உண்மையை சொன்னதற்காக நன்றி, எல்லா கிருஸ்தவர்கள் இதை பார்க்க வேண்டும்.
@Nagarajvedhagiri Жыл бұрын
Super ah sonninga ayya
@mrromeobeast3505 Жыл бұрын
Super news 📰
@rosalindamaldoss3727 Жыл бұрын
Sariyaha chonneenga Ayya. We have to be very careful.Makkahal, really “Appavihal” We should bear them by Prayers. GPA
@simontimothy1599 Жыл бұрын
மத்தேயு 18ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் முறை, ஒரே சபைக் கூட்டத்தில் - அதாவது ஒரே இடத்தில் கூடிவரும் சபையில் உள்ள சகோதரருக்கிடையே செய்யவேண்டியதைப் பற்றிக் கூறுகிறார். 'சபைக்குத் தெரிவிப்பானாக' என்று கூறும் இடத்தில் ஒரு இடத்தில் கூடும் சபையைக் குறித்தே சொல்ல முடியும், உலகத்தில் இருக்கும் எல்லா விசுவாசிகளையும் கொண்ட சபையைக் குறிக்க முடியாது. மேலும் இயேசு கிறிஸ்து மத்தேயு 16ம் அதிகாரத்தில் 'பரிசேயருடைய புளித்தமாவை'க்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று கூறுகிறார். எது புளித்தமா, எது புளிக்காதமா என்று தெரியாவிட்டால், எப்படி எச்சரிக்கையாக இருக்க முடியும்? இங்கு போதனையைக் குறித்துச் சொல்லுகிறார். தற்போது கள்ள போதனைகளை - வசனத்தை தவறாகப்- போதிப்பவர்கள், அதை அவர்களுடிஅய சபையில் மட்டும் அதை சொல்லுவதில்லை. பொது ஊடகங்களில் அதைப் போதிக்கிறார்கள். எல்லா சபைக் கூட்டத்தில் உள்ளவர்களும் கேட்கிறார்கள். தவறாய் சிந்திக்கத் தூண்டப்படுகிறார்கள். இதைத்தான் அனேகமான TROLL பண்ணுகிறவர்கள் - ஒரு சிலர் தவிற - செய்கிறார்கள். அவர்கள் தவறாய் போதிப்பவர்களைப் பற்றி பேசுகிற நேரத்தைக் காட்டிலும் அதிகமான நேரத்தை அவர்கள் என்ன போதிக்கிறார்கள், அது ஏன் தவறு, வேதத்தின்படி எது சரி என்பதைத்தான் அதிகமான நேரம் எடுத்துச் சொல்கிறார்கள். இப்படி அவர்கள் பொதுவெளியில்தான் சொல்ல வேண்டும், ஏனெனில், தவறான போதனை பொதுவெளியில்தான் உள்ளது. களைகளை எடுப்பது அவர்களின் நோக்கமல்ல. போலி போதகர்கள் அழிந்துவிடவேண்டும் என்று அவர்கள் இதை செய்வதில்லை. அவர்களின் போதனை வேதத்தின்படி - சத்தியத்தின்படி - எவ்வளவு தவறானது, அதற்கு நாம் செவிகொடுக்கக் கூடாது என்றுதான் அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது எவ்விதத்திலும் தவறல்ல. பவுலின் நிருபங்கள் - சபைகளுக்கு எழுதப்பட்டு, சுற்றறிக்கையாக சென்ற - பல தவறான போதனைகளை சுட்டிக் காட்டி, எது சரியென்று சொல்லுவதற்க்காகத்தான் எழுதப்பட்டன. கொலோசெயர், கலாத்தியர், 1 தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர், 1 கொரிந்த்தியர் போன்ற நிருபங்களும், பேதுரு, யூதா போன்றோரும் இதற்காகவே நிருபங்களை எழுதினார்கள். பொதுவான நிருபங்கள். இதனால் ஏற்படும் தீமையைவிட நன்மையே அதிகமாக இருக்கும். மேலும் இது வேதத்தின்படி சரியானதும்கூட. தவறான போதனையை வெளிப்படுத்தாவிட்டால் - சரியான சத்தியத்தைக் காண்பித்து - எப்படி மக்கள் அறிந்துகொள்வார்கள்? கிறிஸ்தவத்தை நாம் காக்கவேண்டிய அவசியம் இல்லை. 2000 ஆண்டுகளாக அப்படித்தான். மெய்யான விசுவாசத்தைத் தான் நாம் காக்க (Defend) செய்யவேண்டும். கூடுதலாக சிந்திக்க, 2 தீமோத்தேயு 2ம் அதிகாரம் வசனங்கள் 2, 14 - 19 வரை வாசிக்கலாம். அவசியமில்லாததும், நன்மை தராததுமான எதையும் பவுல் அப்போஸ்தலன் செய்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். கள்ளப்போதகர்களின் பெயர்களையும், அவர்களின் போதனையையும் அவர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். பொது தளங்களில் போதிக்கப்படும் கள்ளப்போதனைகளுக்கு, எதிர்ப்பையும், ஏன் என்ற காரணத்தையும் பொது தளத்தில் தெரிவிப்பது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன்.
@firstbaptistmdu Жыл бұрын
இப்போது யூடியூபில் கள்ள போதகர்களை ட்ரோல் செய்து வரும் சகோதரர்கள் யாரும் பவுலும் பேதுருவும் அல்ல மற்றும் இவர்கள் சொல்லும் காரியங்கள் எதுவும் வேதத்தில் உள்ள நிருபங்களுக்கு ஒப்பானதும் அல்ல. தேவன் நமக்கு சொல்ல வேண்டியது எல்லாவற்றையும் தமது பரிசுத்த மனிதர்கள் மூலம் வேதாகமத்தில் எழுதி கொடுத்து விட்டார். தேவையான எச்சரிப்புகளும் கொடுக்கப் பட்டுள்ளது. விசுவாசிகள் இதை படித்து தங்களை கள்ள உபதேசத்தில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். சத்தியவான் என் சத்தம் கேட்கிறான் என்று ஆண்டவர் தெளிவாக சொல்லி இருக்கிறார். அப்படியானால் மற்றவர்கள் சத்தியத்தை கேட்க விரும்பாமல் பொய்யை நாடி போகிறார்கள் என்று தான் பொருள் ஆகிறது. 1. சீஷர்களுக்குங்கள் 2. உபதேசம் பண்ணுங்கள் இவை இரண்டு மட்டுமே தேவன் சபைக்கு கொடுத்த பிரதான கட்டளை ஆகும். எங்குமே தேவன் ஜனங்களை கள்ள உபதேசத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லவில்லை. இன்று சத்தியம் சரியாக பிரசங்கிக்கப் படாததால் தான் கள்ள உபதேசங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. சத்தியம் ஜனங்களின் மத்தியில் ஆதிக்கம் செலுத்தத் தக்க்தாக பூமியை சத்தியத்தால் நிரப்ப வேண்டும். இதற்கு தான் இன்று ஆட்கள் தேவை. தீமையை நன்மையினாலே தான் வெல்ல வேண்டும் மற்றபடி நாம் தீமையினாலே வெல்லப் படுவோம் என்று அஞ்சுகிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளிப்படுத்தின விசேஷம் 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
@stephenjeyapaul2664 Жыл бұрын
Please read the church history; the Godly men like John way cliff, John Huss …Martin Luther openly revolted against the Pope and traditions; we could read scripture in our mother tongue because of the foundation laid by John way cliff. Today in the Christian world the name of our Lord Jesus Christ and the Holy Spirit is misused and blasphemed by these self styled merchants. It’s time we openly name them and warn them as the scripture also commands us to do so.
