ஒட்டறுத்தகுளம் 😮 இந்தக் கொட்டிலைத் திருத்த ஏதுமில்லை. கல்லால் சுற்றி சுவர் கட்டி தகரக்கூரைபோட்டு எளிமையாக என்றாலும் சீமெந்துத் தரை போட்ட ஒரு சிறிய வீடு கட்டி பூட்டித் திறந்து பாவிக்கிறமாதிரி ஒரு கதவு போட்டுக்குடுத்தால் பெரிய புண்ணியமாப் போகும். வயோதிப நேரம் தனிமை ஒரு கொடுமை.மற்றவையை விடுங்க.இந்த மண்ணுக்காக தன் மகனை மாவீரனாக்கிய ஒரு தாய்.இந்த மண்ணுக்கும்,போருக்கும் சம்மந்தமில்லாத எத்தனையோபேர் இந்தத் தாய் போன்றவர்களின் இரத்தத்தை உறிஞ்சித்தான் இந்தியா உட்பட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்களை விளம்பரத்திற்காக வாழவைப்பதைக்காட்டிலும் ஈழமண்ணின் உலகவாழ் தமிழர் நீங்கள் உண்மையில் இந்தமண்ணையும் எங்கள் தலைவரையும் மனதார நேசித்திருந்தால் கோடிகள் தேவையில்லை.சிறு உதவிசெய்து இந்தத்தாய்க்கொரு நிழல் கொடுங்கள்.