந்தும்
கரை சேர்ந்திடாமல்
வெதும்பிடும் பேர்க்கு
கரம் தந்தருள்வாய்
குழந்தைகள் இன்றி
மனம் வாடும் எவர்க்கும்
மழழைகள் ஈந்து
மகிழ்வாக்குவாயே
மற்றவரைப் போல்
இவர்களை ஆக்கி
மனதில் நிறைவை
பொழிவாயே அல்லாஹ்
7
நோய் நொடியின்றி
நிம்மதியோடு
நில மீதில் வாழும்
நிலை எமதாக்கு
ஜின் மற்றும் ஷைத்தான்
ஸிஹ்ரு பொறாமை
கண்ணேறு வெறுப்பு
அண்டாமலாக்கு
பகைவர்கள் சூழ்ச்சி
பக்கம் வாராது
திசை மாறச் செய்வாய்
தக்கோனே அல்லாஹ்
நஃப்ஸின் பதற்றம்
நலிவான எண்ணம்
திடுக்கங்கள் போக்கி
திடமாக்கு மெளலா
இதமான தூக்கம்
இல்லாத ஏக்கம்
இல்லாமலாக்கி
எழிலாக்கு மெளலா
கூரான பார்வை
தெளிவான கேள்வி
கை கால்கள் திறனாய்
ஆக்கிடு அல்லாஹ்
8
தொழிலில் விருத்தி
தொய்வின்றி தந்து
வாரி வழங்கும்
வாய்ப்பை தா அல்லாஹ்
உனையன்றி எவரை
அஞ்சாத நிலையும்
அண்டாத வாழ்வும்
அளிப்பாயே அல்லாஹ்
கடனற்ற நிலையில்
கடைசி வரைக்கும்
கரங்கள் உயர்வாய்
இருக்கச் செய் அல்லாஹ்
பயனான மழையை
வருஷிக்கச் செய்து
வயல்கள் வெளிகள்
வளமாக ஆக்கு
நெல் தானியங்கள்
புல் காய்கனிகள்
கால் நடைகளில்
பரக்கத்தை நிரப்பு
இயற்கையின் சீற்றம்
பெரும் தொற்று நோய்கள்
அழிவுகள் யாவும்
அகற்றிடு அல்லாஹ்
9
கடினம் குரோதம்
பழி வாங்கும் எண்ணம்
பிடிவாத குணங்கள்
அடியோடு போக்கு
ஒருவர்க்கு ஒருவர்
அன்பை பகிர்ந்து
பண்போடு வாழும்
பரிவை வழங்கு
இதயத்தில் மென்மை
பனி போல் சொரிந்து
வேற்றுமை யாவும்
தூராக்கு அல்லாஹ்
எம் நாட்டில் ஊரில்
வீதியில் வீட்டில்
பயமின்றி வாழும்
நிலை என்றும் வேண்டும்
மத வேறுபாடு
இன பேதம் நீங்கி
மனிதத்தை போற்றும்
நல்லாட்சி வேண்டும்
ஒற்றுமை குலைவால்
எதிரிகள் எம்மை
வீழ்த்தி விடாமல்
காப்பாற்று அல்லாஹ்
10
இறுதி என் மூச்சை
சுவாசிக்கும் முன்பு
கஃபாவின் காட்சி
கண்ணுக்குள் காட்டு
புவனத்தின் சுவனம்
மதினத்தின் மடியில்
சில நாட்களேனும்
தஞ்சம் தருவாய்
ரவ்ழாவின் அருகில்
மிம்பர்க்கு நடுவில்
மரணத்தை தந்து
உயிராக்கு அல்லாஹ்
மண்ணறையை நீ
விரிவாக்கி வைத்து
சொர்க்கத்தின் வாசம்
சுவாசிக்கச் செய்வாய்
மஹ்ஷர் பெரு வெளியில்
மன்றாடி சேர்க்கும்
மஹ்மூதின் கரங்கள்
பற்றச் செய் அல்லாஹ்
உயர்வான பதியில்
உம்மிய்யின் பணியில்
உனைக் கண்டு களிக்கும்
உயர்வை தா அல்லாஹ்
CREDITS :
Voice and Lyrics :
Hafiz B.S. Ahmad Salih Faheemi
Audio Mixing : Fahmi Farooqi
Editing :
MSL Studio
Technical Support :
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by :
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported By :
Chinna Maraicar Family (Kilakarai)
#AhmadSalihFaheemi

Пікірлер: 162
@ahamedahamed1460
@ahamedahamed1460 11 ай бұрын
Ma shaa Allah ma shaa Allah... Aameen aameen ya rabbal aalameen...😢
@punithargalinpoonjoolai6852
@punithargalinpoonjoolai6852 Жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரம்பல் ஆலமீன். இப்பாடல் இயற்றியவரையும், இப்பாடலை பாடியவரையும், இது வெளிவர காரணமாய் இருந்தோரையும், அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
ஆமீன் வ இய்யாகும் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@pureqamar
@pureqamar Жыл бұрын
ஆமீன்
@IbSha-gi2vt
@IbSha-gi2vt Жыл бұрын
ஆமீன்......
@mohammedshikkandar2674
@mohammedshikkandar2674 Жыл бұрын
ஆமீன்
@jaharafathima7226
@jaharafathima7226 11 ай бұрын
Aameen
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 3 күн бұрын
பௌத்தமும் இஷ்ஸாமும் ஒரே போதணைகளையே போதிக்கிறது நமோ புத்தா இன்ஷாஅல்லாஹ் 🎉
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 3 күн бұрын
இஸ்லாமிய சமூகத்தை யாராலும் அடிமை படுத்த முடியாது இன்ஷாஅல்லாஹ் பிஸ்மில்லா🎉
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 3 күн бұрын
உங்களின் உருவமில்லா இறைவனுக்கு மனித உருவம் கிடைத்தது இஸ்லாமிய சமூகத்திற்கு கிடைத்த வெற்றி இன்ஷாஅல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🎉
@rahimakuthus7765
@rahimakuthus7765 Жыл бұрын
Mashallah alhamdulillah... Allah ungaludaiya intha sevaiyai porunthikolvvaanaga..yaar ellam intha bakiyam niraitha padalai keatukonndu thowba thedugiraargalo avargalukum intha dua vai kabul seithu athan nanmaigalai ungalukum ungal peatrorgal pillaigal kudubathargal anaivargalukum thanthu arulvaanaga ameen ameen yarabil aalameen 🤲🤲🤲
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
Alhamdulillah Alhamdulillah Thumma Alhamdulillah ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம் May Allah bless you and your family with good health, barakaat and peace.
@bashafairose1083
@bashafairose1083 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் எத்துனை அழகான துஆ எல்லா தேவைகளையும் உள்ளடக்கிய ஒரு அழகிய துஆ அது ம தங்களின் காந்த குரலில் உள்ளம் உருகச் செய்து விடுகிறது, அல்லாஹ் தங்களுக்கு அருள்பாலிக்கட்டும் ஆமீன்.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் புரிவானாக!
@deensahi2775
@deensahi2775 Жыл бұрын
​@@AhmadSalihFaheemi" enakku dua seinka.,oru pirachnaila maddikondu muzikirean,.velila vara vazi terila...ellam iruntum nimmati illai,..ennai sutti enna nadakkutunnu terila.,,..