@stephenjeyapaul2664 Жыл бұрын
When we find that a preacher is preaching twisted gospel, it’s necessary to confront him with his error. But why the Christian world looked on when DGS Dhindharan preached prosperity gospel!
@firstbaptistmdu Жыл бұрын
Yes, but privately with him not in KZbin
@stephenjeyapaul2664 Жыл бұрын
@@firstbaptistmdu there was no KZbin then!
@stephenjeyapaul2664 Жыл бұрын
1திமோத்தேயு 1:”18 குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. 19 இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். 20 இமெனெயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.” 3யோவான்:”9 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. 10 ஆனபடியால் நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிருபைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.” அப்போஸ்தலர்கள் பெயரை குறிப்பிட்டு பொதுவெளியில் எச்சரிக்கை செய்வது வெளிப்படை.
@clemjas Жыл бұрын
@@stephenjeyapaul2664 இந்த வசனம் இருக்கும் அந்த புத்தகம் இரண்டுமே தனி நபருக்கு எழுதப்பட்டது, சபைக்கு அல்ல.
@stephenjeyapaul2664 Жыл бұрын
@@clemjas தனி நபருக்கு எழுதப்ட்டாலும், பொதுவான நிருபங்கள் என்றாலும் ஆவியானவர் நமக்கு தரும் பணி இவர்களை அடையாளம் காட்டி இவர்களை விட்டு விலகு. வெளி 2:”12 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; 13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். 14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. 15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். 16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். 17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” (நிக்கொலாய் - அப்போஸ்தலர் 6:5 பார்க்கவும், கேள்விக்குறியது!)
@akilananbu9239 Жыл бұрын
சகோதரன் என்று சொன்னது தன் உடன்பிறப்பை சொன்னது அப்படினு நினைக்கிறேன்
@firstbaptistmdu Жыл бұрын
சபையில் உள்ள விசுவாச சகோதர்களை தான் கர்த்தர் குறிக்கிறார். அதனால் தான் அவன் கீழ்படியாமல் போகும் போது சபைக்கு தெரிவிக்கச் சொல்லுகிறார்.
@anandarajjohn9204 Жыл бұрын
IN CHRIST WE ARE ALL BROTHERS AND SISTERS ALSO WE ARE ALL IN CHRIST JESUS BODY.
@akilananbu9239 Жыл бұрын
மத்தேயு 18 :15. படிக்கவும் தன் சகோதரன் அப்படினுதான் சொல்லிருக்கு
@akilananbu9239 Жыл бұрын
யூதாஸ்சை ஆண்டவர் எல்லா சீடர் முன்னாடிதான் னே சொன்னார்
@firstbaptistmdu Жыл бұрын
அந்த பகுதியை கவனமாக வாசித்தால் பரிந்து கொள்ள முடியும். கர்த்தர் பேசினது யூதாசுக்கும் அவருக்கும் மட்டுமே புரிந்தது. மற்ற சீஷர்களுக்கு விளங்க் கொள்ளவே இல்லை. ஆண்டவர் யூதாசை நோக்கி நீ செய்ய வேண்டியதை சீக்கிரமாக செய் என்று சொன்ன போது மற்ற சீஷர்கள் யூதாசுக்கு ஏதோ வேலை கொடுத்து அனுப்புகிறார் என்று எண்ணினார்கள்.
@clemjas Жыл бұрын
அவர் தண்ணித்து எத்தனை முறை கடிந்து கொண்டார் என்று நமக்கு தெரியாது.... அவர் அவனை கடிந்து கொண்போது சீடர்கள் மட்டும் தான் இருந்தார்கள் வேரு யாரும் இல்லை.... கேத்சமனே தோட்டத்தில் அவனை கடிந்து கொள்ளவில்லை... அவனுக்காக வேதனை தான் பட்டார்....
@akilananbu9239 Жыл бұрын
அந்த சம்பவத்தை பைபில் ல எழுதவச்சி எல்லோருக்கும் தெரிய படுத்திருக்கார் ஆண்டவர்