டேடி ஆறுமுகம் ஹோட்டல் | Daddy Arumugam Hotel | Life | Hello Madurai | App | TV | FM | Web |

  Рет қаралды 17,248

Hello Madurai

Hello Madurai

Күн бұрын

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் எனும் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்தவர்தான் ஐயா ஆறுமுகம் என்பவர். இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் ஆகும். இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என தனது மனைவி செல்வியுடன் வறுமையில் வாடியபடி குடும்பத்தை நகர்த்தியுள்ளார்.
இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் இரவு முழுவதும் பணியாற்றியுள்ளார். எப்பொழுது தங்களின் வாழ்க்கை வறுமை பிடியில் இருந்து விலகும் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளும் கடந்துள்ளனர் ஆறுமுகத்திடன் குடும்பத்தினர்.
சொந்த ஊர் போடி ஜக்கம்ம நாயக்கன்பட்டியில் ஹோட்டல் 'மாமியா' என ஹோட்டல் ஆரம்பித்துள்ள ஆறுமுகம், அதிலும் நஷ்டத்தையே சந்தித்துள்ளார். நீண்ட நாட்களாக பெயிண்டராக பணிபுரிந்துள்ளார். சில நபர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பெயிண்டிங்கில் கிடைக்கும் வருமானத்தையும், மனைவியின் வருமானத்தையும் வைத்துக் கொண்டு மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது குடும்பம் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்துள்ளது.
இன்னும் சற்று காலம் பின்னோக்கிச் சென்றால், ஐயா ஆறுமுகம், சிறு வயதில் மிக மோசமான வறுமையின் காரணமாக ஆறாம் வகுப்பு படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
பார்க்காத வேலையில்லை. பெயிண்டராக, குடை ரிப்பேர் செய்பவராக, ஏலக்காய் தோட்டத்தில் எனக் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்திருக்கின்றார். இந்த வறுமையிலிருந்து விடுபட சினிமா முயற்சிகளைக் கூடச் செய்திருக்கிறார். ஆனால் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியே.
15 ஆண்டுகளுக்கு முன்பாக வறுமையின் காரணமாக சொந்த ஊரைவிட்டு, பிழைப்பு தேடி திருப்பூருக்குச் சென்றுள்ளனர் ஆறுமுகத்தின் குடும்பத்தினர். அங்குதான் அவரது மனைவி செல்வி அவர்கள் டெய்லரிங் வேலை இரவு,பகலாக பார்த்து தனது குழந்தைகளை படிக்கவைத்துள்ளார்.
முதல் மகன் கோபி கல்லூரி படிப்பை முடித்து, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 5 ஆண்டுகள் கடுமையாக போராடியுள்ளார். கல்லூரியில் இயக்குனர் என்ற பெயருடன் கவிதை, கதை என வலம்வந்துள்ளார். ஆனால் சென்னையில் கோடம்பாக்கத்தில் இரண்டு நாள் கூடு சாப்பிடாமல் இருந்துள்ளார். ஆனால் அருக்கான வாசல் கதவுகள் எதுவுமே திறக்கவில்லை.
சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோ அருகில் வாடகைக்கு இருந்துள்ளார். வாடகை கட்ட முடியாத நிலையில்,ஒரு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது, 5டி கேமராவில் எடுத்தபோதும், அந்த திரைப்படம் வெளிவராத நிலையானது. பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு குடும்பத்துடன் மீண்டும் தனது சொந்த ஊரான போடிக்கு ஆறுமுகம் ஐயா குடும்பம் வந்தடைந்தது. சினிமா கனவு தோல்வி, தொடர் வறுமை, என்ன செய்வது சொந்த ஊரில் ? இப்படி கேள்விகள் அடுக்கடுக்காய் எதிரே நிற்க ? ஆறுமுகம் டேடி வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட்டரி யை துவங்கியுள்ளார்.
மூத்த மகன் கோபி அவர்கள்தான் இதற்கான ஐடியா கொடுத்து, இதை துவங்குங்கள் அப்பா, நீங்கள்தான் கதாநாயகன் என்று கூறியுள்ளார். ஆனால் ஐயா ஆறுமுகத்திற்கு இதன் மீது நம்பிக்கை இல்லை. மகன் சொல்கின்றான் அவனது ஆசைக்காக செய்ய வேண்டும் என்றே டேடி ஆறுமுகம் என்ற பெயரில் தோன்றியுள்ளார் யூடுப்பில், முதல் வருமானமாக ரூ.7,000 கிடைத்துள்ளது. அடுத்ததாக ரூ.40,000 கிடைத்துள்ளது. அதன் பிறகு லட்சங்களை தொட்டுள்ளது. ஆறுமுகம் ஐயா அப்பொழுதுதான் நம்பத் துவங்கினார்.
இன்றைக்கு மதுரையில் டேடி ஆறுமுகம் என்ற பெயரில் இரு ஹோட்டல்களை (பெரியார், தல்லாகுளம்) திறந்துள்ளார். இந்த நிலை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தன் மூத்த மகன் கோபிநாத் என்று கூறுகின்றார். அன்றைக்கு சமையலை யூடுப்பில் அப்லோடு செய்யும்போது, இது ஒரு பிழைப்பா என்று கேட்டவர்கள், பார்த்தவர்கள் எல்லோரும் வாயடைத்துப் போகும் அளவிற்கு, மொழிகளைக் கடந்து உலகம் முழுவதும் புகழ் அடைந்துள்ளார் டேடி ஆறுமுகம்.
ஏன், நான் கூட, ஒரு காலத்தில் யூடுப்பில் சேனல் நடத்துவதெல்லாம் ஒரு விசயமா ? என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மூன்று ஆண்டு காலம் நான் நடத்தி வந்த ஹலோ மதுரை எனும் மாத இதழ் பத்திரிக்கை தொழில் சரிவைச் சந்திக்கவே, இன்றைக்கு ஐயா ஆறுமுகத்தை என்னுடைய ஹலோ மதுரை யூடுப் சேனலுக்காக நேரில் சென்று பார்த்த பொழுதுதான் அதை உணர்ந்து கொண்டேன். ஒரு கிராமத்தில் இருந்த வரை உலகம் அறிய வைப்பதோடு மட்டுமின்றி குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது என்றால் அதிலும், நேர்மை, கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவையே காரணம்.
இன்றைக்கு யூடுப்பில் சம்பாரிப்பது என்பது ஒரு பெரிய விசயம்தான். ஆனால் நல்ல விசயங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் நிச்சயமாக ஒரு நாளில் வெற்றி மாலையாக நம் தோள்களில் விழும் என்பதற்கு டேடி ஆறுமுகம் குடும்பமே சாட்சி.
முக்கியமாக நாம் பேட்டி எடுக்கச் சென்று இருந்த நேரத்தில் ஐயா டேடி அன்றைய தினத்தில் இல்லை. அவரது மகன் கோபி நம்மிடம் பேசி, அடுத்த இரு நாட்களில் ஐயாவை தல்லாகுளம் கிளையில் வரச் சொல்லி நேர்காணலுக்கு ஏற்படு செய்து கொடுத்தார். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நன்றியையும், எங்களது வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கின்றோம். அதேபோல் தல்லாகுளம் உணவகத்தில் பணி புரியும் மேலாளர் பாலா அவர்கள் உட்பட அனைவரும் நட்பு ரீதியாக பழகியவிதம் மகிழ்வைத் தந்தது.
இங்கு நாங்களும் சாப்பிட்டுப் பார்த்தோம். உணவு மிகவும் தரமாக இருந்தது. அதை சொல்லி தெரியவைக்க முடியாது. உணர்ந்தால் மட்டுமே புரியக் கூடியது. கிராமத்து முறையில் பார்த்து, பார்த்து சமைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றனர்.
நிறைய விசயங்களை வீடியோவில் கூற இயலாத காரணத்தால் எழுத்து வடிவில் கொடுத்துள்ளேன், வாசிக்க இயன்றவர்கள், ஐயா-வை வாழ்த்துங்கள். அவரது உணவகத்திற்கு சென்று ஆரோக்கியமான உணவு அருந்துங்கள்.
_________________________________________________________
இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
__________________________

Пікірлер: 6
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 76 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
டாடி ஆறுமுகம் ஹோட்டல் | Village food factory Daddy | DAADDY ARUMUGAM BIRIYANI HOTEL MADURAI ROUND UP
3:49
PANDHIKKU MUNDHU பந்திக்கு முந்து
Рет қаралды 1,5 М.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20