1979-ம் ஆண்டு சுனில் பிக்சர்ஸுக்காக RC.அசோக் தயாரிப்பில், R.செல்வராஜ் இயக்கத்தில் (கதை, திரைக்கதை, வசனம் உள்பட) நடிகர்கள் விஜய்காந்த், ஷோபா, ஸ்ரீலேகா, S.விஜயலட்சுமி, குள்ளமணி, பாலசந்தர், காளிதாஸ், சிலோன் சின்னையா, சந்திரஹாசன், சோலை ஐயனார், மதுரை துரைராஜ், மதுரை ஸ்ரீஜெயந்தி, SP.மீனா, சுமதி, லட்சுமி மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "அகல்விளக்கு." R.செல்வராஜ் இந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானது தான் இந்த பாடல் வரிகள்! விஜயகாந்த் என்ற பெயரை சூட்டி ஒரு நடிகனாக "இனிக்கும் இளமை" படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை MA.காஜாவையே சாரும்! அனேகமாக அவர் வில்லனாக நடித்த ஒரே படமும் "இனிக்கும் இளமை" தான் என்று ஞாபகம்! விஜயகாந்த் ஹீரோவாக நடித்து 1984-ம் வருடம் ''மதுரை சூரன்'' உள்பட 18 படங்களும், 1985-ம் ஆண்டு "அலை ஓசை" உள்பட 17 படங்களும் திரையிடப்பட்டன. தமிழ் திரை உலக வரலாற்றில் நிகழ்ந்த இந்த சாதனையை வேறு எந்தவொரு முன்னணி நடிகராலும் இன்றுவரை முறியடிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்! சரி... பாடலிற்கு வருவோம்! "நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்...ம்ம் நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம்...ம்ம்ம்" இளையராஜாவின் இனிமையான மெட்டிற்கு தோதாக கங்கை அமரனின் கற்பனையில் கருவாகி உருவான தேன்தமிழ் வரிகளை அழகு தமிழில் பாடி அசத்தியுள்ளார்கள் கான கந்தர்வன் KJ ஜேசுதாஸும் SP ஷைலஜாவும் என்று சொன்னால் மிகையல்ல! 1978-ம் ஆண்டில் கன்னட மொழியில் பெகேட்டி சிவராம் எழுதி இயக்கிய "மாது தப்பட மக" திரைப்படத்தில் "பாடும் நிலா" பாலு & இசைஅரசி S.ஜானகி குரலில் இடம்பெற்ற "பானு பூமியா " எனும் பாடலின் மறு ஆக்கம் தான் இந்தப் பாடல்! சுமனேச ரஞ்சனி ராகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த இருமொழி பாடல்களையும் செவிமடுத்ததில் தமிழில் உருவான பாடல் தான் மனதை வருடும் ரம்மியமான இசைக்கோர்வையுடன் அமையப்பெற்றது என்பதில் உறுதியாக இருக்கிறேன். தனிமையில், கண்களை மூடிக்கொண்டு இப்பாடலை கேட்கும்போது நம்மையுமறியாமல் ஞாபகங்களின் தேரானது நிலைகொள்ளாமல் இளமை பருவத்து காட்சிகளை வரிசைப்படுத்தி குதூகலமடைய செய்வதின் அழகே தனிதான்! அதெல்லாம் சொல்லிமாளாது! வானொலியை மட்டும் நம்பியிருந்த அந் நாளில், என்ன தான் அவசர வேலையிருந்தாலும் இப்பாடல் ஒலிக்க நேரிட்டால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு முழு பாடலையும் கேட்ட பின்பு தானே அங்கிருந்து கால்கள் நகரும்! பாடலின் நடுநடுவே விளம்பரத் தொல்லையில்லாத காலம் என்பதால் வானொலியில் எப்படா இப்பாடல் ஒலிக்குமென்ற எதிர்பார்ப்பு கொஞ்ச நஞ்சமா? இலங்கை தமிழ் சேவை அலைவரிசையில் இப்பாடலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி மனதை சிறை பிடித்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன். பாடல் ஒலிக்கும் போது ஒலியை கூட்டி மகிழ்ந்து, மகிழ்வித்த நாட்கள் எல்லாம் விலகி வெகு தூரம் சென்றதெல்லாம் வெறும் கனவு அல்ல...நிஜம் தான்! காலங்கள் மாறின... மானிடக் கோலங்கள் மாறின.... ஆனாலும் இப்பாடலின் மீதுள்ள மோகம் மட்டும் தீரவில்லை! காலத்தால் அழியாத இனிமையான இப்பாடலை உருவாக்கியவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி.மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 02-01-2024
@user-mk1io8vh5z Жыл бұрын
ரசனை யன்
@tamilsongshd Жыл бұрын
Thank you for this beautiful facts of the movie.
@karthiartist-c2j Жыл бұрын
என்ன ஒரு துள்ளியமான விளக்கம். மிக்க நன்றி
@PS2-6079 Жыл бұрын
@@karthiartist-c2j பாராட்டுதலுக்கு நன்றி
@PS2-6079 Жыл бұрын
@@tamilsongshd நன்றி
@mkr5796 Жыл бұрын
இந்த இருவருமே இன்று இந்த உலகில் இல்லை. ஒருவர் கலையின் ஆளுமை.மற்றவர் மனிதரின் ஆளுமை. மிகப்பெரிய இழப்பு
@sriskandarasasomasundaram546411 ай бұрын
உண்மை தான்
@yogah230510 ай бұрын
இவர்கள் இருவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
@rakeshguna57208 ай бұрын
Captain great
@muthukumaran30246 ай бұрын
❤
@natarajmunusamy25975 ай бұрын
😂
@SivaKumar-jo8km Жыл бұрын
என் சிறுவயது ஞாபகம் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டது. அன்று இப்பாடல் இனித்தது. இன்று ஏனோ. கண்கலங்குகிறது. கேப்டன் நினைவாக...
@kaderkader9252 Жыл бұрын
Ssss enakum
@shantishetty9052 Жыл бұрын
😢
@harshiniraju5980 Жыл бұрын
எனக்கும்.
@SaRavanan.l1967 Жыл бұрын
Sss
@vadivamballohithaasan7081 Жыл бұрын
Yes I like this song
@VLRG100 Жыл бұрын
இது கேப்டன் பாடல் என்று இப்போது தான் தெரியும். பல முறை கேட்டு இருக்கிறேன். முதல் முறை பார்க்கிறேன்.
@chitracitu663 Жыл бұрын
Enakkum ippothuthan thorium en captain song enru. I love this song 🎵 ❤ ❤❤
@kalaiselvis4246 Жыл бұрын
Me too
@தமிழ்-ல4ற Жыл бұрын
அட ஆம❤
@SankariAmala Жыл бұрын
Same ❤
@shamshathshammu5217 Жыл бұрын
S
@ananthanveluppillai6873 Жыл бұрын
ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு புரட்ச்சி கலைஞர் ஒரு உதராணம்💪💪💪🙏❤️
@Malarvizhi_Malarvizhi Жыл бұрын
Yes 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@pulens544411 ай бұрын
திருமணத்தின் பின்னர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் அவர் தான் உதாரணம்!
200%correctly அரசியல் person 80% நடிக்க vendum enna செய்ய
@maruthi_store7 ай бұрын
நிஜத்தில் நடிக்க தெரியாத நல்ல மனிதர்.....❤
@SrinivasaSrinivasav-g5e3 ай бұрын
Avar oru maha nadigan
@padmavathykolendai7169 Жыл бұрын
கேப்டன் இறந்தபின்பு அவர் நடுத்த படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துவருகிறேன். கண்ணீர்தான் மிஞ்சுகிறது. நல்ல நடிகரை இழந்துவாடுகிறது தமிழ் உலகம்… அன்புடன் மலேசியா
@raghunathanrakshan97718 ай бұрын
Nanum
@KarthickRoshan-f4h5 ай бұрын
Nanum
@SENTHILKUMAR-cp4el Жыл бұрын
RIP Captain😢 . நீங்கள் மரணமடையவில்லை.காற்றுள்ள வரை நிறைந்து இருப்பீர்.
@arumugam8109 Жыл бұрын
Sssss
@dasps5934 Жыл бұрын
. വിജയകാന്ത് സാറിന് ആദരാഞ്ജലികൾ
@arumugam8109 Жыл бұрын
@@dasps5934 அழகான பாடல்
@rajamohan8106 Жыл бұрын
நாம் சுவாசிக்கும் காற்றில் நமது கேப்டன் உள்ளார்..
@FemivijiFemiviji Жыл бұрын
Yes❤
@ManuvelVelladurai Жыл бұрын
ஒரு மகத்தான மாமனிதர் அன்புச் சகோதரர் விஜயகாந்த்....சகோதரா! ..உன்னை நினைக்கையில் என் கண்கள் குளமாகிறது..ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறுதல் அடைய பிரார்த்திக்கிறேன்..
@sharikaraveenah3225 Жыл бұрын
இந்த படத்தில் சார் நடிக்கும்போதுதான் கதாநாயகி வந்துவிட்டதாக கூறி விஜயகாந்த் சாரை சாப்பிட கூட விடாமல் படப்பிடிப்புக்கு இழுத்து சென்றதாக அவர் பேட்டிகளில் கூறியுள்ளார்....நினைக்க வேதனையாக இருக்கின்றது...அவர் முன்னேறி வர எத்தனை முட்டுக்கட்டைகளை தாண்டியிருப்பார் ...நல்லவர்களை இந்த உலகம் என்றுமே வாழ விட்டதில்லை😢😢😢😢
@VadivelVadivel-f2r Жыл бұрын
இந்தத் திரைப்படத்தின் பெயர் என்ன
@tamilsongshd Жыл бұрын
அகல் விளக்கு
@manumathid2412 Жыл бұрын
அகல்விளக்கு
@BadmintonWorld-be9ii Жыл бұрын
Hero vanthar endru, double hero
@sharikaraveenah3225 Жыл бұрын
@@BadmintonWorld-be9ii இல்லை ஹீரோயின் ஷோபனா வந்துட்டாங்க என்று....😔
@vishnumoorthmoorthy963011 ай бұрын
எங்கள் கேப்டன் அவர்களின் எவர் கீரின் பாடல்களில் ஒன்று என்றும் கேப்டன் ரசிகன்
@gandhimohan.d6620 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி!
@shakilameeramohideen4020 Жыл бұрын
எப்படி சார் உங்கள மறக்குறது முடியல 😢 இவ்வளவு நல்லவர் கஷ்டப்படாமல் இறந்திருக்கலாம்.மனசு வலிக்குது 😭
@rajkamal79858 ай бұрын
😢😢😢😢😢
@gtk64 Жыл бұрын
ஷோபாவை உள்ளங்கைகளில் தாங்கி, பின் அவரை நேர்த்தியாக கிழே இறக்கும் நிஜ ஹீரோ…நம் கேப்டன்
@VSenthil-yg3qx Жыл бұрын
Wow..... I watch s bro
@meeraahamed Жыл бұрын
I too noticed ❤
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித் Жыл бұрын
நானும் அதையே நினைத்தேன் 👍🏻கேப்டன் வலிமையான உடல் வாகு 👍🏻👍🏻
@AmudhaKrishnaswamy-zt5vo10 ай бұрын
Athula shobabalagha balance pannuvanga
@k.s.rajeshraju867410 ай бұрын
😆❤
@C.sankarSankar-tm4wn11 ай бұрын
சிறுவயது முதலே ஏதோ நினைவுகள் பாடல் என்மனதி ல் பதிந்து விட்டது இன்றும் மறக்க முடியாத பாடல்
@muthuraman6950 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் மனதை எதோ செய்யும் சிறு வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் நினைவுகள் ஏனோ பின்னோக்கி 😢
@AdariKrishnamurthy-dd8lo4 ай бұрын
Yes radio cylon 4 to 5 pm ks raja ,h hameed
@Sam-y5s6d Жыл бұрын
அருமையான இன்னிசை கீதம்! அழகு தாரகை ஷோபா,நம்ம கேப்டன் நடிப்பு மனதை நெருடுது! 1980 களில் காதலில் மனதை பரிகொடுத்தவர்களுக்கு இப்பாடல் மனதில் லயித்திருக்கும்!❤❤❤❤❤love never fails!😂😂😂😂😂😂
@Mr_Hari_.46_ Жыл бұрын
❤
@sundarbala7083 Жыл бұрын
உண்மை.
@yasotharaparamanathan8063 Жыл бұрын
உண்மை அந்த காலத்து காதல் இனிமையானது
@arthanarieswaran4381 Жыл бұрын
அழகு தாரகை எல்லாம் இல்லங்க நமக்காக யாரும் காத்திருக்க கூடாது 6 மணி சூட்டிங் வந்தது ரெண்டு மணிக்கு கேப்டன் பசி தாங்காம சாப்பிடும் போது வந்தாங்க 🌹
@AmudhaKrishnaswamy-zt5vo10 ай бұрын
Arthaneeswaran avungalukku enna velayo
@jeromsock65106 ай бұрын
மீண்டும் அந்த காலகட்டம் வரப்போவதில்லை நாமும் பிறக்க போவதும் இல்லை.
@VijayaKumar-ol3gz4 ай бұрын
கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் புகழ் வாழ்க என்றும் அவர் ரசிகன் நான் பாண்டிச்சேரியிலிருந்து
@muralisethuraman8291 Жыл бұрын
இனி என்று காண்போம் அந்த கம்பீர குரலுக்கு சொந்தகாரர் கேப்டன் அவர்களை அவருடய இனிமையான பாடல்களை கேட்கும் போதேல்லாம் கண்கள் கலங்குகிறது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
@reshmasethureshna654 Жыл бұрын
ஷோபாவை விஜயகாந்த் சார் தனது இரண்டு கைகளில் தூக்குவார் அற்புதமான காட்சி அதையும் மறக்க முடியாது விஜயகாந்த் சார் ஷோபாமேடத்தையும் மறக்க முடியாது
@nisicraftgifts2397 Жыл бұрын
ஒரே பாடலில் நடித்த கதாநாயகன் கதாநாயகிஎன்றுமே மனசை விட்டு நீங்காதவர்கள் என்றால் அது சோபா அம்மாவும் கேப்டன் அவர்களும் மட்டும் தான்.
@rajeshpalani1552 Жыл бұрын
தங்கத் தமிழன் நமது கேப்டன் விஜயகாந்த் இவ்வுலகம் உள்ள வரை உங்களுக்கு என்றைக்கும் இறப்பு இல்லை ஐயா 😭😭😭😭😭😭😭🙏💐🙏💐💐🙏🙏💐🙏💐💐🙏🙏💐🙏💐💐🙏🙏💐🙏💐💐🙏🙏💐🙏
@Obito-c9u Жыл бұрын
எனக்கு பழைய நினைவுகள் வருகிறது இந்த பாடல்கள் கேட்கும் போது கண்கள் கலங்குகிறது எனக்கு மிகவும் பிடிக்கும் 30 வருடங்கள் super சிற வயது பாடல் சூப்பர் ❤❤❤
@KarthikKarthik-gq8mj Жыл бұрын
40 years
@fathimabegum6617 Жыл бұрын
😂😂😂😂miss you captain sir
@yesudasyesudas1200 Жыл бұрын
என்றும் எங்கள் நெஞ்சில் நீங்கள் வாழ்வீர்கள் கேப்டன் சார்
@bethusaamy1044 Жыл бұрын
நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் உங்கள் நினைவுகள் அனைவருடைய இதயங்களில் இருந்து மறக்க முடியாது
@dhanabalvelaudham9417 Жыл бұрын
உண்மை
@chithrasekar8569 Жыл бұрын
Yes
@suthaginidevathas5 ай бұрын
🙏🙏
@gomathyravichandrababu9829 Жыл бұрын
இப்பொழுது இந்த மா மனிதன் நம்மிடம் இல்லை இந்த பாடல் கண் கலங்க வைத்த பாடல்
@muthamilselvam1339 ай бұрын
சோபா அழகை மிஞ்சிய நடிகை இன்றுவரை பிறக்கவில்லை 🌹🌹🌹🌹
@VijayanJayson Жыл бұрын
இவ்வளவு நாள் ரசிச்சு பார்த்த என் கண்களே .. இன்னைக்கு ஏன் இந்த பாட்ட பார்க்க விடாம தண்ணியா கொட்டுற ? என் தாய்த்தலைவன பார்க்கனும்.... (முடியல) நீங்க எங்க போனிங்க ? இன்னும் மக்களுக்கு பசி பிணி இருக்கு ... ஏன் போனிங்க ?❤❤❤❤😢😢😢😢 இன்னிக்கி ஏன்
@nagalakshmiv659 Жыл бұрын
இந்த பாடலை கேட்டிருக்கிறேன் வீடியோவை இப்பத்தான் பார்க்கிறேன்.அருமை.இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@V.Multicuisinechannel Жыл бұрын
Yes
@AshokKumar-hy6ez Жыл бұрын
Naanum than
@amarasinhamkugaraj9298 Жыл бұрын
இருவருக்கும் கண்ணீர் அஞ்சலி
@kumarprasath8871 Жыл бұрын
நீங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் மறையாது கேப்டன்😢😢😢
@theepetti4066 Жыл бұрын
நடிகர்களுக்கு என்றுமே மரணமில்லை என்று மக்கள்திலகம் எம்ஜியார் சொன்னார் .
@Hijklm Жыл бұрын
MGR ஒரு கேடு கெட்ட சண்டாளன். ஏழைகளுக்கு கிள்ளி கொடுத்தும் சண்டாளர்களுக்கும் ரவுடிகளைக்கும் அடியாட்களுக்கும் வேசிமகன்களுக்கும் அரசாங்க நிலங்களை ஏக்கர் கணக்கில் அள்ளி கொடுத்துள்ளான் இன்றைய கல்வி கொள்ளையர்களை உருவாக்கியவன் சண்டாளன் வேசிமகன் MGR விஜயகாந்த் சிகரம் MGR சிறு மேடு
@SanthoshKumar-hd3mu10 ай бұрын
That second BGM is killing.. what a symphony score it is!!!
@palanisamyr3213 Жыл бұрын
அய்யா.. உங்கள்.. பிரிவு. எங்களை மீளாத்துயரில்.. ஆழ்த்திவிட்டது .. உயிருள்ள வரை.. ஏன்.. இந்த புவி உள்ள வரை.. உங்கள் புகழ்.. ஒழிக்கும..பட்டி தொட்டி எங்கும்..
@SleepyBackpacker-bf9wt11 ай бұрын
கேப்டனின் பிறப்பு இந்த உலகின் சிறப்பு.🙏🙏
@cksajeevkumar10 ай бұрын
ഇളയരാജ - ഗംഗൈ അമരന് - എസ്. പി. ഷൈലജ.... പിന്നെ നമ്മുടെ സ്വന്തം ദാസേട്ടനും! എത്ര കേട്ടാലും വീണ്ടും വീണ്ടും കേള്ക്കാന് കൊതിപ്പിക്കുന്ന ഗാനം. ലളിതം, സുന്ദരം, മോഹനം.
@meenaramakrishnan4465 Жыл бұрын
நாம் வாழும்பொழுதே நமக்கு மிகவும் பிடித்த மகத்தான கலைஞர்களை இழக்கும் பொழுது மனம்படும் வேதனைக்கு அளவே இல்லை. எனக்கு மிகவும் பிடித்த SPB அய்யா இன்று புரட்சி கலைஞர் பொம்மனசெம்மல் விஜயகாந்த் 😭😭😭😭
@gsph239511 ай бұрын
நான் இரண்டு முறை திரு விஜய காந்த் அவர்களை பார்த்து உள்ளே ன்.. எங்கள் 2:06 school mate senior... devakottai de britto old student...he has come for attending one function... ஒரு படம் அங்கு உள்ள சங்கரவதி கோட்டை என்ற பழைய கோட்டை ஒன்றில் அவரின் shootting எடுத்தார்கள்...
@Dhinaviji Жыл бұрын
எந்த ஒரு சலனமும் இல்லாமல் அனைத்து மக்களின் ❤ இதயங்களில் நீங்கா இடம் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤❤❤❤❤
@MuruganMahasri-cn9qx Жыл бұрын
ஒரு கருப்பு வைரம், மக்கள் அதை பார்க்கும் காலம் வரையிலும் கண்களைப் பறிக்கும் ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.....🙏👍🏿🌹🌹🌹
@PSrinivasan-l3p Жыл бұрын
விஜயகாந்த் போலவே பாடலும் மிகவும் இனிமையானது நன்றி
@rathinamr8424 Жыл бұрын
பாடல் இனினம ஆனால் மணது வலிகிறது
@sri.santhaeperumalsri.santhape Жыл бұрын
அண்ணி என் கடவுள் இதோ என் இதய மடல் விஜி அப்பா வள்ளல் பெருமான்.அப்பி நீங்க புணர் பூசம் நட்சத்திரம் உயீர் நீந்தீர்கள் .சொர்கத்தில் இடம் பெறுவீர்கள் .🎉❤அப்பா நீங்கள் எல்லார் நெஞ்சில் வாழ்ந்து இருக்கீர்கள்ஸ்ரீ.ஸாந்த பெருமாள்.எம் .ஏ.
@kalaiselvi9106 Жыл бұрын
அருமையான பாடல்.....🎉 கேப்டன் sir miss u உங்களை பார்க்கனும் மிகவும் ஆசைபட்டேன், ஆனால் கடைசி வரை உங்களை பார்க்க முடியாமல் போனது எங்களோட துரதிஷ்டம் .... கேப்டன் சார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறோம்....😭😭😭 RIP
@krshnamoorthi45443 ай бұрын
கங்கை அமரன் அய்யாவின் பாடல் வரிகளை ஏன் பாராட்ட மறந்தோம், 😢😢😢
@bossraaja126719 күн бұрын
இவ்வளவு talent aaaaaa k amaran!!!!!!!!
@MThennarasu-i4l5 ай бұрын
அந்த பொற் காலத்தில் பூத்த காவிய மலர்கள் ஆனால் இந்த காவியத்தில் இடம் பெற்ற இரண்டு மலர்களும் நம்மிடையே இல்லை அந்த காற்றினிலே வரும் கீதம் நம் செவி களுக்கு தேனாக வந்து பாய்கிறது
@shanthivijayan156Ай бұрын
இந்த குரலில் உள்ள இனிமை இசை பாடல் வரிகள் எதையும் தனியாக பிரித்து பார்க்க இயலாமல் பாட்டியின் கலந்த சாதம் போல் அருமை மனசு கனக்கிறது 70-80 கடைசி வரை உள்ள காலத்தை மனம் தேடுகிறது இதோ இப்பொழுதே அந்த காலம் திரும்பிடாதா என்று 😢😢😢
@muniasamynagalingam558 Жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொன்றே இருக்கலாம் இந்த அகல்விளக்கு திரை படம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குசமர் பணம் வாழ்க கேப்டன் விஜயகாந்த் புகழ் 🙏🪔🙏
@rambeliever1010 Жыл бұрын
அற்புதமான பாடல்....... தெய்வத்திரு.கேப்டன் விஜயகாந்த் அண்ணன் 😭😭😭😭😭
@ChandraMohanP-u9q Жыл бұрын
நடிகை ஷோபா எல்லோருக்கும் பிடித்த நடிகை ❤❤
@ganapathi4583 Жыл бұрын
கேப்டன் அவர்கள் முதல் படம் இனிக்கும் இளமை// 2-வது படம் அகல் விளக்கு// நமது கேப்டன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி//
@m.kaliyaperumal.m.kaliyape26409 ай бұрын
இருவரின் சிரிப்பழகே பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கேமராவிற்கு வெளியே நடிக்கத் தெரியாதவர்கள் ! ஷோபா & விஜயகாந்த்.இவர்கள் இருவரையுமே இழந்ததை நினைத்தாலே இதயம் வலிக்கிறது.
@mthennarasu3584 Жыл бұрын
அந்தக்கால கார்கால நிகழ்வுகளை திரைப்படமாக்கிய. ஆர். செல்லராஜ். மற்றும். அதில். நடித்த கேப்டன் மற்றும் நடிகை சோபாவும் அந்ந பாடல்கேற்ப அவர்களின் நினைவும் நமது இளமை கால. நினைவும் நம்மால் மறக்க இயலாது அதுபோவ் நம்மால் கேப்டன் அவர்களையும். மறக்க முடியாது என்பதை பதிவு செய்கிறேன்
@mthennarasu358411 ай бұрын
நன்றி
@asakhussainb98395 ай бұрын
அந்தக்கால சிலோன் ரேடியோ பாடல்கள் மிகவும் இனிமை என்றும் இளமை. சூப்பர்
@JayaMarimuthu-l2g5 ай бұрын
மனதிலே மலருதே உண்மைதான் இந்த பாடல் ❤❤❤
@malavaran7313 Жыл бұрын
மனதை மயக்கும் பாடல் ஏதோ நினைவுகள் கப்டன் நினைவு வரும் பாடல் 👩🏼🦰🇩🇰🙏🏼
@abdulkalammampad86549 ай бұрын
I am from kerala. Teally mis my young days when hearing such beauteous songs😓😓😓
@andalvaradharaj1127 Жыл бұрын
அருமையான பாடல் நடிகர்கள்... இன்றும் கேட்டால் இனிக்கிறது❤
@RadhaKrishnan-bx5whАй бұрын
ஏதோ நினைவுகள் ஏதோ கனவுகள் கண்ணை மூடினாலும் மூடாவிட்டாலும் வருகிறது சரி வயதாகி விட்டது கேட்பது வரை கேட்போம் ரசிப்போம் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@NitinKumar-ig8bd7 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல்.. OLD IS ALWAYS GOLD
@Master-i4u Жыл бұрын
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா 🙏🙏🙏
@v.sivakumarveerapan1739 Жыл бұрын
இந்த பாடலை மட்டும் வச்சிக்கிட்டு இந்த படத்தை கொளுத்திடலாம், அந்தளவுக்கு படுமொக்கபடம்... கேப்டனுக்காகவும் இசைஞாநிக்காகவும் எத்தனைமுறை வேண்டுமானாலும் இந்த பாடலை ரசிக்கலாம்...
@nlakshmibalasubramanian93469 ай бұрын
ஆமாங்க நீங்க சொல்றது உண்மைதான்
@k.r.veluchami...34 Жыл бұрын
இந்த படத்தில் கேப்டனுக்கு சொந்த குரல் இல்லை....இன்று நம்மை விட்டு செல்லும் முன்னரும் இறைவன் அவரது குரலை பறித்துக்கொண்டான்😢😢
@karthick922 Жыл бұрын
நான் எபொழுதெல்லம் மனசு துன்பமாக இருக்கும் பொழுது இந்த பாடல் வரிகள் என்னை இதமக்கிவிடும்
@arunachalampillaiganesan54217 ай бұрын
தபேலா எங்கே, இப்படி பாதி குரல் தொண்டையிலும், மறு பாதி மூக்கு வழியாக பாடும் வசிகிர குரல் எங்கே இசை, இப்படியாப்பட்ட இசை எங்கே போச்சி, இதை பார்த்து Mr M.S. V யும் என் கடையிலும் இப்படி சரக்கு உள்ளது என்று, சரிசமமாக, அந்த எழு நாள்கள் , படத்துக்கு இசையை அவர் பங்குக்கு இதமான இசையை கொடுத்தார் அதுவும் அருமை தான் -
@RobertbellarminRobertbellarmin7 ай бұрын
S
@VijayaKumar-vo6pw3 ай бұрын
இதுவும் தெய்வீக ராகம் ஒரே மாதிரி இருக்கும் கேட்பதற்கு
@theflash4460 Жыл бұрын
80 களின் இனிய பாடல் மறக்க முடியாத நினைவுகளை ஞாபகப்படுத்தும் இப்போது விஜயகாந்த் சார் அவர்கள்ளையும் சேர்த்து😢 அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@k.r.veluchami...34 Жыл бұрын
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் என்னாளும் .... ஏக்கம் உள்ளாடும்...❤😢R Kv
@ruthras67573 ай бұрын
இளையராஜாவின் இசையின் கேப்டனின் நடிப்பில் ஒரு அருமையான பாடல் இந்தப் படத்திலிருந்துதான் அவர் அன்னதானம் அனைவருக்கும் சமமான உணவு என்று முடிவெடுத்தார்
@balasundarammarimuthu2717 Жыл бұрын
கேப்டனின் இயல்பான நடிப்போடு அழகான பாடல். ஷோபா வின் முகபாவங்கள் மிகவும் அருமை.
@ChandranP-p4w2 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் சூப்பர் 👍👍👍👍👍👍👍🙏
@sekarurban5844 Жыл бұрын
Raja always Raja beautiful composition Thank you sir 24.12.2023
@yazhinies2446 Жыл бұрын
இப்பாடல் 80களில் இலைங்கை ஒலிபரப்பு கூட்டுஸதாபனம் 2ல் அடிக்கடி கேட்ட ஞாபகம் ...சவுன்ட் ஏற இறங்கும் அந்தநாள் இனி வராது.
@chandruhm5018 Жыл бұрын
மிகச்சிறந்த மாமனிதர் அதனால் தான் அவர் கருடர் வலம் வர சொக்கலிங்கம் சொர்க்கலோகம் சென்றார்.அவர் மாதிரி அனைவரும் பிறருக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை இருந்தால் போதும் நாம் அவருக்கு செய்யும் கடமை ஆகும்
@emotionalking1465 Жыл бұрын
...விஜயகாந்த் மனம் குணம் எனக்கு மட்டுமே சொந்தம் மீறி.. விஜயகாந்த் பிடிக்கும் சொல்றவங்க சந்தோஷமும் எனக்கே சொந்தம் சந்தோஷமும் எனக்கே சொந்தம்.
@arumugam81097 ай бұрын
@@emotionalking1465 ஆஹா😃👍 பாடல் சூப்பர்
@BalajiN-z3o2 ай бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் சிறப்பான பதிவு
@nselva9782 Жыл бұрын
கேப்டன் நம் நினைவில் வாழ்ந்து வருகிறார்.
@kanmanibaskaran3772 ай бұрын
கேப்டன் தனிமனித ஒழுக்கம் இல்லாதவர் கேப்டன் நல்ல மனிதர் தான்.
@karuppusamykaruppusamy5014 Жыл бұрын
நல்ல மனம் கொண்ட உங்கள் புகழ் வாழ்க பல்லாண்டு
@HemaLatha-yz6pf Жыл бұрын
இந்த படத்தில், புதிதாக வந்துள்ள கதாநாயகன்,கதாநாயகி சோபாவை, உள்ளங்கையில் வைத்து சுற்றுவார், என்ற புகழ்பெற்று,அதற்காகவே இந்த அகல்விளக்கு படத்தைபார்க்கப்போன,பெண்கள் கூட்டம். பழைய ஞாபகம் அருமையான, வித்தியாசமான பாடல். சோபா,இறந்த போது கேட்டு கேட்டு பதிந்த பாடல்.
@Dass.s-il4vn6 ай бұрын
ஒரு லட்சம் முறைகேட்டு இருப்பேன் சலிக்கவில்லை
@laserselvam4790 Жыл бұрын
நிஜவாழ்வில் நினைவுகளுடன் காட்சியாக இன்று பாா்க்க ஆனந்தமாக உள்ளது திருப்தியுடன்
@devimurugesan5667 Жыл бұрын
Two legends are no more now... RIP both of them 😢
@udayakumar95912 ай бұрын
🎉❤🎉 அன்பு ஷோபா நெஞ்சம் மறப்பதில்லை அடுத்த பிறவியில் இணைவோம் ❤🎉❤uk
@ruthutv6074 Жыл бұрын
ஆழ்ந்த இயங்கல் மிகவும் வருத்தமாக உள்ளது கேப்டன்
@karubbiahmanickam9586 Жыл бұрын
தமிழ் திரையுலகில் என்றும்..உச்ச நட்சத்திரம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 2024ல் லைக் போடுங்கள்
@vasanthiganesan40768 ай бұрын
I can listen to this song again & again , another master piece from KJ JEDUDAS
@bharathvenkataraman9324 Жыл бұрын
I listened this song first time when i was travelling in an auto 🛺 time was 11.45 night in chennai.... at that moment itself i am addicted to this song. Different feel and Great Composition by Maestro Ilayaraja ❤
@cheenuvijay9306 ай бұрын
He is the greatest person ever in the tamil cinema industry after MGR. No one can replace his place in this world.
@anandwilsontravelblogs5393 Жыл бұрын
We are remembering Your songs captain. You are living in cinemas now.
@sivakumarr1972 Жыл бұрын
அருமையான பாடல் கேப்டனுக்கு ஆழ்ந்த இரங்கல்
@anandaprasad4124 Жыл бұрын
Melodious song even today Let his soul rest in peace from bengaluru west ❤❤❤❤❤❤❤
@sharmz826628 күн бұрын
ஏதோ…. நினைவுகள்…கனவுகள் மனதிலே மலருதே… அ….ஆ…ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம் ஏதோ….. நினைவுகள்….கனவுகள் மனதிலே மலருதே….காவேரி ஊற்றாகவே… காற்றோடு காற்றாகவே…தினம் காண்பதுதான் …ஏதோ.. மார்பினில் நானும்…மாறாமல் சேரும்…காலம்தான் வேண்டும்…..ம்ம்ம்.. வான்வெளி எங்கும்….என் காதல் கீதம்…வாழும் நாள் வேண்டும்…..ம்ம்ம்.. தேவைகள் எல்லாம் தீராத நேரம்…தேவன் நீ வேண்டும்…..ம்ம்ம்….சேரும் நாள் வேண்டும்…..ம்ம்ம்….ஏதோ….. நினைவுகள்.. நாடிய சொந்தம்…நாம் காணும் பந்தம்…இன்பம் பேரின்பம்…..ம்ம்ம்.. நாளொரு வண்ணம்…நாம் காணும் எண்ணம்…ஆஹா ஆனந்தம்…..ம்ம்ம்.. காற்றினில் செல்லும்…என் காதல் எண்ணம்…ஏங்கும் எந்நாளும்….ம்ம்ம்… ஏக்கம் உள்ளாடும்…..ம்ம்ம்……ஏதோ….. நினைவுகள்…
@Lallissamayalarai Жыл бұрын
மனதை சங்கடப்படுத்துகிறது.கண்ணீரைஅடக்கமுடியவில்லை.
@KunahKannan Жыл бұрын
when i was in my teenage I have listened to these song frequently, I still remember old times bcz radio is my best friend, companion ❤😂😢😮😊😊😂❤
@ponrajponraj139 Жыл бұрын
ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் உடன் ஜோடியாக நடிக்க எந்த நடிகையும் வரவில்லை' நடிப்பில் இமயம் ஷோபா விஜயகாந்த் இருவருக்கும் கண்ணீர் அஞ்சலி😌