Рет қаралды 24
#தமிழ் #7வகுப்பு#எங்கள் தமிழ் #நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்
“எங்கள் தமிழ்”
அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்