204) கருத்தும் சூழலும் ஒன்று ஆனால் கண்ணதாசனின் பாடல் இரண்டு

  Рет қаралды 8,678

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Ай бұрын

ABBA THE MOVIE என்ற படம். கச்சேரிக்கு ஆஸ்திரேலியா வருகின்ற ABBA குழுவினரை பேட்டி எடுக்க அலையும் ஒரு டிஸ்க் ஜாக்கியின் அனுபவங்கள் தான் இந்தப் படம். இந்தப் படத்தின் பாதிப்பு தான் கே.பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும் படம்.
எம்.எஸ்.விஸ்வநாதன் முழு மூச்சுடன் இசையமைத்த படம். பாடல்கள் அனைத்தும் ஹிட். படத்தில் இடம் பெற்ற முழு நீளப் பாடல்கள் அனைத்தையும் தந்தை கண்ணதாசன் எழுத, சிறு பாடல்கள் அனைத்தையும் மகன் கண்மணி சுப்பு எழுதியது இந்திய சினிமாவில் முதல் முறை. இது ஒரு சாதனையும் கூட.
தன்னுடைய சாதனைகளை கண்ணதாசன் வெளியே சொல்லி தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. உதாரணமாக... இந்திய திரையுலகில் ஒரு பாடலாசிரியருக்கான தேசிய விருதை முதன்முதலில் பெற்றவர் கண்ணதாசன். இதை அவர் எதிலாவது எழுதி இருந்தாலோ, அல்லது பேசி இருந்தாலோ எனக்கு அனுப்பி வையுங்கள்.

Пікірлер: 59
@MahaLakshmi-sl7xs
@MahaLakshmi-sl7xs Ай бұрын
❤கண்ணதாசன்❤இந்த பெயர் கேட்கும் போது ஒரு சந்தோசம். கவிஞர் எழுதிய எல்லா புத்தகங்களையும் வாங்க வேண்டும் என்று ஆசை . நான் இருப்பது கிராமம் .எந்த புக் வாங்கனுன்னு தெரியல .எப்படி வாங்கரதுன்னு தெரியலை
@user-kx6lv1oh3l
@user-kx6lv1oh3l Ай бұрын
வனவாசம், அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து புத்தகங்கள்) அர்புதமாக இருக்கும்❤
@ravindrannanu4074
@ravindrannanu4074 Ай бұрын
எனக்கு 13/14 வயது உள்ள போது, சென்னை கிருஸ்த்துவக் கல்லூரி - பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த காலங்கள், முதன் முதல் படிக்க ஆரம்பித்த, கவியரசர் ஐயா அவர்களின் " கடல் கொண்ட தென் நாடு - லெமூரிய கண்டம் பற்றிய தொடர் நாவல், மற்றும் பல நாவல்கள், அர்த்தமுள்ள இந்து மதம், மேலும் பல தொடர்கதைகள், திரை இசையில் உச்சம் தொட்டு பொற்காலம் அமைத்த பாடல்கள், அற்புத வசனங்கள், கவிதைகள். Etc, Etc.... அதன் தாக்கம், தமிழ் என்று கேட்கும் போதும், எழுதும் போதும் "கண்ணதாசன் " 🙏 என்ற பெயர் தான் மனதிற்குள் பொன் எழுத்துக்களால் பதிகின்றது. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தந்தோம் என்ற ஒற்றைப் பெருமை போதும் வாழ்நாளெல்லாம்.
@athikumar3032
@athikumar3032 Ай бұрын
கவிதைகள் ஏழு பாகமும் அருமை. முப்பது நாளும் பொளர்ணமி. சாகித்யா அகடாமி விருது பெற்ற சேரமான் காதலி.இன்னும் பல
@ravindrannanu4074
@ravindrannanu4074 Ай бұрын
நீங்கள் கண்ணதாசன் பதிப்பகம், அவர்களிடம் தொடர்பு கொண்டால், உங்களுக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறேன். 'சேரமான் காதலி' சாகித்ய விருது பெற்ற அற்புதமான சரித்திர நாவல்.
@dhava06
@dhava06 Ай бұрын
சார் இந்த படத்தை நான் பாடல்களுக்காகவே பதினைத்து முறை தியேட்டரில் பார்த்து இருக்கிறேன் nostalgic movie. நீங்கள் சொன்ன இரண்டு பாடல்கள் மட்டுமல்ல இன்னும் இரண்டு பாடல்கள் அதே பொருள் கருத்தை கொண்ட பாடல்கள் ஆனால் நாயகி பாடுவது இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதில உனக்கு கவலை எதுக்கு lovely bird பாடலும் ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்கள் எல்லாம் அதில் ஒரு வரி மலேயாவில் தலையை வைத்து இந்தியாவில் காலை வைப்போமா என்ன கற்பனை எத்தனை ஆழமான உருவகம் தமிழ் நாடு மலாய் தமிழர் உறவை சொல்ல கண்களில் நீர் வழிகிறது அத்தனை பாடல்களும் தேன் MSV ஐய்யா விளையாடி இருப்பார். தெய்வ அருள் பெற்ற கவிஞர் கவியரசர். இங்கே சிலபேர் பெயரை சொல்ல என்ன வைரமுத்து பாடல் எழுதுகிறார் ஒரு சாதாரண தமிழ் ஆசிரியர் புலமை கூட அவரை விட மேல் அவர் குப்பை பாடல்களை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் கருணாநிதி காலை நக்கி பிழைத்து வாங்கிய பட்டங்கள் விருதுகள் வழங்க பட்டவை அல்ல அப்படி திராவிட கட்சிகள் தயவால் வாழ்க்கை தரத்தை வருமானத்தை உயர்த்தி கொண்ட அவர் திராவிடதை உயர்த்தி என்ன பாடல் எழுதி இருக்கிறார் ஆம் ஒரு பாடல் இருக்கிறது ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னுது ஆரியம் திராவிடம் கலகட்டுமே. அந்த மனிதனின் மன வக்ரம், காமம் மட்டுமே அதுவே வெகு சில காலமே அந்த இயக்கத்தில் இருந்த நம் அய்யா கவியரசர் திராவிடம் பற்றிய பாடல் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா. எந்த பாடலை திராவிட மேடையில் பாடுவார்கள். க(ந)ரி முத்து கால வெள்ளத்தில் கரைந்து போகும். காலத்தால் அழியாத மரணமில்லா கவிஞர் கவியரசர். நன்றி சார் 🙏
@lmchannel2779
@lmchannel2779 Ай бұрын
கடல் அலைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.... கவியரசர் கண்ணதாசன் அவர்களைப்பற்றி நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே... இருக்கலாம்.
@kalidossp1230
@kalidossp1230 Ай бұрын
'இது ஒரு இன்னிசை மழை' என்று இந்த படத்திற்க்கு விளம்பரம் செய்து இருந்தார்கள். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அருமையான பாடல்கள் by கவியரசர் 🙏🙏🙏
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 Ай бұрын
கண்ணதாசனுக்கு இணையாக யாருமே இல்லை
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 Ай бұрын
இப்படத்தை பாடல்களுக்காக பலமுறை பார்த்துள்ளேன்
@sonofgun2635
@sonofgun2635 Ай бұрын
இந்த பாட்டுக்கு MSV VOICE பெரிய பலம்
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Ай бұрын
Musical hit ஆன இந்த படத்தில் அதற்கு ஈடு கொடுத்து அதை hit ஆக்க கவியரசர் அவர்களின் கவிதை நயம் உதவியது அருமை.
@aravasundarrajan766
@aravasundarrajan766 Ай бұрын
நினைத்தாலே இனிக்கும் ஒரு தேனிசை மழை... அன்றைய இன்றைய நாளைய இளைஞர்களுக்கு கண்ணதாசன் ; விஸ்வநாதன் & பாலச்சந்தர் இணைந்து கொடுத்த இன்பம்...
