12 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட திருவிழா சென்ற வருடம் அன்னையின் கொடியேற்றத்தை காண வந்தேன் கூட்டத்தைப் பார்த்து பிரம்மித்து போனேன். கொடி ஊர்வலமும் அதற்கு முன் செல்லும் அன்னையின் தேர் இன்னிசை வாத்தியங்கள் மற்றும் கொடி பாடல் கொடி ஏற்றப்பட்டவுடன் மரியே வாழ்க என லட்சக்கணக்கானோர் முழக்கம் இடுவது ஒரே நேரத்தில் தேவாலயம் உட்பட அனைத்து இடங்களும் மின்னொழியில் ஜொலிப்பது என இவை அனைத்தையும் பார்க்க கண் கோடி வேண்டும். கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த தெய்வீக உணர்வை அனுபவிக்க வேண்டும் பெண்கள் வயதானவர் குழந்தைகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது ஆபத்து 28ஆம் தேதி அன்று விடுதியில் அறை பதிவு செய்வது பாதுகாப்பானது அன்னையின் ஆசீர் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் மரியே வாழ்க