@mohamedsafmsa8919
@mohamedsafmsa8919 7 ай бұрын
Amin
@ameerali5797
@ameerali5797 3 ай бұрын
😮​@@AhmadSalihFaheemi
@haseenabegum2095
@haseenabegum2095 Жыл бұрын
அருமையான அருமையான துவா மனம் நிறைவான துவா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி மாஷா அல்லாஹ்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
Wa Alaikumussalam - Alhamdulillah
@subaidhadeen523
@subaidhadeen523 Жыл бұрын
ஆமீன்ஆமீன்ஜஸாக்கல்லா
@moulaviabduljaleelimthathi7394
@moulaviabduljaleelimthathi7394 Жыл бұрын
குரலைஇன்னும் அல்லலாஹ் அழகாக்குவானாக ரமளானின்பரகத்தால் துஆவையும் குரலையும் கபூலாக்குவானாக ஆமீன்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
ஆமீன் வ இய்யாகும் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@MrAbusalik
@MrAbusalik Жыл бұрын
ஆமின் ஆமின் அருமையான துஆ
@habibathunnowfiya5526
@habibathunnowfiya5526 Жыл бұрын
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரகத்செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் அல்லாஹ் உங்களுக்கு ஆயுள் காலத்தைக் அதிகப்படுத்துவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
ஆமீன் வ இய்யாகும் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
ஆமீன், ஆமீன் யா ரப்பல் ஆலமீன், ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்! ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்!! ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்!!! 💐🙇‍♂️🤲
@tfftff4927
@tfftff4927 11 ай бұрын
أمين أمين أمين يارب العالمين 🤲🤲🤲
@mohamedkutty6912
@mohamedkutty6912 Жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன். அல்லாஹ் உங்களுடைய எங்களுடைய நல் செயல்களை ஏற்றுக் கொள்வானாக.
@Aswan-g6b
@Aswan-g6b 5 ай бұрын
Ameen
@aaqibahameth
@aaqibahameth Жыл бұрын
அழ்ழாஹூம்ம ஆமின் பிஹக்கி செய்யிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலைஹி 😢😢🤲🏻🤲🏻
@riswana8297
@riswana8297 Жыл бұрын
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்
@innallaahaamaassaabireen5209
@innallaahaamaassaabireen5209 Жыл бұрын
அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார் اللهم صل وسلم على نبينا محمد فى الاولين والاخرين ﷺ 🤲🤲
@roseofislam
@roseofislam Жыл бұрын
இந்த துஆக்களை அல்லாஹ் எங்களை தொட்டும், உங்களை தொட்டும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன். கண்களும், இதயமும் நனைந்து, குளிர்ந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@seyedmeerathaika6489
@seyedmeerathaika6489 10 ай бұрын
ஆமீன் அல்லாஹ் போதுமானவன் சிறப்பாக்கி வைப்பான் ஆமீன்
@Hajima-u9p
@Hajima-u9p Жыл бұрын
அண்ணா உங்களுக்கு எல்லா‌ சந்தோஷத்தையும் அல்லாஹ்‌ தரவேன்டும் உங்கள் ஹலாலான‌ ஹாஜத்துக்கள்‌ அனைத்தையும்‌ அல்லாஹ்‌ நிறைவேற்றி ‌ வைக்க வேண்டும் ஆமீன்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
ஆமீன் - உங்களுக்கும் எல்லா பாக்கியத்தையும் நாயன் அருள்வானாக
@shahulhameedibnuabdulrahma9813
@shahulhameedibnuabdulrahma9813 Жыл бұрын
அருமை, உருக்கிவிட்டது... எம்மை... எனை... மாஷாஅல்லாஹ்.
@bathuljaleel4953
@bathuljaleel4953 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹும்ம ஸல்லி அலா ஸெய்யிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி ஸல்லம். அஹ்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் பொருட்டாலும் அஹ்லுல் பைத்தினர்கள் பொருட்டாலும் இந்த பாடலின் வரும் அனைத்து துஆ வையும் அல்லாஹ் கபூல்ச் செய்வாவானாக ஆமீன் ஆமீன் யா அர்ஹமர்ராஹிமீன் 🌹♥️🌹
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
வ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@MuhammadHussain-cb8bs
@MuhammadHussain-cb8bs Жыл бұрын
🤲🏼 ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆ’லமீன்
@masterdad2174
@masterdad2174 Жыл бұрын
Masha Allah. Aameen Aameen Ya Rabbal Aalameen. Jazakallahu Khayr.
@salihathuhaseeba2197
@salihathuhaseeba2197 Жыл бұрын
YaAllah lntha nalla DuaE atikolRabai
@athuatheeb6390
@athuatheeb6390 Жыл бұрын
Mashallah alhamdulillah arumayana kural. Allah ogaluku rahmath seywanaga aameen 💚💚💚💚
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
Alhamdulillaah - Aameen Wa Iyyaakum
@khajamaideen9917
@khajamaideen9917 Жыл бұрын
மாஷா அல்லாஹ்.... ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மத் வ அஜ்ஜில் ஃபரஜகும்
@joychristinal5926
@joychristinal5926 Жыл бұрын
எனக்கு இப்படி எல்லாம் சொல்லி ப்ரேயர் பண்ணத் தெரியவில்லை சகோதரர். நான் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் தான் அல்லாஹ்வை அழைத்து ஜெபிக்கிறேன். அல்லாஹூ அக்பர் 😍
@salihishah7836
@salihishah7836 Жыл бұрын
ஆமீன் ஆமீன்
@abdulkhadarmohideen2397
@abdulkhadarmohideen2397 Жыл бұрын
Mashaallah Alhamdulillah
@aa61193
@aa61193 Жыл бұрын
Aameen.manadhaara aludhu isthigfaar seyya vaithadharku Jazaakumullah khair, baai.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
வல்ல ரஹ்மான் நம் பிழை யாவையும் மன்னித்து அருள் பாலிப்பானாக - ஆமீன்
@mss.habeebrahman8630
@mss.habeebrahman8630 Жыл бұрын
Ameen Aameen Yarabbil Aalameen ❤
@hasanfathi4036
@hasanfathi4036 Жыл бұрын
Ameen
@abdulrahum-o5g
@abdulrahum-o5g 9 ай бұрын
The Creator Allah is RABBUL Aalameen wa ILAAHAL Aalameen!
@rahilaayubkhan_7869
@rahilaayubkhan_7869 Жыл бұрын
Masha allah ❤️ ♥️ ameen ameen yarabbal aalameen
@just_foodie
@just_foodie Жыл бұрын
Aameen..
@AbdulMalik-zh5sq
@AbdulMalik-zh5sq 20 күн бұрын
Masha allah beautiful ❤️😍♥️♥️😍♥️😍♥️😍♥️😍
@ahmedfathima2239
@ahmedfathima2239 Жыл бұрын
Aameen aameen aameen yaa rabbal aalameen. Beautiful duas alhamdulillah
@joychristinal5926
@joychristinal5926 Жыл бұрын
@fathimaadaviya8476
@fathimaadaviya8476 Жыл бұрын
Aameen
@Amrisafaidheen
@Amrisafaidheen Жыл бұрын
Aameen yarabbal aalameen
@MohammedNaisar-v2c
@MohammedNaisar-v2c Жыл бұрын
❤Aameen aameen....
@dawoodibrahim8694
@dawoodibrahim8694 Жыл бұрын
Mhsa Allah
@AthikaBanu-um7jc
@AthikaBanu-um7jc Жыл бұрын
Ameen Assalamu alaikkum
@SeyedMariyam-k6h
@SeyedMariyam-k6h Жыл бұрын
Fathima zulaiha Aameen Aameen yarabbal aalameen ., 3:19 3:21.
@sheiksyedali4698
@sheiksyedali4698 Жыл бұрын
Aameen aameen
@fathimakutty1038
@fathimakutty1038 Жыл бұрын
Aameen Aameen yarabbal alameen 🤲🏻
@NoorDeen-s8b
@NoorDeen-s8b Ай бұрын
ஆமீன் ஆமீன் யாப்பில் ஆலமீன்
@jalka
@jalka Жыл бұрын
Masha allah 🌹
@kamaludheen.t.aabdulwahab5495
@kamaludheen.t.aabdulwahab5495 Жыл бұрын
Arumai arumai alhamthulilah
@munawfarmunawfar7580
@munawfarmunawfar7580 Жыл бұрын
Ameen ameen ya rabbal alameen
@jakirussain1492
@jakirussain1492 Жыл бұрын
ماشاء،الله،،،بارك،الله
@saythanibeabdhulradhithsay4106
@saythanibeabdhulradhithsay4106 Жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் மாஷா அல்லாஹ் 🤲
@HasanHasan-eq2sz
@HasanHasan-eq2sz 8 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஸுபுஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் பாரக்கல்லாஹ்
@azhahim
@azhahim Жыл бұрын
ஆமீன், ஆமீன் யா றப்பல் ஆலமீன் 🤲🤲
@TEst-wz6ix
@TEst-wz6ix Жыл бұрын
❤ ஆமீன்
@sheikjabarali5605
@sheikjabarali5605 Жыл бұрын
MASHA ALLAH
@IrfanKm-km9yj
@IrfanKm-km9yj 4 ай бұрын
Ameen aameen alhamdulilah alhamdulillah aameen aameen 🎉❤🎉❤🎉❤🎉❤
@nafeesa5104
@nafeesa5104 Жыл бұрын
Mashaallah brother. May allahu ta Alaa bless you abduntly. Alhamdulillah
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
Aameen Wa Iyyaakum Bi Waseelati Shafeeil Mudhnibeen sallallaahu alaihi wa ala aalihi wa sahbihi wasallam
@KathijaMajeed
@KathijaMajeed 5 ай бұрын
Aameen Ya Rab, I couldn't control my tears. Masha Allah
@navaskareem8387
@navaskareem8387 Жыл бұрын
Masha Allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Aafaa416
@Aafaa416 Жыл бұрын
SubhanAllah, may Allah sbw accept our duas, just want to cry ocean of tears remembering Allah sbw with these duas till my last breath. May the almighty grant mercy to all...
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
May Allah bless all of us to be among His chosen ones.
@Aafaa416
@Aafaa416 Жыл бұрын
Ameen ya Rabbi
@VoiceofMuaadh
@VoiceofMuaadh Жыл бұрын
Mashallah 💕❤️
@syedahamed313
@syedahamed313 Жыл бұрын
Alhamdulillah!!!
@katheejabeevi9215
@katheejabeevi9215 Жыл бұрын
Alhamdulillaah... Maashaa allah... Baaraqallaah.. 🤲
@Hajima-u9p
@Hajima-u9p Жыл бұрын
அண்ணா உங்கள் குரல் என்றால் எனக்கு உயிர் சலாத்துன்‌ நாரியாவை‌ உங்கள் குரலில் கேக்க‌ வேண்டும்
@MalikS-z8t
@MalikS-z8t Жыл бұрын
Masha allah
@rishasadeek6945
@rishasadeek6945 10 ай бұрын
MASHA Allah. May the almighty Allah bless you who write the song nicely.ameen ya rab
@haflal9340
@haflal9340 Жыл бұрын
Aameen Aameen 🤲🤲😭
@aysha173
@aysha173 4 ай бұрын
Mashallah 🕋🤲📿 ameen
@bluedesigner3699
@bluedesigner3699 Жыл бұрын
😢😢😢😢 aameen
@mebosai1997
@mebosai1997 Жыл бұрын
Ameen Ameen ya rabbil alameen🎉
@Nishabarbie-m1h
@Nishabarbie-m1h Жыл бұрын
Subahan Allah ❤அருமையான பாடல் துஆ❤ இனிமையான குரல் ❤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் வஷ் ஷுக்ரு லில்லாஹ்
@Ain_trendy_fashion
@Ain_trendy_fashion Жыл бұрын
Aameen 🤲
@SeyedMariyam-k6h
@SeyedMariyam-k6h Жыл бұрын
Fathima zulaiha Aameen Aameen yarabbal aalameen
@nifraj3282
@nifraj3282 Жыл бұрын
Allahumma baarik😍
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
Aameen Wa Iyyakum
@ameerroshan4832
@ameerroshan4832 Жыл бұрын
Alhamdulillah
@mumtajMumtaj-pf1oy
@mumtajMumtaj-pf1oy Жыл бұрын
Mashallah😢😢❤❤❤
@abdulbasith2301
@abdulbasith2301 Жыл бұрын
Allhamdulilah
@abrosess5051
@abrosess5051 Жыл бұрын
Aameeen
@துளிர்-வ1ற
@துளிர்-வ1ற Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedali-sb9et
@mohamedali-sb9et Жыл бұрын
Masha Allah barakallah
@raafisinsight
@raafisinsight 3 ай бұрын
Alhamdhulillah Excellent lyrics ❤️
@gnanavi2723
@gnanavi2723 2 ай бұрын
Sir I am hindu but etha song very super ❤ return again & again kaykalam pola eruku❤❤
@yaserarafath6581
@yaserarafath6581 Жыл бұрын
Masha Allah remember me in your valuable dua Halrath
@habeebmuhaiyadeen1724
@habeebmuhaiyadeen1724 Жыл бұрын
Ameen ameen. Zazakallah. அருமையான துவா. அருமையான குரல். இந்த துவாவை ஒரு நாளைக்கு பத்து தடவைக்கு மேல கேட்பேன். I like this song. thanks.
@sahulhuk2724
@sahulhuk2724 Жыл бұрын
Masha Allah ❤
@Hajima-u9p
@Hajima-u9p Жыл бұрын
அண்ணா நீங்கள் எங்கள் வீட்டில் பிரந்து‌ இருக்கலாம்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி - அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக!
@UniqueTweencraft
@UniqueTweencraft Жыл бұрын
Masha allah🤲🤲🤲❤
@AneesBanu-m9o
@AneesBanu-m9o 6 ай бұрын
Mashallah ❤🌹
@sathakathullahsathakathull826
@sathakathullahsathakathull826 11 ай бұрын
மாஷா அல்லாஹ்
@rthaslima3051
@rthaslima3051 5 ай бұрын
ஆமின்
@j.risanrisan8053
@j.risanrisan8053 11 ай бұрын
❤❤ mashallah
@mohamedsabry1993
@mohamedsabry1993 4 ай бұрын
❤❤ameen
@afrishahamed9123
@afrishahamed9123 Жыл бұрын
MashaAllah
@abuthahirmac8281
@abuthahirmac8281 Жыл бұрын
Mashallah
@thameemansarikhairi2145
@thameemansarikhairi2145 10 ай бұрын
💓💓💓💓💓💓💓💓💓💓
@mpk.1754
@mpk.1754 Жыл бұрын
Aamen
@farithabegam3188
@farithabegam3188 Жыл бұрын
❤❤❤❤❤
@furkhanfurkhan43
@furkhanfurkhan43 Жыл бұрын
🤲🤲🤲🤲🤲
@VVxg-kr2kb
@VVxg-kr2kb Жыл бұрын
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀❤️❤️🥀🥀
@deensahi2775
@deensahi2775 Жыл бұрын
Bro...enakku dua seinga.,,,.enta kastatil erikireano meezanum,...
@sirajudeensirajudeen1987
@sirajudeensirajudeen1987 Жыл бұрын
அல்ஹ்கம்துல்லாஇப்பாடல்போல்நிரையஎலுதஅல்லாஹ்அருள்புரிவானாகஆமீன்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Жыл бұрын
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@sahulhuk2724
@sahulhuk2724 Жыл бұрын
Insanul sirrih va ana sirruh enbathan poru enna
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
12 January 2025
6:41
JANNAH MEDIA
Рет қаралды 313
கவலை┇As-Sheikh Mujahid Ibnu Razeen┇Tamil Bayan
39:33
Merciful Servant
Рет қаралды 29 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН