Рет қаралды 6
குடியரசு தலைவர் 25 கோடி மக்களை வறுமைப் பிடியிலிருந்து இந்த அரசாங்கம் மீட்டு இருக்கிறது என்று ஒரு மிகப்பெரிய பொய் சொல்லி இருக்கிறார். எந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் வறுமையை ஒழித்தீர்கள்.? ஏதாவது ஒரு திட்டத்தை மோடி அரசாங்கம் சொல்ல முடியுமா.? என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர்
கே எஸ் அழகிரி பேட்டி.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்டசியின் முன்னாள் தமிழக தலைவர்
கே எஸ் அழகிரி அவர்கள் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் தெரிவித்ததாவது
மத்திய அரசாங்கத்தினுடைய மோடி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் முழுமையாக நான் படித்துப் பார்த்தேன். எதிர்க்கட்சி என்பதற்காக சொல்லவில்லை அதில் என்ன இருக்கிறது என்பதே தெரியவில்லை. ஒரே ஒரு கேள்விக்கு நிதியமைச்சர் பதில் சொல்ல வேண்டும். எளிய மக்களுக்காக அந்த வரவு செலவுத் திட்டத்தில் என்ன இருக்கிறது. இந்த நாட்டில் 80% மக்கள் எளிய மக்கள், உழைக்கிற மக்கள், விளிம்பு நிலை மக்கள் , விவசாயத்தில் இருக்கிறவர்கள், சிறு தொழிலில் இருக்கிறவர்கள். அந்த மக்களுக்காக அந்தப் பெண்களுக்காக அவர்களுடைய மேம்பாட்டிற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் என்ன இருக்கிறது என்பதை யாராவது ஒருவர் சொல்ல வேண்டும். வருமான வரி குறைப்பு என்பது யாருக்கு வாய்ப்பு அளிக்கும் வரியை ஏய்ப்பவர்களுக்குத்தான். மாத சம்பளம் வாங்குகிறவர்கள் வருமானத்தை மறைக்க முடியாது. கண்டிப்பாக அவர்கள் வருமானத்தை காட்டியாக வேண்டும். அவர்கள் எல்லாம் வரி செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் வரி ஏய்ப்பவர்கள் என்ற ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள்தான் தங்களுடைய வருமானத்தை குறைத்து காட்டி, அவர்கள் வரிவசூலில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். இதுதான் இந்த வரவு செலவுத் திட்டத்தின் அம்சம்.
குடியரசு தலைவர் ஒரு மிகப்பெரிய பொய் சொல்லி இருக்கிறார். 25 கோடி மக்களை வறுமைப் பிடியிலிருந்து இந்த அரசாங்கம் மீட்டு இருக்கிறது என்று சொல்லுகிறார். நான் கேட்கிறேன் எந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் வறுமையை ஒழித்தீர்கள்.? ஏதாவது ஒரு திட்டத்தை மோடி அரசாங்கம் சொல்ல முடியுமா.? எப்பொழுதுமே ஒன்று சொல்லனும்னா அதற்கு பின்புலம் இருக்க வேண்டும். நாங்கள் வறுமையை ஒழித்து இருக்கிறோம் என்றால் எந்த திட்டத்தின் மூலமாக ஒழித்தீர்கள். நீங்கள் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் என்பது மன்மோகன்சிங் அரசாங்கம் கொடுத்த ஒரு திட்டம். அதுதான் கிராமப்புற வறுமையை ஒழித்தது. பண மதிப்பை நீங்கள் நீக்குனீர்கள். வேற என்ன நடந்தது விவசாயிகளுடைய வருமானத்தை இருமடங்காக ஆக்குகிறேன் என்று சொன்னீர்கள். ஆக முடியலையே. எங்காவது இந்தியாவுல ஏதாவது ஒரு மாநிலத்துல குஜராத் உட்பட நான் கேட்கிறேன் விவசாயிகளுடைய வருமானம் இரு மடங்காக ஆகி இருக்கிறதா.? 2 கோடி பேருக்கு வேலை தரேன்னு சொன்னீங்க. ஆனா இந்த 10 ஆண்டுகளில் என்ன நடந்தது ஏறக்குறைய ஒரு கோடி பேர் வேலையில் இருந்தவர்களே வேலையை இழந்தார்கள். அரசு நிறுவனங்களில் எங்காவது காலி இடங்களை நீங்கள் நிரப்பி இருக்கிறீர்களா..?
பதினைந்து லட்சம் வரை வரி இலவசம் என்பது ஒரு மிகப்பெரிய பொய். நகர்ப்புற ஏழைகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் அறிவிக்கவில்லை. சீனாவில் சோலார் மின் உற்பத்தியை இலவசமாக அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியதால் தான் அங்கு முன்னேற்றத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கு சோலார் பேனலுக்கான வரியை உயர்த்தி இருக்கிறார்கள். திருக்குறளை படித்ததை தவிர இந்த உரையில் தமிழுக்கோ தமிழர்களுக்கோ தமிழ் நாட்டுக்கோ இந்த அரசு எதுவுமே செய்ய இல்லை. குறைந்தபட்சம் திருக்குறளையாவது இலவசமாக தருகிறேன் என்று நிதி அமைச்சர் கூறி இருக்கலாம். ஆனால் அதை கூட கூறவில்லை. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் மாடுகளைப் போல மக்கள் அடைக்கப்படுகிறார்கள். 60 பேர் பயணிக்க வேண்டிய இடத்தில் 200 பேர் பயணிக்கிறார்கள் இது ரயில்வேக்கு தெரியாதா? ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா.,?மோடிக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் புதிய ரயில் பெட்டிகள் எத்தனை வண்டிகளில் ஓடுகிறது இதனை ரயில்வே அமைச்சர் சொல்ல முடியுமா.?மத்திய அமைச்சர்கள் சொல்ல முடியுமா.?வட இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் தான் இங்குள்ள முதன்மையான ரயில்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் தமிழகம் வேண்டாம் என்கிறார்கள். தென்னிந்தியா வேண்டாம் என்கிறார்கள். வடகிழக்கு பகுதியே வேண்டாம் என்கிறார்கள். இது மிகவும் மோசமான மனநிலை இந்த மனநிலை இந்தியாவுக்கு ஏற்புடையது அல்ல. வெறுப்பு அரசியலை அவர்கள் விதைக்கிறார்கள் அது அவர்களுக்கே நன்மை பயக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வேங்கை வயல் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை சரி. முதலமைச்சரை பொறுத்தவரை முன்கூட்டியே ஒரு கருத்தை மனதில் ஏற்றுக் கொள்வது கிடையாது. எது சரி என்று அவருக்கு தெரிகிறதோ அதை நடைமுறை செய்கிறார். எனவே அதில் ஒரு தவறு நடந்ததாக என்னால் சொல்ல முடியாது. திருமா அவர்களின் கருத்தை முதலமைச்சர் பரிசீலிப்பார் என்றார்
#ksalgiri #alagiri #congress #head #ex #omletarcade #pepole #public #political #politicalnews #politics #government #tamilnadu #tamil #thiruvarur #tvr #news #breakingnews #thiruvarurdistrictnews #திருவாரூர் #tamilnews
@thiruvarurdistrictnews