Song Lyrics : ஆனந்த பாடல்கள் பாடிடுவேன் எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே - இந்த மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே 1. மேலோக நாடெந்தன் சொந்தமதே - இந்த பூலோக நாட்டமும் குறைகின்றதே மாயையில் மனம் இனி வைத்திடாமல் - நேசர் காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேலை இயேசு நாதன் என் பக்கமாய் வந்தனரே பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே - இந்தப் பாரதில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே 3. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் - தம் அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர் உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் - அங்கு பிழைத்திடவே அன்பர் சமூகமதில் 4. ஜெபமதைக் கேட்டிடும் ஜீவனுள்ள - தேவன் எம் பிதா ஆனதால் ஆனந்தமே ஏறெடுப்போம் நம் இதயமதை - என்றும் மாறாமல் பதில் தரும் மன்னனிடம் -------------------------------------------------------------------------------------------- Aanandha Paadalgal Paadiduvean Endhan Aaththuma nesarai Pugazhdhiduvaen Alachalgal Yaavaiyum Agala Seithae - Indha Meichalil Endhanai Magizha Seithae 1. Meloga Naadendhan Sonthamathae - Indha Boologa Naattamum Kuraigindrathae Maayaiyil Manam Ini Vaiththidaamal - Nesar Kaayamadhai Enni vaazhdhiduvaen 2. Nambikkai Attronaai Alaindha Velai Yesu Naadhan En Pakkamaai Vandhanarae Paavangal Baarangal Parakka Seidhae - Indha Paaradhil Ennai Vetri Sirakka Seidhae 3. Azhaithavarae Avar Unmaiyullor - Tham Azhaipadhil vizhippudan Niruththa Vallor Uzhaiththiduvom Miga Ookkamudan - Angu Pizhaiththidavae Anbar Samugamadhil 4. Jebamadhai Kettidum Jeevanulla - Devan Em Pidha Aanadhaal Aanandhamae Yereduppom Nam Idhayamadhai - Endrum Maaraamal Badhil tharum mannanidam
@jeyasankar44054 жыл бұрын
Supper
@marakathamt99522 жыл бұрын
Wonderful
@jeli20633 жыл бұрын
நல்ல பாட்டு
@emimalemimal85032 жыл бұрын
Old Is Gold
@gloryglory43583 жыл бұрын
Praise the lord. அருமையான பாடல். இப்போ இந்த பாடல்கள் எந்த சபையிலும் பாட மாற்றாங்க. ஆனா இன்னமும் கிருபாசனம் ஐக்கிய சபையில் மட்டும் தான் இந்த பாடல்கள் Sunday ஆராதனையில் பாடுகிறார்கள். சூப்பர். சூப்பர். பாடிய உங்கள் யாவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. God bless you.
@emimalemimal85032 жыл бұрын
எங்களுடைய சபையில் நாங்கள் அடிக்கடி படிப்போம் எங்களுக்கு மிகவும் பிடித்தமான பாட்டு ஆமென் அல்லேலூயா
@user-GGchurch4 жыл бұрын
நன்றி
@generalfacts76524 жыл бұрын
கர்த்தர் உங்க ஊழியங்களை ஆசீர்வதிக்க வேண்டும்.... ரொம்ப ரொம்ப நன்றி... இது போன்ற பழைய பாடல்களுக்காக
@hearnrejoice4 жыл бұрын
Thank you so much 😍
@paulsingh64154 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@TheS15728 Жыл бұрын
Who wrote the lyrics?? Wonderful and meaningful, inspiring song😊