பின்னால் வரும் சீரை முன் உள்ள சீருடன் கட்டுவதே தளை. எ.கா: நின்றசீர்(மா) --நீங்களும் வரும்சீர்(நிரை) -- உங்கள் தோழியாக நினைத்துக்கொள்ளுங்கள். இருவரும் பார்த்துக்கொண்டு கைக்குலுக்குவதாகக் கொள்ளுங்கள். இப்போது நின்றசீரான உங்கள் முன் யார் இருப்பார்? வரும் சீரான உங்கள் தோழிதானே? உங்கள் முன் நின்று உங்கள் தோழி வந்து கைக்குலுக்குவாரா? பின்னிருந்து கைக்குலுக்குவாரா? முன்னின்று தானே? சீர்கள் ஒன்றோடொன்று இணைந்து உருவாவதே தளை. இரண்டாவது சீர் நின்றசீராக அமையும்போது மூன்றாவது சீர் வரும் சீராக அமையும். இவ்வாறு ஒவ்வொரு சீரினையும் தளைக்க வேண்டும்.
@vijayaraniprakash35725 жыл бұрын
Madam அடி தொடை சொல்லித்தாங்க
@SivanadiyavalThamizhamma5 жыл бұрын
நன்றி. அடி, தொடை ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். தமிழம்மா இலக்கணம் channel-ல் playlist சென்று பார்க்கவும்.