அடியேன் எழுதிய பாடலை உலகறிய செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான் , பாடலைச் சிறப்பாகப் பாடிய கோல்ட் தேவராஜ் மற்றும் think divine குழுவிற்கு நன்றி மலர்கள் பல 💐💐💐💐💐💐💐💐
3:34 முருகன் சுப்ரபாதம் பாடலில் ஜிப்ரான் அவர்கள் கந்தர் அலங்காரப் பாடல் சேல்பட்டு அழிந்தது என்ற பாடல் போல ஒரு பாடல் வேண்டும் என்று கூறியதால் உருவான வரிகள் சேல்மீனின் கண்ணுடைய தெய்வானை மணவாளா மால்வைத்து மலர்தூவி வணங்குமடி யவர்தலைமேல் கால்வைத்துப் பிரம்மாவின் கையெழுத்தை அழிப்பவனே வேல்விட்டுத் தானவரை வென்றவனே எழுந்தருள்வாய் கந்தர் அலங்காரம் பாடல் 👇 சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே
அருமை ❤️❤️❤️❤️ என்னுடையவனின் அருள் எல்லா பக்த அடியார்களுக்கும் கிடைக்க வேண்டும். ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sgmuser13 күн бұрын
என்னுடையவன் kooda
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@manigandandevarajan17413 күн бұрын
பாடல் அருமை. பாடல் உருவாக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். முருகன் அருள் புரிவாராக. முருகா சரணம் . @thangavel வாழ்த்துகள் நண்பா
@DEIVAPPUGAZHSHORTS9 күн бұрын
நன்றி நண்பா ❤
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்9 күн бұрын
முருகா முருகா வெற்றிவேல் முருகா சரணம் சரணம் சரணம்
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@ManiKandan-sx7ut12 күн бұрын
Murugaa 🙏
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@DEIVAPPUGAZHSHORTS13 күн бұрын
முருகா சரணம் 🙏
@emayavaramban937313 күн бұрын
முருகா ❤🙏🏽🤩
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@DEIVAPPUGAZH13 күн бұрын
2:21 திருமகளை மணம்புரிந்த திருமாலே மெச்சுகிற மருமகனே மகிமைமிகு மருதமலை மன்னவனே கருணைமிகுக் கடவுளெனக் கற்றறிந்தோர் போற்றுகிறத் திருத்தணியில் திகழ்பவனே திருமுருகா எழுந்தருள்வாய் (6) விளக்கம் இலக்குமி தேவியைத் திருமணம் புரிந்த திருமால் புகழ்ந்து போற்றும் மருமகனே! மகிமைமிக்க மருதமலையை ஆளும் மன்னவனே! கருணையே வடிவான கடவுள் முருகப் பெருமான் என்று நன்கு கற்றறிந்த சான்றோர்கள் போற்றும் திருத்தணியில் விளங்கும் திருமுருகப் பெருமாளே எழுந்தருள்வாயாக! கொக்கரித்துப் போர்புரிந்த கொடுஞ்சூரன் கடல்புகுந்து கொக்கெனவே நின்றிடவே கூர்வேலை விடுத்துவென்று கொக்கரிக்கும் சேவலினைக் கொடியனவே பெற்றவனே சிக்கலுறை சிங்காரா சிவசுதனே எழுந்தருள்வாய் (7) அருஞ்சொற்பொருள் கொக்கரித்தல் - சூரனின் ஆவேசம், சேவல் கொக்கரிக்கும் ஓசை கொக்கு - மாமரம் விளக்கம் கூச்சலிட்டுப் போர் புரிந்த கொடும் சூரபத்மன் முருகனைக் கண்டு பயந்து கடலில் புகுந்து எஃகு மாமரமாகத் தலைகீழாக நிற்க, கூரிய வேலாயுதம் விட்டு மாமரத்தை மயில்வாகனம் ஆகவும், சேவல் கொடியாகவும் போரில் வெற்றி பெற்ற வீரனே! சிக்கலில் வீற்றிருக்கும் சிங்காரவேலனே சிவபெருமான் மகனே எழுந்தருள்வாயாக! வள்ளிபடர் வளமான வள்ளிமலை மேவிவளர் வள்ளியுடன் வாழ்பவனே மால்மருகா முருகோனே கள்ளமிலா அடியாரைக் காத்தருளும் காங்கேயா புள்ளிமயில் தனிலேறும் பெருமாளே எழுந்தருள்வாய் (8) விளக்கம் வள்ளிக்கொடி படர்ந்த வளமான வள்ளிமலை வாழும் வள்ளியுடன் இனிது வாழ்பவனே! திருமால் மருமகனே! கள்ளம் கபடம் இல்லாத அடியார்களைக் காக்கும் கங்கையின் மைந்தனே புள்ளிமயில் மீதேறும் முருகப் பெருமானே எழுந்தருள்வாயாக! சேல்மீனின் கண்ணனுடைய தெய்வானை மணவாளா மால்வைத்து மலர்தூவி வணங்குமடி யவர்தலைமேல் கால்வைத்து பிரம்மாவின் கையெழுத்தை அழிப்பவனே வேல்விட்டு தானவரை வென்றவனே எழுந்தருள்வாய் (9) மால் - அன்பு, தானவர் - பகைவர் விளக்கம் சேல் மீன் போன்ற கண் கொண்ட தெய்வானையின் கணவா , உன் மேல் அன்பு வைத்து மலர் தூவி வணங்கும் அடியார்களின் தலைமீது கால் வைத்து பிரம்மா எழுதிய கை எழுத்தை அழிப்பவனே, பகைவர்கள் மீது வேலாயுதம் செலுத்தி வெற்றி பெற்றவனே எழுந்தருள்வாயாக ! எழுந்தருள்வாய் வெட்சியணி எழில்மார்பா எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேலுடைய எம்பெருமான் எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் குருபரனே எழுந்தருள்வாய் பரம்பொருளே எழுந்தருள்வாய் சரவணனே எழுந்தருள்வாய் சண்முகனே (9) அருஞ்சொற்பொருள் செச்சை - வெட்சி மலர் விளக்கம் வெட்சி மலர் மாலையை அணிந்த அழகிய மார்பனே எழுந்தருள்வாயாக! வேலாயுதம் ஏந்திய எம் ஆண்டவனே எழுந்தருள்வாயாக! குரு பரனே பரம்பொருளே எழுந்தருள்வாயாக சரவணனே சண்முகனே எழுந்தருள்வாயாக !
@r.rjegan362613 күн бұрын
Kandha Kumara engalai kaathu arulum ❤
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@DEIVAPPUGAZH13 күн бұрын
முருகன் சுப்ரபாதம் கலிவிருத்தம் வந்துதித்தாய் திருமுருகா மதிச்சடையன் திருமகனாய் வந்துதித்தான் சூரியனே வானெங்கும் ஒளிபரவச் செந்தமிழில் திருப்புகழைச் செப்புமிசை கேட்டிலையோ ? செந்திநகர் மேவிவளர் சேவகனே எழுந்தருள்வாய் (1) அருஞ்சொற்பொருள் மதிச்சடையன் - சிவபெருமான், சேவகன் - முருகன் செந்திநகர் - திருச்செந்தூர் விளக்கம் சந்திரனைச் சடையில் அணிந்த சிவபெருமானுக்கு மகனாகப் பிறந்த முருகப் பெருமானே, சூரியன் வான் எங்கிலும் ஒளி வீசும்படி உதித்துவிட்டான். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழைப் பத்தர்கள் பாடுவது கேட்கவில்லையா ? திருச்செந்தூரில் வீற்றிருந்து மக்களைக் காப்பவனே முருகா எழுந்தருள்வாயாக! செஞ்சேவல் கொக்கரிக்கக் செஞ்சுடரோன் தானுதிக்கக் கொஞ்சுமொழி மங்கையர்கள் கூடியிசை பாடினரே குஞ்சரியைப் பொழில்திகழும் குன்றினிலே மணந்தவனே தஞ்சமென உனையடைந்தோம் தமிழ்ச்செல்வா எழுந்தருள்வாய் (2) அருஞ்சொற்பொருள் குஞ்சரி - தெய்வானை , பொழில் திகழும் குன்று - சோலைகள் நிறைந்த திருப்பரங்குன்றம் விளக்கம் செம்மை நிறம் கொண்ட சேவல் கொக்கரித்த பின்னர் சிவந்த நிறத்தில் கதிரவன் உதிக்கும் நேரத்தில், கொஞ்சும் மொழி பேசும் மங்கையர்கள் கூடி , முருகா உன்னைப் போற்றி இசையுடன் பாடினார்களே! தெய்வானையைச் சோலைகள் நிறைந்த திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்தவனே ! சரணாகதி என்று உன்னைநாடி வந்துள்ளோம் தமிழின் தவப்புதல்வா முருகா எழுந்தருள்வாயாக! தேவாதி தேவரெல்லாம் தென்பழனி வந்தடைந்து பூவாலே அர்ச்சித்துப் பூபாள இராகத்தில் நாவார வாழ்த்தினரே ஞானசம் பந்தரெனத் தேவாரம் தந்தவனே சிவகுமரா எழுந்தருள்வாய் (3) விளக்கம் முப்பது முக்கோடி தேவர்கள் அனைவரும் தென்பழனிமலைக்கு வந்து மலர்களால் அர்ச்சனை செய்து காலைப்பொழுதுக்கு உரிய பூபாளம் இராகத்தில் உன்னை நாவார வாழ்த்திப் பாடினார்களே! திருஞானசம்பந்தராக வந்து தேவாரம் தந்த சிவனின் குமரா முருகா எழுந்தருள்வாயாக! சரவணத்தில் பலவண்ணத் தாமரைகள் பூத்தனவே சரவணத்தில் உதித்தவனே சண்முகனே முருகேசா அரனவர்க்குக் குருமலையில் அருமறையை மொழிந்தவனே சிரகிரியில் வாழ்பவனே சிக்கிரம்நீ எழுந்தருள்வாய் (4) அருஞ்சொற்பொருள் குருமலை - சுவாமிமலை, சிரகிரி - சென்னிமலை விளக்கம் சரவணப் பொய்கையில் தோன்றியவனே ஆறுமுகப் பெருமாளே, முருகா, சிவபெருமானுக்குச் சுவாமி மலையில் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசம் செய்தவனே! சென்னிமலையில் வாழும் முருகப் பெருமானே சீக்கிரம் நீ எழுந்தருள்வாயாக! நதிமூழ்கி அடியார்கள் நற்காலைப் பொழுதினிலே பதிகங்கள் பாடினரே பழச்சோலை மலைக்குமரா மதிசூடும் சிவனாரின் மகனெனவே உதித்தவனே விதிமாற்ற வல்லவனே வேலவனே எழுந்தருள்வாய் (5) அருஞ்சொற்பொருள் பழச்சோலை - பழமுதிர்சோலை மதி- சந்திரன் விளக்கம் நல்ல காலைப்பொழுதில் அடியார்கள் நதியில் நீராடிப் பதிகங்கள் பாடினார்களே! பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் குமரா! சந்திரனைச் சடையில் அணிந்த சிவபெருமான் மகனே, தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்த வேலவனே எழுந்தருள்வாயாக!
@saravananekambaram325412 күн бұрын
அருமை , ஓம் சரவண பவ.
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@kanchitnpscmathsaptitudesure2512 күн бұрын
அருமை அருமை. சிறப்பு. தங்களது இறைப்பணி தொடரட்டும்
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@naveenrajkumar889313 күн бұрын
Thank you divine for this Murugan Suprabatam❤❤❤
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@AMBALAWAANAATV14 күн бұрын
நன்றிகள் 💐
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@SuryaH-u1o13 күн бұрын
அருமை 👏👏👏👏
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@DEIVAPPUGAZHSHORTS8 күн бұрын
10:14 தினம் முருகன் சுப்ரபாதம் கேட்பதால் ஏற்படும் பலன் விருப்போடு காலையிலே விழித்தெழுந்து திருமுருகன் திருப்பள்ளி யெழுச்சியினைத் தினந்தோறும் கேட்போர்கள் ஒருப்பட்ட மனத்துடனே ஓதிடுவோர் வளம்பெறவே முருகோனே எழுந்தருள்வாய் முத்தையா எழுந்தருள்வாய் விளக்கம் விருப்பத்துடன் தினமும் காலையில் விழித்தெழுந்து திருமுருகன் திருப்பள்ளி எழுச்சியினைக் கேட்பவர்கள் ஒரு மனதுடன் ஓதுபவர்கள் எல்லா வளங்களும் பெற முருகப்பெருமானே முத்தையனே எழுந்தருள்வாயாக.
@LifeofSai913 күн бұрын
Please make it Telugu version too ❤ I am requesting you guys
@dr.a.govindaraju450513 күн бұрын
மிகச் சிறப்பு
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
மிக்க நன்றி ஐயா முருகா சரணம் 🙏
@rajendranr163513 күн бұрын
அருமை அருமை. ❤❤🎉🎉
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@sssvragam13 күн бұрын
சிறப்பு அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி ஐயா முருகா சரணம் 🙏
@muralithasanmoorthy383213 күн бұрын
அருமை 👌👍
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@srk836013 күн бұрын
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@gopinaths254313 күн бұрын
We will expecting more devotional songs ( Thirupugazh,amman songs,etc) from Devine.
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@subbu810013 күн бұрын
Divine and Melody... Mesmerizing voice❤
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@pragathishs128013 күн бұрын
Thank you Think divine !
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@ajaybouri218011 күн бұрын
🔱🙏❤️🙏🕉️
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@DOLCEMusic-bp1px13 күн бұрын
சிறப்பு
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி ஐயா முருகா சரணம் 🙏
@VinothKumar-ly8eh13 күн бұрын
Thank you ghibran sir🙏 😢& Excellent composing ❤...
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@Gk_edits_official12 күн бұрын
So nice ,very good and authentic lyrics
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@swaminathanm18513 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@sgmuser13 күн бұрын
Divine!
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@shanmugamd529714 күн бұрын
அருமை... அற்புதம்...
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@gopinaths254313 күн бұрын
Very nice, short & Sweet.
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@Falco_perigee13 күн бұрын
அனைவருக்கும் அனைத்துக்கும் அனைபிற்க்கும் அன்பிற்கும் நன்றி ❤
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@vishnu.mvishnu.m570911 күн бұрын
Supet
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@sathiyarajdamodaran717713 күн бұрын
Superb bro
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம்
@wildroads985113 күн бұрын
Thank u Gib😊
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
முருகா சரணம் 🙏
@DEIVAPPUGAZH13 күн бұрын
4:17 ஸ்ரீ முருகன் சரணம் கலிவிருத்தம் திருவே உருவாய் திகழ்வே லவனே திருமால் மருகா சிவசண் முகனே உருகிப் பணிய உயர்வைத் தருவாய் அருணா புரிவாழ் அழகா சரணம் (1) விளக்கம் அழகே உருவாய் திகழும் வேலவனே திருமாலின் மருமகனே சிவசண்முகனே என்று உருகிப் பணிய உயர்வைத் தருவாயே திருவண்ணாமலையில் வாழும் அழகனே சரணம் பச்சை மயில்மேல் பறந்தே மகிழும் செச்சை அணியும் செவ்வேள் முருகா அச்சம் அகற்றி அருளைத் தருவாய் கச்சிப் பதிவாழ் கந்தா சரணம் (2) விளக்கம் பச்சை நிற மயில் மேல் பறந்து மகிழும் வெட்சி மலர் மாலையை அணியும் செவ்வேளே முருகா அச்சம் அகற்றி உன் அருளைத் தருவாயே கந்தம் கமழும் கழலை உடையோய் மந்தா கினியின் மைந்தா குமரா சிந்தைக் கெட்டாச் செல்வம் அருள்வாய் கந்தன் குடிவாழ் கடம்பா சரணம் (3) அருஞ்சொற்பொருள் மந்தாகினி - கங்காதேவி விளக்கம் மணம் வீசும் திருவடிகளை உடையவனே கங்கை மைந்தனே குமரனே! உன்னை வணங்கும் அடியார்களுக்கு சிந்தனைக்கு எட்டாத வகையில் எல்லா வகையான செல்வங்களை அருள்வாயே கந்தன்குடியில் வாழும் கடம்பனே சரணம் பத்தர்க் கருளும் பரமேஸ் வரனாம் சித்தன் சிவனின் செல்வக் குமரா முத்துக் குமரா முத்தி அருள்வாய் பத்து மலைவாழ் பரமா சரணம் (4) விளக்கம் பக்தர்களுக்கு அருள் புரியும் பரமேஸ்வரன், சித்தன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவனின் செல்வ மகனே முத்துக்குமரனே முத்தி அருள்வாயே ! பத்துமலையில் வாழும் பரமாத்மாவேசரணம் கலக்கம் கொண்டக் கண்ணா யிரனின் குலத்தைக் காத்த குலிசா யுதனே நலத்தை நீயே நாளும் அருள்வாய் இலஞ்சிக் குமரா இறைவா சரணம் (5) அருஞ்சொற்பொருள் கண்ணாயிரன் - இந்திரன் குலிசாயுதன் - முருகன் குலிசம் என்பது முருகப் பெருமான் தன் பன்னிரு கைகளில் ஒன்றில் தாங்கியுள்ள ஓர் ஆயுதம். இவ்வாயுதத்தைக் கொண்டே பெருமான், சூரபத்மனின் தம்பியாகிய சிங்கமுகன் எனும் அசுரனை வதம் செய்தார். குலிசம் எனும் ஆயுதத்தை வைத்திருப்பதால், முருகன் ‘குலிசாயுதன்’ என்றழைக்கப்படுகிறார். குலிசம் (வஜ்ராயுதம்) இந்திரனுடைய ஆயுதமும்கூட. விளக்கம் கலக்கம் கொண்ட இந்திரனின் குலத்தைக் காத்த குலிசாயுதனே ! நீயே எனக்கு நன்மையை நாளும் அருள்வாயே இலஞ்சிப்பதியில் வாழும் குமரனே இறைவனே சரணம்
@pragathishs128011 күн бұрын
please make same like this song for thirupalliyarai poojai(thalattu) for murugan
@DEIVAPPUGAZHSHORTS11 күн бұрын
முருகன் தாலாட்டு எழுதி இசையமைப்பாளரிடம் அனுப்பியுள்ளேன், இன்னும் சில சுப்ரபாதம் வெளியான பிறகு முருகன் அருளால் வெளிவரும்.
@pragathishs12809 күн бұрын
Thank you @DEIVAPPUGAZHSHORTS
@gardenguru23347 күн бұрын
Who did the artwork of Lord Muruga for this video? Beautiful!! Please give them credit as well.
@DEIVAPPUGAZHSHORTS5 күн бұрын
நன்றி முருகா சரணம் 🙏
@darshanheda13 күн бұрын
Please double subtitles
@SathishKumar-w6s13 күн бұрын
Female version would be much better
@sendhilvelansomasundaram920412 күн бұрын
We used to hear that.
@DEIVAPPUGAZHSHORTS8 күн бұрын
8:07 ஸ்ரீ முருகன் மங்கலம் வஞ்சித்துறை: திருவிருக்குக்குறள் ஐங்கரனுக் கிளையவனே தங்கமயில் வாகனனே கொங்கிலுறை காங்கேயா செங்கையனே மங்கலங்கள் (1) அருஞ்சொற்பொருள் கொங்கு - கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி ஆகியவையும் திண்டுக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சில பகுதிகளையும் கொங்கு மண்டலம் . விளக்கம் விநாயகர் பெருமானுக்கு இளையவனே தங்க மயிலை வாகனமாகக் கொண்டவனே கொங்கு மண்டலத்தில் வாழ்பவனே சிவந்த கையை உடைய முருகப்பெருமானே உனக்கு மங்கலம் உண்டாக்கட்டும். சத்திமிகுச் சரவணனே உத்தமனே வேலவனே முத்துமலை உறைபவனே முத்தையனே மங்கலங்கள் (2) விளக்கம் சக்திமிக்க சரவணப் பெருமாளே உத்தமனே வேலவனே முத்துமலையில் வீற்றிருக்கும் முத்தையனே உனக்கு மங்கலம் உண்டாகட்டும். அருணகிரிக் கருள்புரியும் கருணைமிகுக் குமரேசா திருமயிலம் வாழ்பவனே திருமுருகா மங்கலங்கள் (3) விளக்கம் அருணகிரிநாதருக்கு அருள் புரியும் கருணைமிக்க குமரேசனே திருமயிலத்தில் வாழும் திருமுருகப் பெருமானே உனக்கு மங்கலம் உண்டாகட்டும் பச்சைநிறத் திருமார்பன் மெச்சுகிற மருகோனே பச்சைமலை உறைபவனே செச்சையனே மங்கலங்கள் (4) விளக்கம் பச்சை நிற திருமார்பை உடைய திருமால் புகழ்கின்ற மருமகனே பச்சை மலையில் உறைபவனே வெட்சி மாலை அணிந்தவனே உனக்கு மங்களம் உண்டாகட்டும் துதிபாடும் அடியாரின் விதிமாற்ற வல்லவனே கதிர்காமப் பதிவாழும் கதிர்வேலா மங்களங்கள் (5) விளக்கம் முருகா உன்னைப் போற்றி வழிபடும் அடியார்களின் விதியை மாற்ற வல்லவனே கதிர்காமப் பதியில் வாழும் கதிர்வேலனே உனக்கு மங்கலம் உண்டாகட்டும் தண்டரள மணிமார்பா தண்டமிழின் மிகுநேயா எண்கணுறை முருகோனே சண்முகனே மங்கலங்கள் (6) அருஞ்சொற்பொருள் தண் - குளிர்ந்த தரளம் - முத்து விளக்கம் குளிர்ந்த முத்து மாலையை அணிந்த மார்பனே இனிய தமிழ் மீது நேசம் கொண்டவனே எண்கண் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானே சண்முகனே உனக்கு மங்களம் உண்டாகட்டும் மயிலேறும் பெருமாளே அயிலேந்தும் குமரேசா வயலூரில் உறைவோனே செயபாலா மங்கலங்கள் (7) அருஞ்சொற்பொருள் அயில் - வேலாயுதம் விளக்கம் மயிலேறும் பெருமாளே வேலாயுதம் ஏந்தும் குமரனே வயலூரில் வீற்றிருக்கும் ஜெயபாலனே உனக்கு மங்கலம் உண்டாகட்டும் அவனியினை நொடியினிலே பவனிவரும் மயில்வீரா சிவன்மலையில் உறைபவனே சிவகுமரா மங்கலங்கள் (8) விளக்கம் உலகத்தை ஒரு நொடியில் சுற்றி வரும் மயில்வீரனே சிவன்மலையில் வாழும் சிவ குமரனே உனக்கு மங்கலம் உண்டாகட்டும் வாரணர்க் கிளையவனே நாரணன் மருகோனே தோரண மலைவாழும் வீரனே மங்கலங்கள் (9) அருஞ்சொற்பொருள் வாரணம் - விநாயகர் விளக்கம் விநாயகப் பெருமானுக்கு இளையவனே திருமாலின் மருமகனே தோரணமலையில் வாழும் வீரனே உனக்கு மங்கலம் உண்டாகட்டும் மங்கலங்கள் மயில்வீரா மங்கலங்கள் குமரேசா மங்கலங்கள் முருகோனே மங்கலங்கள் பெருமாளே (10)