Рет қаралды 40,578
அமெரிக்கன் சாப் சுயி | American chop suey Recipe in Tamil | chopsuey recipe | American chopsuey recipe
English version of this recipe : • American Chop Suey Rec...
தேவையான பொருட்கள்
சாப் சுயி செய்ய
இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு - 1 தேக்கரண்டி
முட்டைக்கோஸ் - 1/2 கப்
கேரட் - 1
வெங்காயம் - 1
பச்சை குடைமிளகாய் - 1/2
தக்காளி கெட்ச்அப் - 1/4 கப்
வினிகர் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 3 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நூடுல்ஸை வேகவைக்க
நூடுல்ஸ் - 200 கிராம்
சோள மாவு - 2 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய்
உப்பு
#AmericanChopSuey #ChopSuey #Friednoodles #அமெரிக்கன்சாப்சுயி
செய்முறை
1. அமெரிக்கன் சாப் சுயி செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் நூடுல்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்
2. நூடுல்ஸ் வெந்தவுடன் வடிகட்டி அதில் தண்ணீர் ஊற்றி அதை ஆறவைத்த பின்பு நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க எண்ணெய் சேர்க்கவும்
3. எண்ணெய் சேர்த்து நன்கு பரப்பியவுடன் இதனுடன் சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டவும்
4. அடுத்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் நூடுல்ஸை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
5. இந்த நூடுல்சிற்கு சாப் சுயி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்
6. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதனுடன் மெலிதாக நறுக்கிய குடை மிளகாய், மெலிதாக நறுக்கிய கேரட், மெலிதாக நறுக்கிய முட்டைகோஸ், தேவையான அளவு உப்பு, தேவையான ளவு மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
7. இந்த வதக்கியவற்றில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலக்கவும்
8. இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தண்ணீரில் கரைத்த சோள மாவு சேர்த்து நன்கு கலக்கவும்
9. பொறித்த நூடுல்சுடன் இந்த சாப் சுயி சேர்த்து பரிமாறவும்
You can buy our book and classes on www.21frames.in...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in...
FACEBOOK - / homecookingtamil
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/... home cooking tamil american chopsuey recipe