@kokilarani6817
@kokilarani6817 Ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடல்கள் நமக்கு எந்த சூழ்நிலையிலும் எந்த காலத்திலும் எல்லா மனநிலையிலும் தீர்வு கொடுத்து கொண்டே இருக்கிறது.இது எனது உண்மையான அனுபவம்.கவிஞருக்கு என்றும் மரணமில்லை.அவரது புகழ் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.அவரது பெருமைகளைப்பற்றி எங்களுக்கு தெரியப்படுத்திக்கொண்டிருக்கும் அண்ணன் அண்ணாதுரை அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் அகம் நிறைந்த நன்றிகள் 🙏🙏
@ChandraRamkumar
@ChandraRamkumar Ай бұрын
மிக அருமை .. கவிஞர் கண்ணதாசன் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம்..
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 Ай бұрын
நினைத்தாலே இனிக்கும் படத்தில் அத்தனை பாடல்களும் மிக மிக அருமையாக இருக்கும். கவியரசரும் , மெல்லிசை மன்னரும் கலக்கி இருப்பார்கள்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 Ай бұрын
கண்ணதாசன் பாடலில் சுவை, இனிமையை தவிர அதில் உள்ள இலக்கிய நயம் அபாரமானது. இப்போதிருக்கும் எவனாவது ஒரு பக்திப்பாடல் எழுத தெரியுமா, முடியுமா?
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 Ай бұрын
ஒரே காட்சிக்கு எத்தனை பல்லவி மற்றும் சரணங்களை எழுதும் திறமை பெற்றவர் தான் கவியரசர். இது திரை உலகம் மட்டுமல்ல உலகமே அறியும்.
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg Ай бұрын
கண்ணன் முத்தையன் இரு பெரும் தெய்வங்களின் ஆசி பெற்று நிரந்தரமாக கவியரசு பட்டம் பெற்ற உயர் ஆன்மா
@KrishMinor
@KrishMinor Ай бұрын
கண்ணதாசன் பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கிறது.சொல்லிக் கொண்டே இருங்கள் ‌
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
This is greatness of kannadasan iyya excellent lyrics and tune
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 Ай бұрын
கவிதையிலக்கணத்தில் ஒரு முறையைச் சொல்லுவது வழக்கம் அது என்னவெனில்? கூறியது கூறல் குற்றமென்பார்கள் அதுபோலவே கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரே கருத்துக்கள் கொண்ட பாடல்களை வரிவிளக்கத்துடன் தாங்கள் அளித்த விமர்சனமும் அழகு அருமை நன்றி மகிழ்ச்சியண்ணா
@rathinasabapathiarjunan8724
@rathinasabapathiarjunan8724 Ай бұрын
Fantastic explanation sir. I like it very much Mr. Kannadasan, MSV and singers. Super good movie.
@vijayakumarv8038
@vijayakumarv8038 Ай бұрын
அருமையான விளக்கம்👏🙏
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 Ай бұрын
கவிஞரின் கவி திறன் உச்ச கட்டமாக விளையாடிய காலம் அது!
@Funky1z
@Funky1z Ай бұрын
Sir , today (24th June), Kannadasan sir's birthday.
@gobalkrishnan6494
@gobalkrishnan6494 Ай бұрын
கண்ண தாசனை காலமெல்லாம் ரசிக்கலாம், அவன் ஓர் கலை களஞ்சியம். நன்றி....
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Ай бұрын
கண்ணதாசன் ❤🙏💐 அவர்களை பற்றி கேட்க்கும் போது தனி சுகம். ஆச்சர்யம். பிரமிப்பு.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 9 сағат бұрын
ஐயா! "படித்தால் மட்டும் போதுமா? " படத்தில் கவிஞர் அவர்கள் "தொட்டால் சுடுவது நெருப்பாகும். தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!" என்று எழுதியிருப்பார். அதே வரிகளை "தங்கைக்காக" படத்தில் "பட்டால்தானே தெரிகின்றது பாசம் என்பது என்னவென்று! சுட்டாதால்தானே தெரிகின்றது தொட்டால் சுடுவது நெருப்பென்று!" என எழுதியிருப்பார். நடிப்பில் வேறுபாடுகளைக் காட்டியவர் நடிகர் திலகம்! பாட்டில் வேறுபாடுகளைக் காட்டியவர் "கவிஞர் திலகம்!"
@karupeswara
@karupeswara Ай бұрын
கவிஞர் கண்ணதாசன் ஒருவர்தான், கீதையின் சாராம்சத்தை ஒரு பாடலில் கொடுப்பார் - உள்ளத்தில் நல்ல உள்ளம். அதேபோல், எலந்த பயம் எலந்த பயம் என்று ஜனரஞ்சகமாக எழுதவும் செய்வார். கிருஷ்ணர் (கண்ணன்) எல்லா பக்தனையும் அவனுடைய இடத்துக்கு இறங்கி மோக்ஷம் கொடுப்பார் என்பதுபோல்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Ай бұрын
கடந்த பல வருடங்களாக பாடல்கள் என்ற பெயரில் திரும்பத் திரும்ப வரும் சொற்கள்: ஜீவன் பாடுது; தேடி ஓடுது, சங்கீத மேகம்; மேகம் பாடும் ராகம்; ராகம் பாடும் மேகம்; தாளம் போடும்; மேகம் பூத் தூவுது; இப்படி பலப்பல. ஜீவன், ராகம், தாளம், மேகம், ஓடுது, தேடுது போன்ற சொற்கள் இடம் பெறாத பாடல்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். இந்த கரும கண்ணராவிப் பாடல்களை எழுதியவர்களை நினைக்கும்போது, கண்ணதாசன் அவர்களை தமிழ்த்தாயின் தவப் புதல்வன் என்றுதான் சொல்ல வேண்டும்
@jbphotography5850
@jbphotography5850 Ай бұрын
என் தமிழ் ஆசானின் அற்புத வரிகளில் மெல்லிசை மன்னன் எம் எஸ் வி அவர்கள் குரலில் அற்புதமான பாடல் சிவசம்போ இந்த மாதிரி வரிகளை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது கவிஞரை தவிர இந்தப் பாடல் வாழ்க்கையையே அப்படியே இலகுவாக ஆக்கிவிடும் வாழ்க கவியரசர் புகழ்
@MANIKANDAN-xj7cm
@MANIKANDAN-xj7cm Ай бұрын
கண்னதாசன் ஐயா ✒️✒️✒️✒️😍
@anubavangal3710
@anubavangal3710 Ай бұрын
கண்ணதாசன் ஐயா பிறந்தநாள்24/06/2024 இன்று ஆனால் எந்த பதிவும் வரவில்லை எதாவது சுவாரசியமான நிகழ்வை பதிவிடுங்கள் உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்.
@mpsivakumar2578
@mpsivakumar2578 Ай бұрын
🙏
@gopalakrishnansubramanian3697
@gopalakrishnansubramanian3697 14 күн бұрын
In which song,the following lines come:Naan ondru ninaithaal thaan ondru ninaikkum dheivamae unnai ketkiraen
@moorthynatarajan5720
@moorthynatarajan5720 Ай бұрын
நான் இந்த படத்தைப் பற்றி அந்த காலத்தில் கேள்வி பட்டது... இளையராஜாவின் வருகைக்குப்பின் MSVக்கு ஆன சந்தை சரியத் தொடங்கியது என்பது மறுக்க முடியாத உண்மை. அது MSVயின் திரை உலக நண்பர்கள் பலருக்கு மன வருத்தத்தை கொடுத்தது. அவர்கள் உணர்ச்சி வசமாக MSVயை மீண்டும் மேலே கொண்டு வர செயல் படத்தொடங்கினார்கள். அதில் பாலச்சந்தர் முக்கியமானவர். அவர்களுக்கு புரியாத பல வேறுபாடுகளை இளையராஜா அவர்கள் செய்து கொண்டிருந்தார். அதை அந்த நண்பர்கள் புரிந்து கொள்ளவில்லை. அந்த வேறுபாடுகளில் முக்கியமான சில: 1. அந்த தலைமுறை, அவர்களின் முந்தைய தலைமுறையை விட வித்தியாசமான உடல் அதிர்வெண்ணை கொண்டிருந்தார்கள். அதை ஆங்கிலத்தில் Alpha Rhythm என்பார்கள். அந்த அதிர்வை Bass Guitarஐ பாவித்து ராஜா எல்லா பாடல்களிலும் ஏற்படுத்தினார். அதை MSV போன்ற மூத்த தலைமுறை இசையமைப்பாளர்கள் கவனிக்க தவறி விட்டார்கள். 2. இசைக்கலைஞர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாசிக்க ஒரே விதமான சங்கீத குறிகள் (Notation Scheme) இந்திய இசையில் இல்லை. ஆனால், மேல் நாட்டு இசையில் உண்டு. இந்த பலவீனத்தை ராஜா அவர்கள் அவர் இசை அமைப்பாளராக உலகுக்கு தெரிய வரும் முன்பே புரிந்து கொண்டு தன்ராஜ் மாஸ்டரிடம் அதை கற்றுக் கொண்டார். MSVக்கு அப்படி எழுதத் தெரியாது. அத்தோடு, அவரின் கற்பனை வளம் நிரம்பி இருந்ததால் ஒரு முறை சொன்னதை மீண்டும் யாராவது கேட்டால், மறந்து இன்னும் ஒரு புதிய விதமாக சொல்லுவார். இதை தவிர்க்க அவரிடம் பல உதவியாளர்கள் சூழ்ந்திருந்து அவரின் இசையை இசை வடிவமாக எழுதிக் கொள்வார்கள். இப்படி இன்னும் எத்தனையோ வேறுபாடுகள் காரணமாக ராஜாவின் இசைக்கு மதிப்பு கூட, MSVக்கு உதவி செய்ய நினைத்த பாலச்சந்தர் 'நினைத்தாலே இனிக்கும்' என்ற இசை மழையை வழங்கினார். அதில் சுஜாதா என்ற மாபெரும் எழுத்தாளரின் கதையை எடுத்து குட்டிச்சுவராக்கினார். பாவம் சுஜாதா!!! இங்கு கவிஞரின் பங்கைப்பற்றி கேட்டதும் வந்த பழைய ஞாபகங்களை பகிர நினைத்து, பகிர்ந்து விட்டேன்.😊
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 Ай бұрын
❤ வாழ்க கண்ணதாசன் புகழ்❤
@ramnathnatarajan5864
@ramnathnatarajan5864 Ай бұрын
Great Kannadasan ❤❤❤
@malathyshanmugam313
@malathyshanmugam313 Ай бұрын
இறைவன் போட்டதிந்த‌ தோட்டம், இதில் இனிமை ஒன்று தான் நாட்டம்,நாளை‌ என்றெதுவும் இல்லை, இன்று நடக்கும் வாழ்வு தான் எல்லை என்ற கவியரசர் பாடல் வரிகள் here and now என்ற J. Krishnamurthy தத்துவத்தினை‌ நினைவு படுத்துவதால் விரும்பி கேட்பதுண்டு.இன்று தாங்கள் சொல்லி தான் அதே கருத்து உள்ள பாடல் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்றது தெரியவந்தது.நன்றி‌சார்.
