#HealthMinister

  Рет қаралды 69

Nellai Timesnow

Nellai Timesnow

Күн бұрын

உலகத்திலேயே தமிழகத்தில் தான் கொரோனா சிகிச்சைக்கான முன்மாதிரி கட்டமைப்பை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. 61 ஆயிரம் பேர் யோகா,சித்தா போன்ற சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என நெல்லையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் . மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றை சுகாதராத்துறை அமைச்சர் கேட்டறிந்தார் . மேலும் நோய் தடுப்பிற்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் காணொலிக்காட்சி மூலம் நலம் விசாரித்த அவர் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார். அதுபோன்று கொரோனா வார்டில் பணியில் உள்ள மருத்துவர்கள் , செவிலியர்களிடமும் பேசினார்.
ஆய்வுக் கூட்டத்தை முடித்துக்கொண்ட அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள், உயர் அதிகாரிகளோடு விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. காணொளி காட்சிமூலம் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடியது நம்பிக்கை அளிக்ககூடியதாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் 1265 நபர்கள் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர், 1226 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் 1100 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் ஏற்படுத்தி கோவிட் மருத்துவமனையாக நெல்லை மருத்துவகல்லூரி மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்வது கண்டு பொதுமக்கள் பயம் பதட்டம் அடைய வேண்டாம் பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவை அவசியமாக உள்ளது. 385 கிராமபுற மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 30 படுக்கைகளுடன் மருத்துவமனை தயாராக உள்ளது. 50% நுரையீரல் பாதிப்பு இருந்த நபர்கள் நோய் தொற்று இருப்பவரையும் குணபடுத்த முடியும். 43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வரவழைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட உள்ளது. இது கொரனா பரிசோதனைக்கு பயனுடையதாக இருக்கும். ஒருங்கிணைந்த மருத்துவ முறையான சித்தா ,அலோபதி,ஆயுர்வேதம், யுனானி, யோகா போன்ற சிகிச்சை முறைகளால் நோய் தொற்று கட்டுபடுத்தப்பட்டு வருகிறது .61 ஆயிரம் பேர் யோகா மற்றும் சித்தா சிகிச்சையால் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கண்,உடல்,ரத்தம் போன்றவை தானமளிப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை போல் பிளாஸ்மா சிகிச்சைக்கான தானத்திலும் தமிழகம் முதலிடம் பெறும்.ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல் படியே டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதில்லை.உலகத்திலேயே தமிழகத்தில் தான் கொரனா சிகிச்சைக்கான முன்மாதிரி கட்டமைப்பு ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் பூரண சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்

Пікірлер
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 935 М.
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН