ஒரே மெட்டைப் பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவது என்பது இசையமைப்பாளரின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களின் ரசிகர்களின் மனதைத் தொடும் அளவுக்கு, குறிப்பிட்ட அந்தப் பாடலை மெருகேற்றுவதைப் பற்றியது. ராஜேஷ் கன்னா, அமிதாப் நடித்த ‘ஆனந்த்’ படத்துக்காக இசையமைத்த ‘நா ஜியா லாகே நா’ பாடலின் மெட்டை பாலுமகேந்திராவின் முதல் தமிழ் படமான ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில் ‘நான் எண்ணும்பொழுது’ பாடலாகத் தந்தார் சலீல்சவுத்ரி. இந்திப் பாடலின் சூழல் வேறு. இளமைக் கால நினைவுகளின் தொகுப்பாகவே தமிழில் இப்பாடலை உருவாக்கியிருந்தார் சலீல் தா. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். தமிழ்த் திரைக்கு அறிமுகமான காலத்திலேயே பிற தென்னிந்திய மொழிகளிலும் இசையமைக்கத் தொடங்கிவிட்ட இளையராஜாவும் ஒரே மெட்டை வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனந்த் நாக், ரஜினிகாந்த், சாரதா நடித்த ‘மாத்துதப்பட மக’ (1978) எனும் கன்னடப் படத்துக்காக அவர் இசையமைத்த ‘பானு பூமியா’ பாடலின் தமிழ் வடிவம்தான் ஜேசுதாஸ், எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘ஏதோ நினைவுகள்’ பாடல். கன்னடப் பாடலை எஸ்.பி.பி.யும் எஸ். ஜானகியும் பாடியிருந்தார்கள். ஒரே மெட்டுதான். ஆனால், பாடகர்கள் தேர்வு, தாளம், நிரவல் இசை தொடங்கி பாடலின் உணர்வு வரை, இதன் தமிழ்ப் பிரதி தரும் அனுபவம் முற்றிலும் வேறானது. ஓராண்டுக்கு முன்னர் உருவாக்கிய கன்னடப் பாடலை அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக மெருகேற்றியிருந்தார் இளையராஜா. ஆங்கிலத்தில் haunting என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இதற்கு ஆட்கொள்ளுதல் என்று தமிழில் பொருள் கொள்ளலாம். அந்த வகையில், கேட்பவர்களை மெள்ளமெள்ள ஆட்கொண்டுவிடும் பாடல்களில் ஒன்று இது. காதலின் களிப்புடன் பாடப்படும் டூயட் பாடலாக அல்லாமல், கைவிட்டுப்போன காதலின் நினைவு தரும் வலியின் இசை வடிவமாகவே இப்பாடலைக் கொள்ளலாம். விரிந்து வியாபித்திருக்கும் இயற்கையின் பிரம்மாண்டத்துக்குள் தன்னைக் கரைத்துக்கொள்வதன் மூலம், இழப்பின் வலியை மறக்கச் செய்யும் போதை வஸ்து என்றே இப்பாடலைச் சொல்ல முடியும். ‘ம்..ஹ்ம்..’ என்று ஜேசுதாஸின் மெல்லிய ஹம்மிங்குடன் தொடங்கும் பாடலின் உயரத்தை, தொடர்ந்து ஒலிக்கும் ஷைலஜாவின் ஹம்மிங், பரந்து விரிந்திருக்கும் வானம் வரை இட்டுச் செல்லும். சுற்றியலையும் மெல்லிய காற்று தவழ்ந்து பூமியில் படர்வதைப் போன்ற உணர்வைத் தரும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். ‘ஏதோ நினைவுகள்…’ எனும் பல்லவியின் முதல் வார்த்தைகளே, கடந்து வந்த வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தேங்கி நிற்கும் வசந்த காலத்தின் உறைவிடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். நண்பகல் வேளை ஒன்றில், சமவெளியான நிலப்பரப்பில் நின்றுகொண்டு வானில் மிதக்கும் மேகங்களை ரசிக்கும் உணர்வைத் தரும் நிரவல் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. பூமியிலிருந்து வானை நோக்கிப் பொழியும் சாரல் மழையாக, இப்பாடலின் இசையை தன் மனதுக்குள் அவர் உருவகித்திருக்க வேண்டும். கேட்பவர்களின் அப்போதைய மனநிலைக்கு ஏற்ப வெவ்வேறு மனச் சித்திரங்களை உருவாக்கும் தன்மை கொண்ட பாடல் இது. குறிப்பாக, இப்பாடலின் இரண்டாவது நிரவல் இசை தரும் உணர்வு விவரணைகளுக்கு அப்பாற்பட்டது. கடந்த கால நினைவின் நெகிழ்ச்சியான தருணங்களையும், மெல்லிய சோகத்தையும் தனக்குள்ளேயே மீட்டிப் பார்க்கும் பாவத்துடன் ஒலிக்கும் கிட்டார் இசையைத் தொடர்ந்து, அலை அலையாகப் பரவும் காற்றில் மிதக்கும் எண்ணங்களாக விரிந்து செல்லும் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா. பகல் நேரத்துத் தனிமையில் அமர்ந்து இப்பாடலைக் கேட்பவர்களை இனம்புரியாத அமானுஷ்ய உணர்வு ஆட்கொண்டுவிடும். பாடலின் இறுதியில் ஒலிக்கும் பல்லவியின் வார்த்தைகளை ஜேசுதாஸும் ஷைலஜாவும் பகிர்ந்துகொள்ளும்போது பாடலின் வடிவம் வேறொரு தன்மையை அடைந்து முடிவுறும். “காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்” எனும் உணர்வுபூர்வமான வரிகளை எழுதியவர் கங்கை அமரன்.
@rajaperiyasamy12953 ай бұрын
Amazing review, thanks for sharing with us. You described exactly how we feel when we listen to this song.
@chandrabuwan3 ай бұрын
@@rajaperiyasamy1295 Thank you very much 😊
@TP-fr7sv3 ай бұрын
பாடல் அழகு ஆனந்தம் என்றால் தங்கள் விமர்சனம் அற்புதம். மனதை தொடும் பாடலினை மயங்கவைத்த விதத்தை விவரித்த விதம் அற்புதம்.
@chandrabuwan3 ай бұрын
@@TP-fr7sv மிக்க நன்றி நண்பரே!
@ramanathanramakrishnan87993 ай бұрын
அற்புதம். தாங்கள் சுபா மேடம் உடன் இணைந்தால் நிகழ்ச்சிகள் அடுத்த சிகரத்தை தொடும்
@kumar72975 күн бұрын
சுபஸ்ரீ அவர்களின் இசை வர்ணனை கேட்க அற்புதம் இசை கலைஞர்கள் ஒருங்கிணைப்பு அற்புதம்
@sruthi49853 ай бұрын
வணங்குகிறேன் மேடம் உங்கள் இசை சேவைக்கு வணங்குகிறேன்... உங்கள் பணி தொடரட்டும் மேடம் !இந்த ஏழை ரசிகனால் உங்களுக்கு வாழ்த்து மட்டும் தான் அனுப்ப முடியும்
@sundaravallir83873 ай бұрын
கல்லூரி நாட்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல். மலரும் நினைவுகள். QFR குழுவினர் அனைவரும் சிறப்பாக வழங்கினர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். ❤❤
@kalainiealexander90953 ай бұрын
100%
@JaganRakshitha-z8e3 ай бұрын
ஏதோ பழைய நினைவுகள் மீண்டும் வருகிறது
@Anand-g9k3 ай бұрын
பல ஆண்டுகளாக, தரமான இசையுடன் இந்தப் பாடலைக் கேட்க விரும்பினேன். அது இப்போது உங்களால் நடந்தது மேடம். அழகாக மறுசீரமைக்கப்பட்டது. ராஜா சார் மிக அருமை.
@raviedwardchandran3 ай бұрын
Sweet Memories... Bringing My Soul Back To Early 80's...An Evergreen Masterpiece From The Great Legend... Beautifully Sung & Excellent Music...🤍🔥🌹
@palanikumar65423 ай бұрын
அதற்குள் முடிந்துவிட்டதே இந்த பாட்டு என்ற எண்ணத்தோடு மீண்டும் கோட்க தூண்டுதே மனம். பூவே செம்பூவே என்ற ஏசுதாஸ் அவர்களின் பாடலை QFRல் கேட்க ஆசை...
@jayalakshmi43253 ай бұрын
ஷோபா & விஜயகாந்த் Sir Super Really Super Thanks 👌🙏
@Rajlakshmiah3 ай бұрын
Just listened to the Kannada version., totally different orchestration for the Tamil song which is haunting heavily, amazing experience!!!. Unbelievable genius music by Raja Sir!!
@vidhyaaiyer17853 ай бұрын
அகல் விளக்கு இந்தப் பாடல் எப்போது qfr இல் ஏற்றப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த கும்பலில் ஒருத்தி நான். North Carolina Ganesh V looks very familiar to me... நல்ல மெல்லிய குரல், first சரணம் முடிந்து துண்டு பல்லவி ending huskness so cute .. second சரணம் his full ஆளுமை, நல்ல நிதானம் and maturity in singing. பூர்ணா பரிபூரண voice, great singing... ம் ம் sustaining sangathi in சரணம் done very well ( GV also) words pronounced with great clarity also. Both the singers கொஞ்சம் கூட நின்ற இடத்தை விட்டு நகரல... GV பாடும் போது background இல் that small bridge இல்... யாரோ.... வருகிறார் போகிறார் park இலே என்று பல்லவி படலாம் போல் இருக்கு. கார்த்தி super 👌 extremely done well... சாமி sir தகிட தாள கதி என்றால் ஒரு தனி குஷி தான். செல்வா very nice, ஊஞ்சலில் கண்ணன் ஊதும் குழல் போல். ஷ்யாம் bro outstanding strings... Loop இல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்... shiva crafts the frame with a lot of musicality. அருமை அருமை
@ShyamBenjamin3 ай бұрын
Thanks
@mariappana541Ай бұрын
பாடகர்,பாடகி குரல் மிகவும் தரமாக உள்ளது இசையும் அருமை
சில பாடல்கள் மீண்டும் பிறந்து வாழத் தூண்டுகிறது. ராஜாவின் இசை வாழ வைக்கிறது.
@TheMadrashowdy3 ай бұрын
Haunting song.. Great reproduction...
@ajanantonyraj206318 күн бұрын
Well done India நன்றி
@ramsubu71553 ай бұрын
மிகவும் சிறப்பு. தாங்கள் மேலும் வளர வாழ்த்துகள் மேடம்.
@saravananselvarangam46443 ай бұрын
அம்மையீர், என்னுடைய மகன் திருமண வரவேற்பில் மூன்று விசாலமான தொலைக்காட்சித் திரைகளை அமைத்து தங்கள் படைப்புக்களை மூன்று மணி நேரத்திற்கு மெல்லிசையாக வழங்க எண்ணியிருந்தேன். குறுகிய காலத்தில் தனி ஒருவனாக திருமண ஏற்பாடுகளை கவனித்தமையால் தங்களிடம் அனுமதி பெற்று இன்னிசை ஏற்பாடு செய்ய இயலாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தையளித்துக்கோண்டே உள்ளது. மிகவும் அருமையான காலத்தால் ஆழிக்க இயலாத அனைவரின் நெஞ்சையும் கொள்ளைகொண்ட நிகழ்ச்சி. தங்கள் பணி தொடர இறைவன் தங்களுக்கு துணை நிற்க வேண்டுகிறேன்.
@sivam301426 күн бұрын
எனது கனவும் பாடல் இது....கேட்கிறேன்....கிறங்குகிறேன்...இனிமை... இனிமை....
@luckan203 ай бұрын
Wonderful singing. King of all kings is Maestro iLayaraja, sir.
@indirapattabiraman15063 ай бұрын
மெகா ம்யூசிக்கில் பழய பாடல்கள் வாழ வைத்து வருகிறது 👍உங்கள் சேவை தொடரட்டும்🌹
@rajkumargovindrao7773 ай бұрын
Mysterious music taking all of us to a different world ..only Isai Ghnani can give us. Ganesh n Purna sung it brilliantly understanding the feelings of the Song. Music guitar, flute, programming no chance. Very well presented by Shiva. Shubha Mam's presentation and the information is icing on the cake. Wonderful 👍. Long waited Song. Thanks Mam
@ShyamBenjamin3 ай бұрын
Thanku
@vp46733 ай бұрын
தலையை குனியும் தாமரையே பாடல்... waiting for this song
@bamashankar48903 ай бұрын
Mee too 🙌
@suriyaa2803 ай бұрын
ஏற்கனவே போட்டாங்க னு நினைக்கிறேன்
@v.haribabu93083 ай бұрын
ஹம்மிங் லயே இரு குரல்களும் அசத்திவிட்டார்கள். இசை வருடல்களுக்கு வாழ்த்துக்கள். கேப்டனும் ஷோபாவும் இல்லையே இப்பாடலை இன்று கேட்க. பாடலின் ஊற்றை சொன்ன சகோதரிக்கு பாராட்டுக்கள். 👏👏👏.
@PremAnand-tk8yk3 ай бұрын
நீன்ட நாள் எதிர்பார்த்த பாடல் விவரிக்க முடியாத அளவு மனதை அள்ளும் செம பீலான பாடல் நள்றி ❤QFR❤
@rajasekaranrajasekaranma3 ай бұрын
What a classical song by Raja sir, yesudas and shailaja very melodious singing Purna and ganesh venkatraman very nice singing with beautiful orchestration
@jeyaramg21423 ай бұрын
Excellent song. One of my favourites of IR. Both the singers and the orchestration by the team is brilliant.
@devanvenkat653 ай бұрын
❤loveble song raja always lead the song
@VIGNESHGOPAL3 ай бұрын
K.J. Yesudas has a divine quality to his voice, and Ganesh also possesses a similarly divine voice. It's precisely because of this that I can listen to K.J. Yesudas with my eyes closed, fully immersed in his voice. Ganesh has never failed to entertain us, and it’s not just Ganesh; all the band members have also performed exceptionally well.
@PDWaltz3 ай бұрын
Haunting composition by One and only Raaja
@TEB64161Ай бұрын
Superb voice.It's God's gift for both the singers.
@rajalakshmisrinivasan13953 ай бұрын
Ever green 💚 song. After so many years., lovely presentation. Kudos to all.
@ashokanand73903 ай бұрын
After the last few weeks finally a good melodious song selection. Amazing. Much awaited. Superb performance by everyone.
@padmav-ic6yo3 ай бұрын
Awesome Presentation by Ganesh and Purna🎉🎉 வர்ணனை அற்புதம்🎉Really touches our heart....Music and Lyrics too🎉🎉Kudos
@marimuthucolumbus85133 ай бұрын
அருமையாகப் பாடியுள்ளார்கள் Good team work
@jothibasupichaimani80833 ай бұрын
A meticulous recreation of a classic, the orchestra delivers a brilliant performance filled with remarkable passion and precision. Every note unveils untold emotions and feelings, bringing out the true essence of the composition. Only someone who has truly journeyed through this masterpiece, like Raja, could convey it so deeply. Many thanks to Subha Madam for bringing this to life!
@antonyarockiyathas94353 ай бұрын
நன்றி நன்றி நன்றி, எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@selvisundar28343 ай бұрын
Wow super song my favorite singers beautiful qfr ❤tkumam
@rajtheo3 ай бұрын
Beautiful episode. Be it be Subha's description, be it be the mesmerizing song, be it be the orchestration, It is beyond words. Excellent singing Ganesh and Poorna and the backing by the QFR's musicians . 👍👍👍👍 Thank you.
@velmaster20103 ай бұрын
This is an evergreen composition of Isai Gnani. Ganesh and Purna excellent rendition. Venkat, Selva and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin3 ай бұрын
Thanks
@loganathangujuluvagnanamoo733Ай бұрын
Excellent music , voices,enjoyable❤❤❤❤
@stanleypremkumar54023 ай бұрын
Etho ninaivugal thaan......wow
@mahamayurramesh47023 ай бұрын
அருமையான குரல் வளம் இருவருக்கும். அதே சமயம் உச்சரிப்பு மிகவும் முக்கியம். பெண் பாடகர் "வேண்டும்" என்பதை "வேடும்' என்று பிழையாக பாடியுள்ளார். கவனம் செலுத்த வேண்டும். நன்றி வாழ்த்துக்கள்
@k.a.pargunamarumugam87172 ай бұрын
அருமை அற்புதம்.மீண்டும் கேட்கிறேன் எங்க பிடித்தீர்கள் இந்த ஷ்யாம் பெஞ்சமின் ஐ.மனுஷன் சும்மா கலக்குகிறார்.குழுவில் உள்ள அனைத்து இசைக் கலைஞர்களும் அருமையாக இசைக்கின்றனர்.பாடகர்களும் அருமையாக பாடினார்கள்.🙏
@ShyamBenjamin2 ай бұрын
Nandri sir!
@arunarajamani13813 ай бұрын
Beautiful song singing etc your explanation excellent.yes these songs are ever evergreen song 🎉
@Vivekaviews22 күн бұрын
Excellent rendition 🎉, Thanks to Subhashree Ma'am and entire QFR family members 🎉
@sapthagirienterprises41562 ай бұрын
இனிமை இனிமை.. இசை குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@yogiraja31263 ай бұрын
வணக்கம் , ஒரு பாடலின் பின்புலத்தினை அழகு தமிழில் எல்லோரும் புரியும்படி அலசி ஆராய்ந்து சொல்லும் உங்களையும் என்ன ஒரு ஆளுமை இசைக்கலைஞர்கள் மீட்டிய இசை இசைக்கோர்ப்பு பாடிய இருவர் தேன் குரல் இனிமை ,படப்பிடிப்பு ,காட்சி கோர்ப்பு அனைத்தும் அருமையோ அருமை அனைவருக்கும் கலைமகளின் கடாட்சம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் ...இ .யோகி ,நோர்வே
@sethuramankrishnan98842 ай бұрын
It has been unbelievable from Shyam. யார்சாமிநீ!! Male voice is melodious. The lady... மேல் ஸ்தாயில எப்படி ஒரு அனாயாசம்! !
@tonyjoseph19693 ай бұрын
Wonderful presentation ❤ Francis and his friends might have taken this song well above the heavens 💕
@kandhavelm30123 ай бұрын
ஏதோ நினைவுகள்.... இரத்தத்தில் கலந்த பாடல்
@JeyaseelanJeyaseelan-e8g3 ай бұрын
Very beautiful evergreen song. Very brilliant and excellent submission. Big salute to the entire team.❤❤❤❤❤
@asokanjegatheesan55633 ай бұрын
பாடகர்கள் இருவரின் குரல் வளமும் அருமை! பாடல் கேட்பதற்கு இனிமையாகவும், சுகமாகவும் இருந்தது. ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! 👏👌💐💯
@rahmathullahkn95023 ай бұрын
ஏதோ நினைவுகள் 🎉 Suuuuuuuuuuuuuuuuuuuuper
@aravasundarrajan7663 ай бұрын
Excellent presentation , absolutely classic music reproduction by musicians and rendering by Singers... Appreciate one and all , Team QFR , God bless y'all...
@SenthilKumar-mt3bs3 ай бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர்.... ராசாவின் பாடலை கேளாதோர் ❤... நன்றி QFR.....
@VenuGopal-tc9bb3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சொர்க்கம் என்றால் அது இதுதான் 🙏🙏🙏
@maheshna-in4bjАй бұрын
கேட்க கேட்க இனிமை நன்றி மேடம் 🙏
@geetha98suresh3 ай бұрын
வர்ணனை மிகவும் அருமை 🎉
@michaelmaheshwaran7353 ай бұрын
❤ ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பது தான் ஏனோ... ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பது தான் ஏனோ... மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும்... வான்வெளி எங்கும் என் காதல் கீதம் பாடும் நாள் வேண்டும்... தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்... தேடும் நாள் வேண்டும்... ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்... நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம்... காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்... ஏக்கம் உள்ளாடும்... ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
@vvender29822 ай бұрын
Awesome qfr. Congratulations
@vectorindojanix8483 ай бұрын
Hanting melody. Shyam superb. Both singers absolutely brilliant. Lovely.
@ShyamBenjamin3 ай бұрын
Thanku 🙏🏾
@krishmohan63533 ай бұрын
@ 7:51....Undoubtedly it comes in maestro's top 3 classical guitar interlude portions. What a Love What a Romance What a Melody What a calm and soothing effect.
@sundarap20273 ай бұрын
செலக்டிவான பாடல்கள் அருமை இனிமை🎉
@visalakshmi79693 ай бұрын
Hello mam Really Q F R will complete thousand episode the credit will go to your team i m big fan of yu😊 🎉🙏🙏🙏
@thodladhandapanivenkatasub47213 ай бұрын
இளமைக்காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் நினைவுகளைத் தூண்டும் பாடல்கள்
@Ram_srini3 ай бұрын
Awesome don’t say any words.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shivar25553 ай бұрын
Master piece recreated masterly
@murugesanveerappagounder14682 ай бұрын
அற்புதமான வர்ணனை ❤❤❤❤❤❤❤
@ushamurugesan48593 ай бұрын
Beautiful presentation... Shyam rocks, super. Spl mention to Karthick, Selva and Venkat. Way to go team...
@ShyamBenjamin3 ай бұрын
Thanks
@MelvaneGovenderАй бұрын
Absolutely Beautiful ❤
@rajakumarsubramanian79272 ай бұрын
Both r rocking.. wow. voice
@lakshmibeeman37793 ай бұрын
Qfr குழுமத்திற்கு❤❤❤❤நன்றி.அற்புதம்.
@MadPriya13 ай бұрын
Awesome.. Fantabulous... என் பார்வையில் the best QFR episode
@dsaravanan653 ай бұрын
ரொம்ப நாள் தேடி கிடைத்த ஒரு பொக்கிஷமான பாடல் !!!!
@muralitharann88673 ай бұрын
QFRல் நீண்ட நாட்களாக நான் எதிர்பார்து காத்திருந்த அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் நம் மனதை என்னவோ அல்ல என்நென்னமோ செய்துவிடும் ராஜா அவர்களின் இசை அரசவையில் முத்திரை பதித்த ராஜ ராகம்.
@srileo19883 ай бұрын
நானும் 🎉
@neoblimbos3 ай бұрын
💯
@Videorasigan3 ай бұрын
🙏🙏🙏👏👏👏👍👍👍😍. Vaazgha Gangaiameran.
@krishnamurthyrajagopal96133 ай бұрын
அருமையான படைப்பு
@sampathp3655Ай бұрын
Perfect comments by Subhasree madam. Giving equal credit to all involved in this song in both original track and reproduction by QFR. An absolute and well balanced comments. Thanks madam. Sorry forget to appreciates the QFR team for the perfect reproduction.
@sivamcollections3 ай бұрын
ரொம்ப நாளா எதிர்பார்த்த பாடல்
@lamithaiyer18453 ай бұрын
Thanks!
@rameshvell13 ай бұрын
Wonderful presentation by the orchestra especially shyam and flautist, and the wait continues for the singer with SPS Madam's tone,
@Crocodile-d5o3 ай бұрын
Flutist??? Are you joking - haven't you heard the clean sound of real Flutist?
@rameshvell13 ай бұрын
@@Crocodile-d5o what is your query?what is your inference with respect to this song.
@Crocodile-d5o3 ай бұрын
@@rameshvell1 you are praising an amateur flutist - this Selva fella is the worst flutist I have ever come across - listen to the original flute piece - he does not have any proper flute sense - lots of qfr music is excellent but when you use this flutist - it spoils the entire music - perhaps you don't have that kind of indepth music knowledge. Hence praising this flutist is uncalled for, he is basically a useless flutist. Qfr has many good flutist but not this fella - even a road side flutist has better control on the output of the flute sound.
@rameshvell13 ай бұрын
It is your perception about a particular individual,in the context of the entire presentation by QFR the orchestra performance is brilliant in comparison to the singers and shyam and selva's performance are given their due and every flautist cannot be the great Mali.
@ShyamBenjamin3 ай бұрын
Thanks
@venkatv79513 ай бұрын
Golden Era of music, thanks to Subha Madam for the great oratory 😊
@1968sundar3 ай бұрын
மிக அருமை மேடம். நன்றி
@dsaravanan652 ай бұрын
இள் என்ற அக்ஷரத்தை உள் வாங்கும் பாடல், நினைவுகள் , கனவுகள், மனதிலே மலருதே !!!
@n.v.ramanan9483 ай бұрын
தாமதமாய் வந்த தங்கம்❤ அனைவரது அருமையான பங்களிப்புடன்.
@ChennaiTelevision-qn2yu3 ай бұрын
I wonder why less views for such a wonderful mesmerizing performance. Both male and female voices are awesome.
@sriyaskids3 ай бұрын
1000 kattayam super
@jsdpropertiesrealtors76083 ай бұрын
Wait for long time.. Very happy 🙏🙏🙏
@balajir65533 ай бұрын
Excellent rendition of the song.
@venkatraghavan90113 ай бұрын
So mind blowing madam
@adamdasan2544Ай бұрын
அருமை
@MeenaMahesh-zt5zr3 ай бұрын
Eagerly waiting for this song subha ji. My favourite college days song. Singers sang beautifully. Orchestration as always awesome. உங்கள் வர்ணனை அற்புதம் வழக்கம் போல் 👋👋
@bamashankar48903 ай бұрын
My most favourite song ❤️❤️❤️❤️❤️❤️
@kannans29553 ай бұрын
Thank you thank you thank you. Blessings. God blesses you to reach 2000 songs.
@bhuvaneswarithomas86303 ай бұрын
Superb Shiva vera level you're smile nice to see you.Singers both r nicely presented. God bless our team leader Shubha madam.🎉🎉🎉🎉
@veenaranjanimahesh3 ай бұрын
Aha...❤❤ Lovely song
@msankarmsankar32073 ай бұрын
நான் கர்வம் கொள்வேன் இளையராஜா அவர்கள் இசையமைத்த காலத்தில் சுட சுட பாடல்களை கேட்க கொடுத்து வைத்ததற்கு , இசைக்கு இளையராஜா அடிமைகள் நாங்கள், குழல் இனிது, யாழ் இனிது என்பர் குழந்தை மழலை கேட்க்காதவர் என்று சொல்வார்கள் , அதுவெல்லாம் இளையராஜா இசை அமைத்த பாடல் வருவதற்கு முன்.
@kannan362 ай бұрын
இவ்வளவு அருமையான பாடலை "அகல் விளக்கு" படத்தில் காட்சிப்படுத்திய விதம் ரொம்ப சுமார் தான்..