@djbhaskar14
@djbhaskar14 Ай бұрын
super sir
@chinniahlingam3012
@chinniahlingam3012 Ай бұрын
அவர் நினைத்த இருந்தால் அரசியல் பெரிய அளவில் உயர் பதவி அடைந்தது இருக்கலாம் அவர் ஒரு போதும் தன்மானம் விட்டுகுடுக்க வில்லை ஐயாவின் புகழ் வாழும்
@gopeekrish6002
@gopeekrish6002 Ай бұрын
GOD OF LYRICS ❤REALLY AMAZING ❤❤❤
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 Ай бұрын
❤veri nice 👍 super 🎉
@bharathraj301
@bharathraj301 Ай бұрын
Super neenga ennum solittu erunga engalugu avarin arumai thirinthu kolkeram
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro Ай бұрын
Kannadasan ayya God ❤
@ghatamSURESHVAIDYANATHAN
@ghatamSURESHVAIDYANATHAN Ай бұрын
தெய்வப் பிறவி 🙏🏻🙏🏻🙏🏻
@Guru0103
@Guru0103 Ай бұрын
நன்றி❤
@sudalaimanimani1733
@sudalaimanimani1733 Ай бұрын
ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக பாடலில், இறுதியாக பெண்கவியின் கேள்வியாக வருவது, அடிமை தூது பயன்படாது கிளிகள் பேசாது அன்பு தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது, தெய்வத்தையே தொழுதிருந்தால் பயனிருக்காது, இளம் தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு... பெண்கவியை வெல்ல வந்த பெருமகனே வருக உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக.. என்று கவியரசர் முடித்து இருப்பார். இதற்கு ஆண்கவியின் பதிலாக... நான் எழுதியது.... "காதல் மணம் கையில்வரக் காத்திருக்காது, வேதனையில் வஞ்சிமீள வஞ்சம் தள்ளாது, நேர்ந்திருந்த கண்ணவனின் காதல் கொண்டாடும் காந்தர்வ கள்வ மணம் தீர்வதுவாகும்.!! ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக... நீ அறிந்ததெல்லாம் என் பெட்டகத்தில் உள்ளதுதான் தெளிக."
@rohitsailas4028
@rohitsailas4028 Ай бұрын
This movie looks like it was inspired by more the Beatles than abba
@gowthamanrs9022
@gowthamanrs9022 Ай бұрын
கவிஞர் எழுதிய கடிதம் என்னிடம் உள்ளது எப்படி உங்களுக்கு அனுப்புவது.சிவாஜி வசனம் சம்பந்தப்பட்ட கவிஞரின் கடிதம் கவிஞர் கைப் பட எழுதிய து
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 Ай бұрын
அண்ணாதுரை c/o கண்ணதாசன் பதிப்பகம், 23கண்ணதாசன் சாலை,,,தி.நகர் , சென்னை 600017 என்ற முகவரிக்கு அனுப்பலாம். நன்றி.
@viswanathan4984
@viswanathan4984 Ай бұрын
இதே போன்று சாந்தி நிலையம் படத்தில் ஒரே மாதிரி சூழலுக்கு நான்கு வேறு வேறு பாடல்கள் தந்ததை ஏற்கனவே நீங்கள் விவரித்துள்ளீர்கள்.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Ай бұрын
லௌகீக வாழ்க்கையின் பயன்பாடு
@muralinatarajanyogambal3173
@muralinatarajanyogambal3173 Ай бұрын
வணக்கம். ABBA படத்திற்கும், நினைத்தாலே இனிக்கும் படத்திற்கும் இடையில் இந்தியில் ‘ஹம் கிஸிஸே கம் நஹி’ வந்தது. குறிப்பாக ‘ABBA’ வின் ‘மாமாமியா’வும், இந்தியின் ‘மிலுகயா’வும் இந்த படத்தின் ‘வானிலே’ ஆக மூன்றும், டியூன் அடிப்படையில் ஒரே ரகம்.
@tonygreenmike
@tonygreenmike Ай бұрын
01:43 Safire theatre la continuous show pathom.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 10 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
186 ) பாட்டெழுத திணறினாரா கண்ணதாசன்?
12:52
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 12 М.
51 )கண்ணதாசன்-சில பாடல்கள்-சில நினைவுகள்- EPS51
14:43
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 114 М.
Arthamulla Indhu Madham
6:45
CHIDUWIN TV
Рет қаралды 32 М.
182 ) பஞ்சுவும் கவிஞரும்
22:24
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 27 М.
157) காலையில் பாட்டு எழுதி மதியம் படப்பிடிப்பு
16:05
198 ) கண்ணதாசன் பற்றி சீமான் சொன்னது தவறு
16:59
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 58 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН