2nd July 2023 Sunday | Our Lady of Good Health Vailankanni | Entrance Song |வருகை பாடல் | திருப்பலி

  Рет қаралды 86

Vyakula Matha

Vyakula Matha

Күн бұрын

ஜூலை 2 : நற்செய்தி வாசகம்
சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் அல்ல.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 37-42
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
“உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
--------------------------------------------------------
பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு
I 2 அரசர்கள் 4: 8-11, 14-16a
II உரோமையர் 6: 3-4, 8-11
III மத்தேயு 10: 37-42
நிகழ்வு
ஒரு பங்குக் கோயிலில் நடைபெறவிருந்த அசன விருந்திற்கு, அந்தப் பங்குக் கோயிலில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள், அவ்வூரில் மிக அருகருகே இருந்த கோழிக்குப் பண்ணைக்கும் ஆட்டுப் பட்டிக்கும் சென்று, அதன் உரிமையாளரிடம், “பங்குக்கோயிலில் நடைபெறுகின்ற இருக்கின்ற அசன விருந்தில் நாங்கள் மட்டன் பிரியாணி வழங்கலாம் என்று இருக்கின்றோம்; கூடவே ஒரு முட்டையும் வழங்கலாம் என்று இருக்கின்றோம். விருந்திற்கு எப்படியும் ஆயிரம் பேராவது வருவார்கள். அதனால் நூற்று ஐம்பது கிலோ ஆட்டுக்கறியும், ஆயிரம் முட்டைகளும் நாங்கள் சொல்கின்ற நாளில் நீங்கள் எங்களுக்குத் தந்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
அவர்கள் பேசியதை அருகருகே இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு கோழியும் ஓர் ஆடும் இவ்வாறு பேசிக்கொண்டன. “பங்குக் கோயிலில் நடைபெறும் அசன விருந்துக்கு கோழிகளாகிய நாங்கள் எங்களுடைய பங்கிற்கு ஆயிரம் முட்டைகள் தருகின்றோம். ஆடுகளாகிய நீங்கள் உங்களுடைய பங்கிற்கு வெறும் நூற்று ஐம்பது கிலோ கறிதான் தருகின்றீர்கள் போல!” என்றது கோழி. அதற்கு ஆடு கோழியிடம், “நீங்கள் உங்களுடைய பங்கிற்கு ஆயிரம் முட்டைகள் வேண்டுமானால் தரலாம். ஆனால், அந்த ஆயிரம் முட்டைகளும் உங்களிடம் இருக்கின்ற ஒரு பகுதிதான். நாங்கள் அப்படிக் கிடையாது. நாங்கள் நூற்று ஐம்பது கிலோ கறி தருவதாக இருந்தாலும், எங்களையே தருகின்றோம். இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு” என்றது. இப்படிச் சொல்லிவிட்டு ஆடு கோழியிடம் இப்படிச் சொல்லி முடித்தது: “சீடத்துவ வாழ்வு கூட தன்னிடம் இருக்கின்ற ஏதோவொன்றைத் தருவதல்ல, தன்னையே தருவது.”
ஆம், உண்மையான சீடத்துவம் என்பது தன்னையே தருவது. அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதின்மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எது உண்மையான சீடத்துவம் என்ற கேள்விக்கு விடையாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம், என்னைவிடத் தன் தாய், தந்தை, மகன், மகள் ஆகியோரிடம் மிகுதியாக அன்பு கொண்டிருப்பவர் என்னுடைய சீடராக இருக்க முடியாது என்கின்றார். இயேசு இவ்வாறு சொல்வதால், இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர், தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களை வெறுக்கவேண்டும் என்பதல்ல. மாறாக, அவர்களைவிட இயேசுவை அன்பு செய்யவேண்டும், அவருக்கு முதன்மையான இடம் தரவேண்டும். இத்தகைய வாழ்விற்கு இயேசுவே மிகச்சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார். ஆம், இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபிறகு, தன்னுடைய இரத்த உறவுகளை விட இறைவனுக்கும் இறையாட்சிக்குமே முதன்மையான இடம் கொடுத்தார். இதனை, இயேசு தன்னைத் தேடிவந்த தாயிடமும் சகோதரர் சகோதரிகளிடம் பேசக்கூடிய வார்த்தைகளைக் கொண்டு (மத் 12: 48-50) மிக எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஆகையால், இயேசுவின் சீடர் தன்னுடைய இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவதில் கருத்தாய் இருக்கவேண்டும்.
தன் இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது சீடத்துவ வாழ்வின் முதல்நிலை என்றால், தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது சீடத்துவவாழ்வின் இரண்டாம் நிலையாகும். இதுகுறித்து இயேசு தொடர்ந்து பேசுகின்றபொழுது, “...தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்” என்கின்றார். ஆம். இயேசுவின் சீடர் அவருக்காகத் தன் உயிரையும் இழக்கத் துணிகின்றபொழுது, அதை காத்துக் கொள்பவராக இருக்கின்றார். இயேசுவின் பொருட்டு எத்தனையோ புனிதர்கள், மறைச்சாட்சிகள் தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். அவர்கள் அன்று தங்களுடைய உயிரை இழந்தாலும், இன்று அவர்கள் இறைவனின் திருமுன் மகிழ்ந்திருக்கின்றார்கள். நாமும்கூட நம்முடைய உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழ்ந்தோமெனில் அதை மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
போரில் குண்டடிபட்டுக் கைகளையும் கால்களையும் இழந்திருந்த படைவீரர்கள் நடுவில், மருத்துவப் பணியும் ஆன்மிகப் பணியும் செய்துவந்த அருள்பணியாளர் ஒருவர், போரில் தன் இரு கைகளையும் இழந்ததுகூடத் தெரியமால் படுத்துக்கிடந்த படைவீரர் ஒருவரிடம் மிகவும் அமைந்த குரல், “போரில் உங்களுடைய இரண்டு கைகளையும் இழந்துவிட்டீர்கள்” என்றார். இதைக்கேட்டு சிறிதும் பதற்றமடையாத அந்தப் படைவீரர் அருள்பணியாளரிடம், “போரில் நான் கைகளை இழந்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள்.

Пікірлер
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
ANNAI velankanni church feast 29 8 2024 video⛪
6:02
sendhil sanja kgf
Рет қаралды 3,9 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 305 М.
Periyanayaki Madha Tamil songs
29:58
Christian Songs
Рет қаралды 92 М.
மாதா சுப்ரபாதம்!
22:09
இறையன்பு
Рет қаралды 497 М.
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН